சென்னைக்கு வந்த புதிய 25 தாழ்தள பஸ்கள்! இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பயன்பாட்டிற்காக 25 தாழ்த்தள பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு இன்று முதல் அது பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இது பஸ்களை பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.ஜெர்மன் நிதி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட நிதியில் இந்த பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயங்கி வரும் பஸ்களில் புதுப்பிப்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே பஸ்களை ஆர்டர் செய்துள்ளது. இந்த பஸ்கள் எல்லாம் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது 25 தாழ்தள பஸ்கள் சென்னை மாநகர பயன்பாட்டிற்காக இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த பஸ்களை பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

chennai low floor buses

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒரு போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்து ஜென்மன் வளர்ச்சி வங்கியின் நிதி உதவி மூலம் புதிய பஸ்களை வாங்க ஆர்டர்களை வழங்கியது. அதன்படி ரூ7492 கோடி மதிப்பில் ஐந்து கட்டங்களாக தமிழக அரசுக்கு போக்குவரத்துக் கழக பயன்பாட்டிற்காக 2213 பிஎஸ்6 டீசல் பஸ்கள், 500 எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் 552 தாழ்த்தள பஸ்களை கொள்முதல் செய்ய ஆர்டர்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழகத்திற்கு ஒவ்வொரு கட்டமாக தாழ்தள பஸ்கள் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி 25 பஸ்கள் தற்போது தமிழகத்திற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 552 பஸ்களில், சென்னைக்கு மட்டும் 352 தாழ்தள பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு 25 பஸ்கள் தான் தற்போது டெலிவரி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

chennai low floor buses

இதுவரை ரூபாய் 170.60 கோடி மதிப்பிலான 188 தாழ்தள பஸ்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ரூ 22.69 கோடி மதிப்பிலான 25 பஸ்கள் கூடுதலாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் எல்லாம் சென்னையில் உள்ள மக்கள் எளிமையாக போக்குவரத்து வசதியை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன. இதனால் அதிக உயரம் இல்லாமல் குறைவான உயரத்தில் தாழ்தளத்தில் இயங்கும் வகையில் இந்த பஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் மற்ற பஸ்கள் போல இல்லாமல் தானியங்கி கியர் பாக்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பஸ்ஸை இயக்குவது எளிமையாக இருக்கும். மேலும் இந்த பஸ்களில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. முக்கியமாக மாற்றுத்திறனாளிகள் எளிமையாக இந்த பஸ்ஸில் ஏறி இறங்குவதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

chennai low floor buses

மேலும் இந்த பஸ்ஸில் சீட்டிங் வசதிகள் எல்லாம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அதிக நபர்கள் பயணிக்கும் வகையில் இந்த பஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் எல்லாம் ஏசி வசதி இல்லை என்றாலும் ஏசி வசதிக்கு நிகரான பல்வேறு வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக டிஜிட்டல் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொது மக்களுக்கு டிஜிட்டல் முறையில் வழித்தடத்தை அறிவிக்க முடியும்.

இந்த பஸ்ஸில் தானியங்கி கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வசூல் பயணிக்கும் பயணிகள் படிக்கட்டில் தொங்கி சொல்ல முடியாது. பஸ்க்குள் நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோதான் பயணம் செய்ய முடியும். பஸ்சில் மாற்றுத்திறனாளிகள் ஏறினால் அவர்கள் அமர்வதற்காக விசாலமான இட வசதியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீல் சேருடன் மாற்றுத்திறனாளிகள் பஸ்க்குள் ஏறும் போது அவர்கள் வீழ் சேரை லாக் செய்து கொள்ளவும் இட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் எளிமையாக இந்த பஸ்ஸில் பயணம் செய்ய முடியும். இதுபோக இந்த பஸ் உள்ளே அறிவிப்பு ஸ்பீக்கர்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுனர் பயணிகளுக்கு அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்றால் எளிமையாக வழங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் இது போன்ற தாழ்தள பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் சுலபமாக பஸ்களில் பயணம் செய்ய வசதியாக இருக்கும். இது சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் இது போன்ற பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 10, 2024, 7:00 [IST]
English summary
Chennai low floor buses inaugurated 25 buses worth 22 69 crore
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X