உலகமே சென்னை மெட்ரோவை வியந்து பாக்கப்போவுது! டிரைவரே இல்லாத ரயிலை தயாரிக்க ஆர்டர்!

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போது 36 ரயில்களுக்கான ஒப்பந்தத்தையும் செய்துள்ளது. வெளிநாடுகளில் இந்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட இருக்கிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னையில் மெட்ரோ ரயில் பாதை என்பது மிக முக்கியமான ரயில் பாதையாக இருக்கிறது. உள்நகர பயணத்திற்கு மெட்ரோ மிகச் சிறந்த போக்குவரத்து வசதியாக உள்ளது. ஒரு இடத்திலிருந்து விரைவாக மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோவை மக்கள் அதிகம் விரும்பி வருகின்றனர். சென்னை பொறுத்தவரை தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

chennai metro driverless trains

இந்நிலையில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்களுக்கான பணிகள் துவங்கிவிட்டது. தற்போது மெட்ரோ ரயில்களுக்கான பாதையை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் மொத்தம் சென்னையில் மூன்று வழித்தடங்களில் பணிகள் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்களில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து மெட்ரோ பயன்பாட்டிற்கு வரும்போது அங்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த அல்ஸ்டோம் என்ற நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

chennai metro driverless trains

இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 17ஆம் தேதி மொத்தம் 26 மெட்ரோ ரயில்களை ஆல்ஸ்டோம் நிறுவனம் உருவாக்க ஒப்பந்த மேற்கொள்ளப்பட்டது. தற்போது கூடுதலாக 10 மெட்ரோ ரயில்கள் இணைக்கப்பட்டு மொத்தம் 36 தானியங்கி மெட்ரோ ரயில்களை உருவாக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ரயில்கள் எந்த ஓட்டுனரும் இல்லாமல் தானியங்கியாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளன.

சென்னையில் தற்போது நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை என்பது சுமார் 116.1 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக மூன்று வழித்தடங்களில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று வழித்தடங்களிலும் சேர்த்து மொத்தம் 131 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க தற்போது சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு முதற்கட்டமாக தான் தற்போது 36 மெட்ரோ ரயில்களை ஆர்டர் செய்துள்ளது.

chennai metro driverless trains

இதற்காக சென்னை மெட்ரோ நிர்வாகம் ரூபாய் 269 கோடியை ஒதுக்கி உள்ளது. முதலில் 36 மெட்ரோ ரயில்கள் வந்து முதற்கட்ட சோதனை நடந்த பின்பு அடுத்தடுத்து பணிகள் முடிய முடிய அடுத்தடுத்த மெட்ரோ ரயில்களுக்கான ஆர்டர்கள் வழங்கப்படும் என தெரிகிறது./;ந தற்போது போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜு ஜோய்சர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் மெட்ரோ ரயிலின் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரம், குறித்த பல்வேறு முக்கியமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இது போக மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி உதிரி பாகங்கள் மெட்ரோ ரயிலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு தானியங்கி மெட்ரோ ரயில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயிலாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி அல்ஸ்டோம் நிறுவனம் அடுத்த 28 மாதத்திற்குள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள மெட்ரோ ரயில்களை சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் எல்லாம் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் பராமரிக்கப்பட்டும். தொடர்ந்து இதுஎப்படி இயங்கும் என்ற பயிற்சியும் மெட்ரோ நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மெட்ரோ நிர்வாகம் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. இது சென்னையை மிகப்பெரிய அளவில் வளர்த்துச் செல்லும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. எதிர்காலத்தில் இது மிகப்பெரிய புரட்சியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 29, 2023, 13:40 [IST]
English summary
Chennai metro driverless trains contract with alstom worth 269 crores
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X