இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் சென்னை... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Written By:

மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்தின் 2016 இந்தியாவில் நடைபெற்ற விபத்துகள் குறித்த ஆய்வு வெளியாகி நாட்டையே அதிர்ச்சி உள்ளாக்கியது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

ஆனால் அதில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெற்ற நகரமாக சென்னை முதலிடம் பிடித்திருப்பது நம் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

2016ம் ஆண்டில் சென்னையில் மட்டும் 7,486 சாலை விபத்துகள் நடைபெற்று புகார் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் 7,375 சாலை விபத்துகள் நடைபெற்ற நகரமாக இந்திய தலைநகர் டெல்லி உள்ளது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் சென்னை விபத்துகளின் தலைநகரமாக மாறி வருகிறது.

இரண்டாம் இடத்தை டெல்லி வகிக்க, 5,323 சாலை விபத்துகள் நடந்த நகரமாக கர்நாடக தலைநகர் பெங்களூரு மூன்றாவது இடத்திற்கு தேர்வாகிறது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

சென்னை, டெல்லி, பெங்களூரு போன்றவை இந்தியாவின் முக்கிய நகரங்கள். அதனால் மக்கள் கூட்டம், வாகன நெரிசல் என்பது இயல்பாக மிக மிக அதிகம்.

பட்டியலில் இந்தியாவின் இந்த பெரிய நகரங்களுடன் சிறிய நகரமான இண்டோர் முதன்மை வகிப்பது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

கடந்த ஆண்டு இண்டோரில் மொத்தம் 5,143 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை பெங்களூரின் எண்ணிக்கையை விட சொற்ப அளவில் மட்டுமே வேறுபடுகிறது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

இந்தியாவின் முதன்மையான நகரங்களில் நடைபெற்ற இந்த கணக்கு எடுப்பில் 10 வது இடத்தில் தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத் இடம்பெற்றுள்ளது.

மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் ஹைதராபாத்தில் கடந்தாண்டில் 2945 சாலை விபத்துகள் நடந்துள்ளன.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

2016 சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை குறித்த பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி முதலிடம் பிடிக்கிறது.

கடந்தாண்டு டெல்லியில் மட்டும் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் 1591 பேர் உயிரழந்துள்ளனர்.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

இதற்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளது. 2016ல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1183 பெர் மரணமடைந்துள்ளனர்.

2016 சாலை விபத்துகளில் மரணமடைந்தோர் பட்டியலில் 5வது இடத்தில் கான்பூர், 8வது இடத்தில் ஆக்ரா, 9வது இடத்தில் அலஹாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

2016ல் அதிக சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட நகரங்களுக்கான பட்டியலில் சென்னைக்கு முதலிடம் என்றால்,

இந்தியளவில் அதிக சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

கடந்தாண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 71,431 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு அடுத்த இடத்தில் 53,792 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

மேலும் இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் 6வது இடத்திலும், ஆந்திரா, ராஜஸ்தான், தெலங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சாலை விபத்துகளால் கடந்தாண்டில் மாநில வாரியாக அதிகமானோர் மரணமடைந்த பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடம் பிடிக்கிறது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

அந்த மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் 19,320 பேர் உயிரழந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது தமிழ்நாடு.

தமிழ்நாடு மாவட்டம், வட்டம் , பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2016ல் நடைபெற்ற சாலை விபத்துகலில் மொத்தம் 17,218 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாகி வருவதை உணர்ந்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரி, இந்த ஆய்வை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி பல மாதங்களாக நடைபெற்று வந்த ஆய்வில் கடந்தாண்டில் இந்தியாவில் 4,80,625 சாலை விபத்துகள் நடந்துள்ளது தெரியவந்தது.

இதில் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் பேர் மரணடைந்துள்ளனர். 4,94,624 பேர் படுகாயங்களுடன் உரிய சிகிச்சை காரணமாக உயிர் பிழைத்துள்ளனர்.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

2015 கணக்கோடு 2016 ஆண்டிற்கான ஆய்வை ஒப்பிட்டு பார்த்தால், விபத்துகள் 4.1% குறைந்துள்ளது. ஆனால் சாலை விபத்துகளால் ஏற்பட்ட மரணம் 3.2% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால், இந்தியாவில் 2016 நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் கொல்லப்பட்டவர்களில் 46.3 பேர் இளைஞர்கள்.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

விபத்துகளில் கொல்லப்பட்ட இளைஞர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள் தான் இருக்கும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

சென்னை உட்பட தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகளுக்கு முக்கியமான காரணம் சாலை விதிகளை ஒழுங்காக பின்பற்றாதது தான்.

இந்தியாவில் விபத்துகளின் தலைநகரானது சென்னை..!!

இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு தமிழ்நாட்டு போக்குவரத்து காவலர்களுடன் அலோசித்து, வாகன ஓட்டிகளுக்கு அசல் ஓட்டுநர் உரிமத்தை சோதனை காலத்தின் போது அதிகாரிகள் பரீசிலிக்க கட்டாயமாக்கியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Chennai holds First position in India's 10 Most Danger City. Click for Details...
Story first published: Monday, September 11, 2017, 17:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark