வரலாற்றிலேயே இல்லாத சாதனையை படைத்த சென்னை மெட்ரோ! இவ்வளவு பேர் டிராவல் பண்ணிட்டாங்களா?
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்று சாதனை படைத்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சென்னை மெட்ரோ ரயில் மக்கள் அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள். இப்படியாக கடந்த மாதம் எவ்வளவு நபர்கள் மெட்ரோ ரயில் பயணத்தில் உள்ளார்கள் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை நகருக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன. லோக்கல் பஸ்கள் இருப்பது போல எலெக்ட்ரிக் ரயில்கள், நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் மக்களின் தேவையை அறிந்து தற்போது சென்னையில் இரண்டு வழி தடங்களில் மெட்ரோ ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கிறது.

இந்நிலையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எத்தனை பயணிகள் பயணித்துள்ளார்கள் என்ற விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மொத்தம் 95,43,625 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் பயணித்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவை துவங்கியதில் இருந்து இதுதான் அதிக அளவிலான பயணிகள் பயணித்த மாதமாக இருக்கிறது. கடந்த ஜூலை மாத பயணிகள் எண்ணிக்கையை விட கடந்த ஆகஸ்ட் மாதம் 8,606 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளார்கள் . கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 84.63 லட்சம் பயணிகள் பயணம் செய்திருந்தார்கள். பிப்ரவரி மாதம் 86.15 லட்சம் பயணிகளும் மார்ச் மாதம் 86.82 லட்சம் பயணிகளும், ஏப்ரல் மாதம் 80.87 லட்சம் பயணிகளும் மே மாதம் 84.24 லட்சம் பயணிகளும் பயணம் செய்தார்கள். இந்த இரண்டு மாதம் கோடை விடுமுறை கால மாதம் என்பதால் குறைவான பயணிகளை பயணம் செய்திருந்தார்கள். அந்த காலகட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறையில் இருந்தன.
இதையடுத்து பள்ளி ,கல்லூரிகள் திறந்த பிறகு மீண்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. அதன்படி பார்த்தால் ஜூன் மாதம் 84.33 லட்சம் பயணிகளும், ஜூலை மாதம் 94.43 லட்சம் பயணிகளும் பயணம் செய்திருந்தார்கள். தற்போது ஆகஸ்ட் மாதம் இது அதிகரித்து 95.35 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளார்கள்.

இதன்படி ஆகஸ்ட் மாதம் ஒரே நாளில் அதிக பயணிகள் பயணம் செய்தது கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தான் அந்த நாளில் 3.69 லட்சம் பயணிகள் ஒரே நாளில் பயணம் செய்திருந்தார்கள். இதன் மூலம் சென்னையில் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயில் மூலம் பலனடைந்து வருகிறார்கள். இது நிச்சயம் அவர்களுக்கு பெரிய அளவில் பலன் கொண்டதாக மாறி வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை அதிகரித்து வரும் காரணமாக தினம் தோறும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் உள்ளிட்ட பலர் தினம்தோறும் மெட்ரோ ரயில் பிரதான போக்குவரத்து வசதியாக கொண்டு பயணம் செய்து வருகிறார்கள். தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.
அடுத்ததாக மூன்று ரூட்களில் மெட்ரோ ரயில் பாதை போடும் படி நடந்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் பணி நிறைவடையும் பட்சத்தில் இன்னும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி கணிசமான அளவு குறையும் எதிர்காலத்தில் போக்குவரத்து பிரச்சினை குறைய வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு தரப்பில் இருந்து நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தனி நபர் வாகனம் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதிகமான எரிபொருள் தேவை இருக்கிறது. மெட்ரோ போன்ற ரயில்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த தேவை குறையும் இதனால் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









