சென்னைக்கு வந்த புதிய தாழ்தள பஸ்கள்! அடடே இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?
சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தாழ்தள சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களின் டெலிவரி தற்போது நடந்துள்ளது. ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்த பஸ் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் டெலிவரி செய்யப்படுவதற்கு ஏன் 6 ஆண்டுகள் ஆனது? இந்த பஸ்ஸில் அப்படி என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? சென்னை சாலையில் ஓடும் மற்ற பஸ்களுக்கும் இந்த பஸ்ஸுக்கும் என்ன வித்தியாசம்? இதில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கிறது என்ற விரிவான விவரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.
சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகரப் பேருந்துகள் புதிதாக வாங்க சென்னை போக்குவரத்துக் கழகம் முடிவு செய்து இருந்தது. இதற்கான ஆர்டரும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்று தொர்ந்து இருந்தார். அதன்படி சென்னை போக்குவரத்து கழகம் ஆர்டர் வழங்கிய பஸ்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படுத்த முடியாத பஸ்களாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால் வழங்கப்பட்ட ஆர்டரை கேன்சல் செய்து புதிதாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதி கொண்ட தாழ்த்தள சொகுசு பேருந்துகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து இந்த வழக்கை அவர் நடத்தினார். இந்த வழக்கு குறித்து கோர்ட் சென்னை போக்குவரத்துக்கு கழகத்திடம் விசாரணை நடத்தியது. அப்போது தாழ்த்தள சொகுசு பஸ்களை சென்னை பகுதியில் இயக்குவதில் இருக்கும் சிரமம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன்படி தாழ்த்தள சொகுசு பேருந்துகளை சென்னை பகுதிக்குள் குறுகிய சாலை இருப்பதால் அங்கே இயக்குவது சிரமம் எனவும், முக்கியமாக மழை நேரங்களில் சென்னையில் அவ்வப்போது மழை வெள்ளம் சூழ்ந்து கொள்வதால் சொகுசு பேருந்துகள் இயக்கும் போது பேருந்துக்குள் தண்ணீர் புகுந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது எனவும் சென்னை போக்குவரத்து கழக தரப்பிலிருந்து கூறப்பட்டது.
ஆனால் மாற்றுத்திறனாளிகள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இது குறித்து மேலும் விசாரணைகள் நடந்தது. அப்பொழுது சாதாரண பஸ்கள் ஒரு பஸ் ரூபாய் 55 லட்சம் என்ற மதிப்பில் வாங்கப்படுகிறது என தெரியவந்தது. இதற்காக தான் ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தாழ்தள சொகுசு பஸ்கள் என்றால் ஒரு பஸ்ஸுக்கு 90 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியது இருப்பதாகவும் சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது. இதையெல்லாம் விசாரித்த கோர்ட் மாற்றுத்திறனாளிகள் நலனை முக்கியம் என்பதால் தாழ்தள சொகுசு பஸ்களை வாங்க உத்தரவிட்டது.
அதன்படி கோர்ட்டு உத்தரவில் குறைந்தது 350 பஸ் களை வாங்க வேண்டும் எனக்கு கூறியதால் ஏற்கனவே சாதாரண பஸ்களுக்கு கொடுக்கப்பட்ட ஆடர்கள் ரத்து செய்யப்பட்டு அது தாழ்தள சொகுசு பஸ்க்களுக்கான ஆர்டர்களாக மாற்றப்பட்டன. இந்த வழக்கு காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஆர்டர் இதுவரை டெலிவரி செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த ஆர்டரை பெற்ற நிறுவனம் முதற்கட்ட பஸ்களை டெலிவரி செய்துள்ளது.
அதன்படி சென்னையில் தற்போது 50 புதிய பஸ்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் எல்லாம் குரோம்பேட்டை பஸ் டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெலிவரி போது பஸ்கள் என்ன கண்டிஷனில் இருக்கிறது என்பதை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த பஸ்களை ஆர்டிஓ வில் பதிவு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த பஸ்கள் எல்லாம் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் முதியவர்கள் குழந்தைகள் என அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தாழ்த்தலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பஸ்ஸில் சுமார் 70 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும் அதில் 35 பயணிகளுக்கு இருக்கை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக வாங்கப்பட்டுள்ள பஸ்கள் 21ஜி தாம்பரம் முதல் பிராட்வே, 576 காஞ்சிபுரம் முதல் சைதாப்பேட்டை, மற்றும் 114 கோயம்பேடு முதல் ரெட்ஹில்ஸ் ஆகிய ரூட்டுகளில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரூட்களில் தான் பஸ்கள் தேவை அதிகமாக இருப்பதால் இந்த ரூட்களில் பஸ்களை இயக்க தற்போது சென்னை போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பஸ்கள் மட்டுமல்லாமல் இன்னும் 200 புதிய தாழ்தள சொகுசு பஸ்கள் விரைவில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் எல்லாம் கோவை போக்குவரத்து கழகத்திற்கும் மதுரை போக்குவரத்து கழகத்திற்கும் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. விரைவில் இந்த பஸ்கள் டெலிவரி செய்யப்படும் பட்சத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் இது பஸ்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








