இனிமே சென்னை பஸ்களில் இதைக் கேட்கலாம்! புதுசா சென்னை வரவங்களுக்கு குழப்பமே இருக்காது!

சென்னை மாநகர பஸ்களில் ஜிபிஎஸ் முறையில் பஸ் நிறுத்தங்களை அறிவிக்கும் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது மாநகர பகுதியில் செயல்படும் 1000 பஸ்களில் செயல்படுத்தப்படவுள்ளது. சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த சேவையைத் துவக்கி வைத்தார். பார்வையற்றவர்கள், முதியவர்கள், புதிதாகச் சென்னைக்கு வந்தவர்களுக்கு இது உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் இந்தியாவில் முக்கியமான நகரமாக இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வந்து செல்கிறனர். சென்னையில் சிட்டிக்குள் போக்குவரத்திற்கு மாநகர பேருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பஸ்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சென்னை மாநகர பஸ்களை தொழிற்நுட்ப ரீதியில் மேம்படுத்த முடிவு செய்தது. அதற்காகச் சென்னையில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் ஓலி வழியாக வழிகாட்டு வசதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டது.

இனிமே சென்னை பஸ்களில் இதைக் கேட்கலாம்! புதுசா சென்னை வரவங்களுக்கு குழப்பமே இருக்காது!

அதன்படி தற்போது சென்னை பஸ்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான பஸ் நிறுத்த அறிவிப்பைச் செய்யும் தொழிற்நுட்பத்தை பொருத்தி வருகிறது. இந்த தொழிற்நுட்பம் ஒரு பஸ் ஸ்டாப்பை பஸ் நெருங்கும் போது பயணிகளுக்கு பஸ் எந்த பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படவுள்ளது. அடுத்தாக வரவுள்ள பஸ் ஸ்டாப் என்ன உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஒலி வடிவில் அறிவிப்பு செய்யும். இந்த தொழிற்நுட்பம் தானியங்கியாக இயங்கும் திறன் கொண்டது.

பஸ்சில் உள்ள டிரைவர் கண்டெக்டர் யாரும் இதைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை முற்றிலும் ஜிபிஎஸை அடிப்படையாகக் கொண்ட தொழிற்நுட்பத்தின் கீழ் இது இயங்குகிறது. இந்த தொழிற்நுட்பத்தை சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது அவருடன் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

துவக்க நிகழ்விற்குப் பின்பு உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். இந்த தொழிற்நுட்பம் முதற்கட்டமாகச் சென்னை மாநகரில் இயங்கி வரும் 150 பஸ்களில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகமாகப்படுத்தப்பட்டு விரைவில் 1000 பஸ்களுக்கு பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் பகுதிக்குள் ஓடும் அனைத்து பஸ்களிலும் இந்த தொழிற்நுட்ப வசதி வந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்நுட்பம் பார்வையற்றவர்கள், முதியவர்கள், நகருக்கு புதிதாக வந்தவர்கள், குறிப்பிட்ட ரூட்டில் அறிமுகம் இல்லாதவர்கள் சரியான பஸ் நிறுத்தத்தில் இறங்கவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் உதவும் என்பதால் இந்த தொழிற்நுட்பம் பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் தேவையில்லாமல் குழம்புவது மற்றும் மற்றவர்களால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் பயணத்தைச் சுலபமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னைக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூரிலிருந்து பணிக்காக வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் பஸ்களை பயன்படுத்தும் போது அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் எது என்பதைத் தெரியாமல் குழப்பி வந்தனர். இனி இந்த தொழிற்நுட்பம் அந்த குழப்பத்தைத் தவிர்த்து விடும் என எதிர்பார்க்கலாம். இந்த தொழிற்நுட்பம் ஏற்கனேவ பல மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பஸ்களில் அறிமுகமாகிவிட்டது. தமிழகத்திற்கு தற்போது வந்துள்ளது.

பஸ்களில் வரும் இந்த அறிவிப்பு பஸ்களில் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அனைத்து பயணிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதால் பஸ் உள்ளே முன்பகுதி, நடுப்பகுதி மற்றும் பின்பகுதி ஆகிய இடங்களில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு கேட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai MTC Buses equipped with GPS based Stop Announcement system
Story first published: Monday, November 28, 2022, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X