மீண்டும் சென்னை மெட்ரோவில் ரூ5 டிக்கெட் விலையில் பயணிக்கலாம்! என்னிக்கு தெரியுமா?

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடந்த 3ம் தேதி சென்னை மெட்ரோவில் வழங்கப்பட்டிருந்த கட்டண தள்ளுபடி ஆஃபர் டிசம்பர் 17ஆம் தேதியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிசம்பர் 17ஆம் தேதியும் மக்கள் ரூபாய் 5 கட்டணத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் செய்யலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை மெட்ரோ ரயிலில் நிறுவன நாளான டிசம்பர் 3ஆம் தேதி பயணிகள் மத்தியில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு ரூபாய் 5 கட்டணத்தில் மெட்ரோ ரயில் டிக்கெட் விலை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

chennai metro offer extended

இதன்படி இ-கியூஆர் டிக்கெட்டுகளான பேடிஎம்,வாட்ஸ்அப், போன் பே போன்ற தளங்களின் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு ரூபாய் 5 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய நாளில் மக்களுக்கு இந்த சலுகை கட்டண டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட நாளில் சென்னையில் அதிகமாக மழை பெய்தால் பல்வேறு மக்கள் மெட்ரோவை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதிகமான மழை பெய்ததால் நேற்று பல மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மக்கள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்கள் சுற்றி தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருந்தது. இந்நிலையில் இந்த சலுகை விலை டிக்கெட்டை மக்கள் பலர் பெற முடியாத சூழ்நிலை இருந்ததால் இந்த சலுகை கட்டணத்தை மற்றொரு நாளுக்கு வழங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

chennai metro offer extended

அதன்படி வரும் 17-ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் மூலமாக பயணிக்கும் பயணிகளுக்கு இது போன்ற சலுகை கட்டண டிக்கெடுகளை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. வரும் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை மெட்ரோ ரயில் மூலமாக பயணிக்கும் பயணிகள் ஸ்டாட்டிக் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் போது அவர்களுக்கு ரூபாய் 5 மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சாதாரணமாகவே குறைந்த விலை டிக்கெட்டாக ரூபாய் 10 என்ற விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இரண்டு கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூபாய் 10 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதைவிட குறைவாக ரூபாய் 5க்கு டிக்கெட் விலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

chennai metro offer extended

டிசம்பர் 3ம் தேதி மட்டும் அறிவிக்கப்பட்ட இந்த ஆஃபரை டிசம்பர் 17ஆம் தேதிக்கும் நீட்டித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டதற்கு விளக்கத்தையும் அளித்துள்ளது. அதில் அவர்கள் " பயணிகளின் பாதுகாப்பு என்பது மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மிக முக்கியமாக இருக்கிறது. அதிகமான மழை காரணமாக இந்த ஆஃபரை மக்களால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் இந்த ஆஃபரை நாங்கள் டிசம்பர் 17-ம் தேதி பயணிக்கும் பயணிகளுக்கும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளோம். இதனால் தினந்தோறும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இந்த ஆஃபரை வேறு ஒரு நாள் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள முடியும்." என தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு நன்றி கடன் செலுத்தவும் அதே நேரம் பயணிகள் மத்தியில் ஆன்லைன் டிக்கெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த விழிப்புணர்வு போதிய அளவில் ஏற்படவில்லை என்பதற்காக என்பதும் இந்த ஆஃபரை மற்றொரு நாளுக்கு நீட்டிப்பதற்கான மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. சென்னையில் அதிக மழை காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தேதி மாறுதல் குறித்து அறிவிப்பு நிச்சயம் நல்ல பலனைத் தரும். மக்கள் இதை பயன்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 5, 2023, 11:23 [IST]
English summary
Chennai metro offer extended dec 17 full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X