சென்னையில் சபரிமலைக்கு மாலை போட்ட பக்தர்களுக்கு இனிப்பான செய்தியை சொன்ன ரயில்வே! கூட்டம் இங்க குவிய போகுது!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கோட்டயம் வரை சிறப்பு வந்தே பாரத் ரயிலை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 13:45 மணி நேரமாக இருக்கும் சென்னை கோட்டையம் இடையேயான பயண நேரத்தை வந்தே பாரத் ரயில் 9 மணி நேரமாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வரிசையாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற ரயில்களை விட அதிக வேகமாகவும் அதே நேரம் அதிக வசதிகளுடன் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதனால் மக்கள் பலர் வந்தே பாரத் ரயிலில் விரும்பி பயணித்து வருகின்றனர்.

தமிழகத்தை பொருத்தவரை தற்போது சென்னையில் இருந்து கோவை வரையிலும், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரையிலும், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரையிலும், சென்னை விஜயவாடா இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னைக்கு மற்றொரு புதிய வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த தென்னக ரயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோட்டையம் வரை வந்தே பாரத் ரயிலை சிறப்பு ரயிலாக இயக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோட்டையம் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் நம்பர் 3 மற்றும் 4இந்த வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்யவும் தண்ணீரை ஏற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இந்த ரயில் நிலையத்தில் சுமார் 2:30 நிமிடத்தில் மொத்த ரயிலையும் சுத்தப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் மொத்தம் எட்டு பெட்டிகள் கொண்ட ரயிலாக கட்டமைக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்கனவே இந்த வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்யவும் தண்ணீரை ஏற்றவும் வசதிகள் இருப்பதால் இந்த இரு நிலையங்களுக்கும் இடையே தற்போது வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும் கோட்டையம் இடையே இயங்கி வரும் எக்ஸ்பிரஸ் ரயில் பயண நேரமாக 13: 45 நிமிடத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால் வந்தே பாரத் ரயில் அறிமுகமான பின்பு இந்த இரண்டு நகருக்கும் இடையேயான பயண நேரத்தை வெறும் 9 மணி நேரமாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மணி நேரம் 45 நிமிடம் இந்த பயணத்தில் மிச்சமாகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பும் இந்த வந்தே பாரத் ரயில் சரியாக 9:00 மணி நேரம் பயணம் செய்து இரவு 11 மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது. அதேபோல கோட்டயத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு கிளம்பும் இந்த வந்தே பாரத்தில் சென்னையை மதியம் ஒரு மணிக்கு வந்தடைகிறது. தற்போது இதுதான் அந்த ரயிலின் பயண திட்டமாக இருக்கிறது.
இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை இந்த ரயில் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி மாதம் 29-ம் தேதி வரை இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புக்கிங் துவக்கம் ஆகியவை இதுவரை நடக்கவில்லை. விரைவில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் சென்னை பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பல சபரிமலைக்கு செல்வார்கள். அவர்களுக்கு இந்த சென்னை கோட்டயம் வந்தே பாரத் ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலர் இந்த ரயிலை தான் தேர்வு செய்து பயணம் செய்வார்கள். அதுவும் இந்த ரயில் விரைவாக செல்வதால் மக்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த சிறப்பு ரயிலில் பயன்பாட்டிற்கு பிறகு இந்த வந்தே பாரத் ரயில்களை அடுத்த தேவையான ரயில் ரூட்டில் பயன்படுத்த வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








