சென்னையில் தாழ்தள பஸ்கள் ஓடப்போகும் ரூட் இது தான்! உங்க ஏரியாக்கு இந்த பஸ் வருதான்னு செக் பண்ணுங்க!
சென்னையில் தற்போது தாழ்தள பஸ்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், எந்தெந்த ரூட்டுகளில் இந்த பஸ்கள் எல்லாம் பயன்படுத்தப்பட போகிறது என்ற முழுமையான விபரங்களை மாநில போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. இதுபோக இந்த பஸ்களில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கிறது? மக்கள் இதை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும்? ஏன் மற்ற ரூட்களில் இந்த பஸ்கள் பயன்படுத்தப்படவில்லை என்ற விரிவான விவரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
சென்னையில் உள்ளூர் பயணத்திற்காக மக்கள் பலர் பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் பஸ்கள் போக தனியாக எலெக்ட்ரிக் ரயில்கள் மெட்ரோ ரயில்கள் ஆகியவை பயன்பாட்டில் இருந்தாலும், தொடர்ந்து பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சென்னையில் அதிக அளவிலான பஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள மக்களின் வசதிக்காக தாழ்தள பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து சென்னையில் தற்போது 611 தாழ்தள பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில் வார நாட்கள் மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் அதிகமாக பஸ்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து பொது மக்களின் வசதிக்காக இந்த பஸ்கள் எல்லாம் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னையில் இதற்கு முன்பு தாழ்த்தள பஸ்கள் இருந்தாலும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் குறுகளான சாலை வசதி மற்றும் அதிக மேடு பள்ளங்கள் இருப்பதால் தாழ்தள பஸ்களை பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாக கண்டறியப்பட்டு அப்பொழுது அந்த பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. பஸ்கள் தான் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையிலான பஸ்கள் என்பதால் அந்த பஸ்களில் மீண்டும் கொண்டு வருவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதன்படி தற்போது புதிதாக ஆர்டர் கொடுக்கும் பஸ்கள் எல்லாம் தாழ்தள பஸ்களாக சென்னையில் தயாரிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இந்த பஸ்கள் எல்லாம் எந்த ரூட்டில் இயங்கப் போகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இந்த பஸ்கள் இயங்கப் போகும் ரூட்டுகள் குறித்த முழுமையான விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதன்படி சென்னையில் ஏற்கனவே இயங்கி வரும் கீழ் கண்ட வழித்தடங்களில் இந்த பஸ்கள் எல்லாம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தாழ்தள பஸ்கள் செயல்பட போகும் ரூட் 19, 70, 72, 101, 102, 104, 109, 113, 121, 154,

242, 515, 583, 588, 102எக்ஸ், 104சி, 104 சிஎக்ஸ், 104கே, 104டி, 18ஏஎக்ஸ், 21ஜி, 27பி, 40ஏ, 515கே, 515டி, 51ஏ, 51ஏஎக்ஸ், 570பி, 6டி, 70ஜி, 70டி, 70வி, 7எச், 91வி, ஏ51, டி70, இ18, எம்70, டி29சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பஸ்களில் சாதாரண பஸ்களை விட கூடுதலாக பல்வேறு அம்சங்கள் உள்ளன முக்கியமாக இதில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக பயன்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. பஸ்க்கு உள்ளே ஏறவும் இறங்கவும் மாற்றுத்திறனாளிகளால் சுலபமாக செய்ய முடியும் வகையில் தாழ்தளத்தில் இந்த பஸ் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வீல் சேரில் மாற்றுத்திறனாளிகள் வந்தாலும், அவர்கள் வீல்சேரில் இருந்தபடியே பஸ்க்கள் ஏறவும், இறங்கவும் வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதற்காக ஆய்வுகள் எல்லாம் பஸ்களில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பஸ் கியர் இல்லாத தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பஸ்-ல் இயக்குவதும் எளிமையாக இருக்கும்.
இந்த பஸ் எல்லாம் ஏசி வசதி இல்லாத பஸ்களாக இருந்தாலும், ஏசி வசதி இருக்கும் பஸ்களில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இந்த பஸ்களில் இருக்கிறது. இதனால் இந்த பஸ்களில் ஏற ஏராளமான மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ்ஸில் உள்ள வசதிகள் மக்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இந்த தாழ்தள சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது போல, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளெல்லாம் தாழ்தள பஸ்கள் அறிமுகமானார். மக்களுக்கு வசதியாக இருக்கும் மேலும் சிட்டி பயன்பாட்டிற்கு இந்த பஸ்கள் ஏற்றதாக இருக்கும் என்பதால் சிட்டி பயன்பாடு பஸ்கள் எல்லாம் பஸ்களாக மாற்ற வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications









