சென்னை மெட்ரோ ரயிலில் டெய்லி போயிட்டு வரவங்களுக்கே இந்த விஷயம் தெரியுமா? எவ்வளவு பேர் போறாங்க தெரியுமா?
சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மெட்ரோ ரயில் பயன்படுத்தி உள்ள நகர போக்குவரத்தை செய்து வருகிறார்கள். இந்த மெட்ரோ ரயில் தொலைந்து விரிவாக்க செய்யப்பட்டு வரும் பணிகளும் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் எவ்வளவு பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்து உள்ளார்கள் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையை பொறுத்தவரை தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பது நடந்து வருகிறது. சென்னை உள்ள நகர போக்குவரத்திற்கு இந்த மெட்ரோ ரயில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் மக்கள் பலர் மெட்ரோ ரயிலில் விரும்பி பயணம் செய்து வருகிறார்கள். ஏகப்பட்ட மக்கள் தங்கள் தினம்தோறும் அலுவலகம் அல்லது பணிக்கு செல்லும் வசதிக்காக இந்த மெட்ரோ ரயில் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் எவ்வளவு பயணிகள் பயணம் செய்துள்ளார்கள்? என்று விரிவான விபரம் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதம் மட்டும் 84.33லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது இதற்கு முந்தைய மே மாத பயணிகள் எண்ணிக்கையான 84.22 லட்சம் என்ற எண்ணிக்கையையும் ஏப்ரல் மாத எண்ணிக்கையான 80.87 லட்சம் என்ற எண்ணிக்கையும் தாண்டி பயணிகள் பயணம் செய்துள்ளார்கள்.
கடந்த ஜூன் மாதம் இருப்பதிலேயே அதிகமாக 21ம் தேதி தான் ஒரே நாளில் 3.27 லட்சம் பயணிகள் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பயணிகள் என்னென்ன வகையில் டிக்கெட் பயணம் செய்கிறார்கள் என்ற விரிவான விவரமும் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக டிராவல் கார்டு மூலம் பயணம் செய்யும் பயணிகள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

தனது ஜூன் மாதம் மட்டும் டிராவல் கார்டை பயன்படுத்தி 31,33,011 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள் ஆன்லைன் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி 1,86,140 பயணிகள் பயணம் செய்து உள்ளார்கள். ஸ்டாடிக் க்யூஆர் கோடு மூலம் 2,56,839 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். அடுத்ததாக பேப்பர் கியூஆர் கோடு மூலம் 21,30,86 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போக ஆப் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யும் வாய்ப்புகளையும் சென்னை மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப் மூலம் 4,06,230 பயணிகளும் வாட்ஸ்அப் மூலம் 4,33,352 பயணிகளும் போன் பே மூலம் 2,72,300 பயணிகளும் ஓஎன்டிசி மூலம் 20,649 பயணிகளும் டோக்கன் மூலம் 30,752 பயணிகளும் குரூப் டிக்கெட்டின் மூலம் 3,757 பயணிகளும் பயணம் செய்துள்ளார்கள்.

சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்வதற்காக என்சிஎம்சி சிங்கார சென்னை கார்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கார்டை பயன்படுத்தி 15,61,001 பயணி பயணம் செய்துள்ளார்கள் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபோக கடந்த ஜனவரி மாதம் 84.63 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதம் 86.15 லட்சம் பயணிகளும், மார்ச் மாதம் 86.82 லட்சம் பயணிகளும் பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு மாதமாக சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது முதல் மூன்று மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். அடுத்த மூன்று மாதத்தில் மிக குறைவான எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்திருந்தது தெரிய வருகிறது.
ஏப்ரல் மே மாதம் கோடைகாலமாக இருந்ததால் இந்த காலகட்டத்தில் பலர் வெளியூர் பயணம் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் பயன்பாடு குறைந்து இருக்கலாம். இந்நிலையில் இந்த ஜூன் மாதம் பள்ளிகள் எல்லாம் திறந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல இந்த எண்ணிக்கை அதிகமாகி வருவதை நம்மால் பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மெட்ரோ ரயில்கள் மக்களுக்கு பலன் உள்ளதாக இருக்கும் வகையில் மாறி வருகிறது. இதனால் இதன் விரிவாக்க பணிகள் முடிந்த பிறகும் மக்கள் மத்தியில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









