சென்னை மெட்ரோ ரயிலில் பொருத்தப்படும் புதிய கருவி! பயணிகளுக்கு இனி கவலையே இல்லை!

சென்னை மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்பை பொருத்துவதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது தனியார் நிறுவனத்திற்கு இதற்கான காண்ட்ராக்டை வழங்கியுள்ளது. இதன்படி விரைவில் சென்னையில் இயங்கும் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் இந்த டைனமிக் ரூட் மேப் என்பது பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முக்கியமாக முதல்முறையாக மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு தேவையானதாக இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னையில் மெட்ரோ ரயிலை தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மெட்ரோவில் பயணம் செய்யும்போது பயணிகள் இருக்கும் பிரச்சினை அடுத்து எந்த ரயில் நிலையம் வருகிறது. எந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும் தங்கள் செல்லும் இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்ற போதுமான தகவல்கள் இல்லை.

Chennai Metro Dynamic Route Map

ஒரு பயணி மெட்ரோ ரயிலில் ஏறிவிட்டால் அவர் செல்லும் இடத்தை அருகில் இருப்பவரிடம் கூறி விவரம் தெரிந்த நபரிடம் தகவல் கேட்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மெட்ரோ ரயிலுக்குள் போதுமான அளவுக்கான தகவல்கள் இல்லை. இந்நிலையில் இந்த தகவல்களை பயணிகளுக்கு வழங்குவதற்காக டைனமிக் ரூட் மேப் என்ற புதிய சிஸ்டம் ஒன்றை சென்னை மெட்ரோ ரயிலில் புகுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி நியூஸான் டிஜிட்டல் சொலுஷன் என்ற நிறுவனத்திற்கு இதற்கான கான்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் எல்இடி பேக் லைட் மற்றும் எல்சிடி அடிப்படையிலான டைனமிக் ரூட் மேப் டிஸ்ப்ளேக்களை சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில்களில் பொருத்த திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இதற்கான இன்ஸ்டாலேஷன் பணிகள் துவங்க உள்ளன.

Chennai Metro Dynamic Route Map

சென்னை மெட்ரோ ரயில் பொறுத்தவரை தினம்தோறும் 2.7 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 54 கிலோ மீட்டர் தூரத்தை 600 டிரிப்கள் மூலம் சென்னை மெட்ரோ ரயில்கள் பயன்படுத்தி வருகிறது. இதற்காக 52 மெட்ரோ ரயில்கள் வாங்கப்பட்டுள்ளன. 46 ரயில்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 46 ரயில்களும் கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில் 36 ரயில்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து ரயில்களிலும் டைனமிக் ரூட் மேப்பை பொறுத்த தற்போது ஒப்பந்த மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் இந்த மேப்பில் என்னென்ன தகவல்கள் எல்லாம் இருக்கும் என்ற விபரமும் தற்போது வெளியாகி உள்ளது.

Chennai Metro Dynamic Route Map

இந்த மேப்பில் குறிப்பிட்ட ரயில் எந்தெந்த ரூட்டுகளில் பயணம் செய்கிறது. தற்போது எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறது. அடுத்து எந்த ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிற்கும் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் அருகில் உள்ள பகுதிகள் என்ன குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், எங்கு இறங்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும்.

இது போக இந்த மேப்பில் ரயில் என்ன வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அடுத்த ரயில் நிலையத்திற்கு எத்தனை மணிக்கு சென்று சேரும் ரயிலுக்குள் இருக்கும் வெப்ப நிலை எவ்வளவு வெளியே இருக்கும். வெப்ப நிலை எவ்வளவு உள்ளிட்ட தகவல்களும் இடம்பெறும். இந்த மேப்புகளை இரண்டு கட்டங்களாக ரயில்களில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரோட்டோ டைப் அடுத்த ஆறு மாதத்திற்குள் ரெடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரூட் மேப்பில் என்னென்ன தகவல்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் பயணிகளிடம் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த வசதிகளை செய்து கொடுக்க தயாராகி உள்ளது. இதற்கான பணிகள் எல்லாம் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதன் புரோட்டோ டைப் தயாராகி, அது அனுமதி பெறப்படும் நிலையில், இந்த டைனமிக் ரூட் மேப் சென்னை மெட்ரோ ரயில் பொருத்தப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்தாலும், பல்வேறு மாநிலங்கள் அல்லது தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் முதலில் மெட்ரோவில் பயணம் செய்யும் அனுபவத்தை பெறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இப்படியான ரூட் மேப் வழங்குவது நிச்சயம் வரவேற்கத்தக்கது. இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 22, 2024, 17:06 [IST]
English summary
Chennai metro dynamic route map view on trains
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X