Chennai-Madurai Vande Bharat ரயில் வரப்போகுது! தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

இந்தியாவில் வரிசையாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு இயக்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தாக நாட்டின் 12வது வந்தே பாரத் ரயிலாகச் சென்னையிலிருந்து கோவை வரை வந்தே பாரத் ரயில் ஏப் 8ம் தேதி முதல் இயக்கத்திற்கு வரவுள்ளது. இதற்கான பணிகள் நடந்த வரும் சூழ்நிலையில் தென்மாவட்ட மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸாக தென்னக ரயில்வே சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

Chennai-Madurai Vande Bharat ரயில் வரப்போகுது! தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

வந்தே பாரத் ரயில் எனப் பெயரிடப்பட்ட ரயில் டிரைன் 18 என்ற பெயரில் சென்னையில் உருவாக்கப்பட்ட ரயிலாகும். சென்னையில் தயாரிக்கப்படும் ரயில் தமிழகத்தில் அதிகமாக இல்லையே என்ற குறை மக்களுக்கு இருந்தது குறிப்பாகத் தென் மாவட்ட மக்கள் வந்தே பாரத் ரயில் பார்த்தது கூட கிடையாது.

இந்நிலையில் தற்போது சென்னை-கோவைக்கு அடுத்தாக சென்னை மதுரை இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இதற்காக மதுரை ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்துவதற்காக நடைமேடைகளை மின் மயமாக்கும் பணிக்கு டென்டர் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது..

Chennai-Madurai Vande Bharat ரயில் வரப்போகுது! தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

தற்போது மதுரை ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பிளாட்பாரங்களுக்கான தண்டவாளங்களை இயக்கும் பணி கடந்த மார்ச் மாதம் வரை நடந்தது. தற்போது மற்ற பயணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிலையில் மதுரையில் 3 மற்றும் 4வது நடைமேடையை மின் மயமாக்கும் பணிக்கான டென்டர் கோரப்பட்டதாகவும், அது இறுதி செய்யப்பட்டதாகவும்

இந்த டெண்டருக்கான பணி ஆணை வழங்கப்பட்ட 3 மாதத்திற்குள் இந்த பணிகள் முடிந்துவிடும். இந்த பணிகள் முடிந்துவிட்டால் வந்தே பாரத் ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்த இடம் கிடைத்துவிடும். இதன் பின்னர் இந்த ரயிலை அறிமுகப்படுத்தும் பணிகள் வரிசையாக துவங்கிவிடும்.

சென்னை மதுரை இடையே வந்தே பாரத் ரயில் வந்தால் அது பகல் ரயிலாக தான் வர வாய்ப்புகள் அதிகம். அதே ரூட்டில் ஏற்கனவே தேஜஸ் ரயில் வருகிறது. வந்தே பாரத் ரயில் தேஜஸ் ரயிலுக்கு மாற்றாகவோ அல்லது வேறு நேரத்திலோ இயக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ரயில் செயல்பாட்டிற்கு வந்தால் தென் மாவட்டத்திற்கு வரும் முதல் வந்தே பாரத் ரயில் இது தான்.

இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதி வழியாக இயக்கப்படும் என்பதால் அந்த மாவட்ட மக்களும் இந்த ரயிலின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இது மட்டுமல்ல இந்த ரயில் மதுரையைச் சுற்றியுள்ள சில மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாகத் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் இந்த ரயில் சென்னைக்கு வந்த செல்ல வசதியாக இருக்கும் என்பதால் அந்த மாவட்ட மக்களும் இந்த ரயிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த ரயில் வேகமாக இயங்கும் ரயில் என்பதால் குறுகிய பயண நேரம் தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது சென்னை - மதுரையிடையே ரயில் பயணம் சுமார் 7-7.30 மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் ரயில் வந்தால் வெறும் 6 மணி நேரத்தில் இந்த பணம் சாத்தியமாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வந்தே பாரத் ரயில் வந்தால் இந்த ரூட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். இந்த ரயில் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2023, 18:30 [IST]
English summary
Chennai madurai vande bharat train work plan started by southern railways
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X