சென்னை பெண்களின் நீண்ட நாள் கனவு நினைவாகிடுச்சு! இனி இந்த பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம்!
சென்னையில் இயங்கி வரும் சிவப்பு நிற டீலக்ஸ் பஸ்ஸ்களை இனி பெண்கள் இலவசமாக பயன்படுத்தும் பஸ்களாக மாற்ற சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் சென்னையில் இனி பெண்கள் இலவசமாக பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது .இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பொது போக்குவரத்து தான் ஒரு சிறந்த போக்குவரத்து வசதியாக இருக்கிறது. இதில் பெண்களால் அதிக பாதுகாப்புடன் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக பயணம் செய்ய முடியும். தமிழக முழுவதும் டவுன் பஸ்களில் பயணம் செய்வதற்கு பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் துவங்கியத திட்டம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவி வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகங்களில் இயங்கி வரும் சிவப்பு நிறங்கள் பஸ்கள் தற்போது பிங்க் நிறப் பெயிண்ட் பூசப்பட்டு அதிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான அனுமதியை வழங்க தற்போது திட்டம் மிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத் திட்டத்தின் படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்களுக்கு இலவசமான பஸ்களை இயக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே புதிதாக பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்வதற்காக புதிய நீல நிற பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இந்த எண்ணிக்கை தேவையை பூர்த்தி செய்யாத நிலையில், தற்போது இயங்கி வரும் சிவப்பு நிற டீலக்ஸ் பஸ்களில் சில பஸ்களை பிங்க் நிற பெயிண்ட் அடித்து அதை ரெகுலர் சர்வீஸ் பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சுமார் 700க்கும் அதிகமான சிவப்பு நிற டீலக்ஸ் பஸ்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன.
இதில் 5 ஆண்டுக்கும் அதிகமாக காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் பஸ்களை பிங்க் நிறத்தில் மறு பெயிண்ட் செய்து அதை தமிழகம் சென்னை முழுவதும் உள்ள ரூட்டுகளில் பெண்களுக்கான இலவச பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள 30 டிப்போக்களில் இருந்து இந்த பஸ்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
தமிழக முழுவதும் பெண்களுக்கான இலவச பஸ் சேவை பயன்பாட்டில் இருந்தாலும் இப்படியான பஸ்கள் எல்லாம் சரியாக பராமரிக்கப்படாத பாடாதி பஸ்கள் தான் பயன்பாட்டில் இருந்து வந்தன. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனமாக இருந்து வந்தது. இந்நிலையில் இலவசம் என்பதால் வேறு வழியில்லாமல் பெண்கள் அந்த ரக பஸ்களில் தான் பயணிக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது.
பொதுமக்கள் மத்தியில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அந்த பஸ்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. தற்போது பெண்களுக்கான பஸ்களை அதிகரிக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீலக்ஸ் பஸ்களை பெண்கள் பயணிக்கும் ரக பஸ்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது. இந்த பஸ்கள் எல்லாம் தற்போது பயன்பாட்டில் உள்ள பெண்களுக்கு இலவச பஸ்களை விட சிறப்பான பராமரிப்பில் இருக்கும் அதே நேரம் பயணிகளுக்கு சொகுசான பயணம் அனுபவமும் கிடைக்கும்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் இந்த முடிவு பலர் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3500 பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் பாதிக்கும் அதிகமான பஸ்கள் சாதாரண பிங்க் நிற பஸ்களாக தான் பயன்பாட்டில் இருக்கிறது. இருந்தாலும் இது பொது மக்களின் தேவை பூர்த்தி செய்யும் விதமாக இல்லை பல முக்கிய ரூட்டுகளில் இந்த பஸ்கள் இயக்கப்படுவதில்லை. கிராமப்புற பகுதியில் அல்லது வெகுசில பஸ்கள் இருக்கும் ரூட்களில் மட்டுமே இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.
தற்போது பிங்க் நிற பஸ்கள் சரியாக பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக இது பழைய பஸ்களாக இருப்பதால் இதற்கான உதிரி பாகங்கள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் இருக்கும் உதிரி பாகங்களை சரி செய்து அல்லது அதற்கு மாற்றாக வேறு சில பாகங்களை வைத்து இயக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் பஸ்ஸில் தரம் குறைவதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பஸ் தேவை திட்டம் மிக முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த திட்டத்திற்கான தேவை மிக அதிகமாக இருந்த நிலையில் இந்த திட்டத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications








