சென்னை மக்கள் தொகையை விட ஜாஸ்தியா இருக்கும் போல! மார்ச் மாதம் மெட்ரோவில் இத்தனை லட்சம் பேர் பயணித்தார்களா?
கடந்த மார்ச் மாதம் மட்டும் மொத்தம் 86.82 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி தொடர்ந்து மூன்று மாதமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த மார்ச் மாத மெட்ரோ பயன்பாடு குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் மட்டும் 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். இதுவே கடந்த பிப்ரவரி மாதம் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை விட தற்போது 67,449 பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோவில் தொடர்ந்து மூன்று மாதமாக பயணிகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 84.63 லட்சம் பயணிகள் பயணித்திருந்தனர். பிப்ரவரி மாதம் 86.15 லட்சம் பயணிகள் பயணித்திருந்தார்கள். தற்போது அதைவிட கூடுதலாக 86.82 லட்சம் பயணிகள் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதத்திலேயே 4ம் தேதி தான் இருப்பதிலேயே அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் பயணித்துள்ளது நமக்கு தெரியவந்துள்ளது. இதன்படி அந்த ஒரு நாளில் மட்டும் 3.34 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர். அதிகமான பயணிகளை கையாள்வதால் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க ஏராளமான டிக்கெட் ஆப்ஷன்கள் உள்ளன.

அதன்படி சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதம் மட்டும் 37.64 லட்சம் பயணிகள் டிராவல் கார்டுகளை கொண்டு டிக்கெட் எடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து 13.95 லட்சம் பயணிகள் சிங்கார சென்னை கார்டை வைத்து டிக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 2.05 லட்சம் பயணிகள் ஆன்லைன் க்யூ ஆர் கோடு மூலம் டிக்கெட்களை எடுத்துள்ளனர். 2.47 லட்சம் பயணிகள் ஸ்டாட்டிக் கியூ ஆர் கோடுகளை வைத்து டிக்கெட் எடுத்துள்ளனர்.
பேப்பர் கியூ ஆர் கோடுகளை 20.05 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். 4 லட்சம் பயணிகள் பேடிஎம் ஆப் மூலம் டிக்கெட்களை எடுத்துள்ளனர். நாளுக்கு நாள் சென்னை மக்கள் மத்தியில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பழக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் நாட்டிற்கு மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி வந்து கொண்டிருக்கிறது.

சென்னை மெட்ரோவை பொறுத்தவரை தற்போது இரண்டு வழித்தடங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த இரண்டு வழி தடங்களிலும் சென்னையில் ஏற்கனவே இயங்கி வரும் எலெக்ட்ரிக் ரயில் இல்லாத பாதையாக பார்த்து இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு உள்ள மக்களுக்கு மெட்ரோ ரயிலை வசதி படுத்திக் கொடுத்துள்ளனர்.
தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதையில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வழிதடங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மெட்ரோ ரயில் பயன்பாடு அதிகரித்து விட்டால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்பதற்காக மெட்ரோ ரயில் பணிகளை தற்போது துரிதமாக அரசு செய்து வருகிறது. சென்னை ஐடி துறையிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில் இந்த மெட்ரோ ரயில் ஐடி ஊழியர்களுக்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கப்போகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று இலட்சக்கணக்கான மக்கள் ஒரே மாதத்தில் மெட்ரோ ரயில் பயன்படுத்தி வரும் நிலையில் எதிர்காலத்தில் கோடி கணக்கான மக்கள் நிச்சயம் ஒரே மாதத்தில் மெட்ரோ ரயில் பயன்படுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை. சென்னையில் உள்ள மக்கள் தொகை நெருக்கடிக்கு நிச்சயம் மெட்ரோ ரயில் தேவை ஒவ்வொரு மாதமும் இனி மெட்ரோ ரயில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.


Click it and Unblock the Notifications









