சின்னமலை-ஏஜி டிஎம்எஸ் இடையே சுரங்க மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்..!!

Written By:

சின்னமலை முதல் தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்த வழிப்பாதையில் விரைவில் பயணிகள் ரயில் இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

சென்னையில் போக்குவரத்து பாதிப்பை குறைக்கும் நோக்கில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 45 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயிலுக்கான பணிகள் தொடங்கின.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

வண்ணாரப்பேட்ட முதல் விமான நிலையம் வரை 23 கி.மீ தொலைவில் மற்றும் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 21 தொலைவில் என மெட்ரோ ரயிலிற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கின.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

கடந்த 2015ல் ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையில் சென்னைக்கான முதல் உயர்மட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

2016ல் சின்னமலை-விமானநிலையம், ஆலந்தூர்-பரங்கிமலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

இந்தாண்டில், கோயம்பேடு முதல் நேரு பூங்கா இடையிலான சென்னையின் முதல் சுரங்க வழி மெட்ரோ ரயில் போக்குவரத்தை கடந்த மே 14ல் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

பத்துநாட்களில் 2.90 லட்சம் பயணிகள் வரும் அளவிற்கு இந்த சுரங்க பாதை மெட்ரோ ரயில் வழித்தடம் சென்னை வாசிகளிடம் வரவேற்பு பெற்றது.

மேலும் பத்து நாட்களில் 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம்ம் தெரிவித்தது.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

தற்போது சென்னையில் மற்றொரு சுரங்க வழி மெட்ரோ தடத்திற்கான சோதனை ஓட்டம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

அண்ணாசாலையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க வழித்தடத்தில் 4 கி.மீ தொலைவிற்கு டீசல் எஞ்சின் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

முதல் சோதனை ஓட்டத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பஞ்சால் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

சின்னமலை ரயில் நிலையத்தில் இருந்து சுரங்க வழித்தடத்தில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ,ஏஜி-டிஎமெஸ் வரை 4 நிலையங்களில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும்போது,

சுரங்கத்திற்குள் செல்லும் பாதை, சிக்னல்கள், தண்டவாளம், நடைமேடை, கதவுகள், டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் பகுதி ஆகியவற்றில் பணிகள் நிறைவடைந்துள்ளது. அங்கெல்லாம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்

சின்னமலை - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை..!!

இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஆணையரின் சோதனைக்கு பிறகு, மத்திய மாநில அரசுகளின் அறிவிப்பின் பேரில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil- Chennai Metro Tunnel Rail Commences Test Run Between Chinnamalai to Ag DMS. Click for the details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark