ஆம்னி பஸ்ஸுக்கே டஃப் கொடுக்கும் போல!.. சென்னையில் 100 புதிய பேருந்துகள் ஓட போகுது.. எல்லாமே ஏசி பஸ்ஸா! எப்போ?
சென்னை வாசிகள் சொகுசாக பயணிப்பதற்காக பெருநகர போக்குவரத்துக் கழகம் (Metropolitan Transport Corporation) சில புதிய பேருந்துகளை பொது போக்குவரத்துச் சேவையில் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி 100 ஆடம்பர டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடிய ஏசி பேருந்துகள் எம்டிசி-இன்கீழ் இணைக்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நூறு ஏசி பேருந்துகளுமே மின்சாரத்தில் இயங்கக் கூடியது என்பதும் தற்போது தெரிய வந்து உள்ளது.
தந்தி டிவி வெளியிட்டிருக்கும் தகவலின்படி பெருநகர போக்குவரத்துக் கழகம் சுவிட்ச் இஐவி10 எலெக்ட்ரிக் பேருந்து (SWITCH EiV12 Electric Buses)-களையே சென்னை மக்களுக்காக கொள்முதல் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இவை மே மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கும் வரும் என்பது தெரிய வந்துள்ளது. இது ஓர் தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்து ஆகும்.

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவராலும் சுலபமாக ஏறி-இறங்க முடியும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற பேருந்தாகவும் இது காட்சியளிக்கின்றது. இதையே சேவையில் இணைக்க இருக்கின்றது சென்னை போக்குவரத்துக் கழகம். இந்த பேருந்துகளை ஓஎச்எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (OHM Global Mobility Pvt Ltd)-டே பராமரிக்க இருக்கின்றது.
இது ஓர் அசோக் லேலண்ட் (Ashok Leyland) மற்றும் சுவிட்ச் மொபிலிட்டி (Switch Mobility)-யின் துணை நிறுவனம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் எம்டிசி சுமார் 600 தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான டெண்டரை கோரியது. இதில் 500 யூனிட்டுகள் வழக்கமான தாழ்தள ஏசி வசதி அல்லாத தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகள் ஆகும்.
மேலும், 100 யூனிட்டுகள் ஏசி வசதிக் கொண்ட தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகள் ஆகும். முதல் கட்டமாக வாங்கப்பட உள்ளன பேருந்துகளின் எண்ணிக்கையே இது ஆகும். ஆமாங்க, மொத்தமாக 1,420 மின்சாரத்தில் இயங்கும் தாழ்தள பேருந்துகளை வாங்கவே எம்டிசி திட்டமிட்டுள்ளது. அதில் 820 யூனிட்டுகள் ஏசி பேருந்துகள் ஆகும்.
மேலும், 600 ஏசி அல்லாத பேருந்துகள் ஆகும். இதன் வாயிலாக சீக்கிரமே சென்னை நகரம் மொத்தத்தையும் தாழ்தள பேருந்துகளே ஆளுகைச் செய்ய இருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, ஏசி பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் அது ஆட்சிச் செய்ய இருக்கின்றன. மேலும், இந்த பேருந்துகள் அனைத்தும் உலக வங்கியின் நிதியின்கீழேயே வாங்கப்பட உள்ளன.

இஐவி12 முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார பேருந்து ஆகும். வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் தயாரிப்பு என அனைத்துமே உள் நாட்டிலேயே செய்யப்பட்டு இருக்கின்றன. பேருந்துக்கான பேட்டரி அனைத்தும் பேருந்தின் அடிதளத்தில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது இதுவே இந்தியாவின் முதல் அடித்தளத்தில் பேட்டரிகளைக் கொண்ட மின்சார பேருந்து ஆகும்.
39க்கும் அதிகமானோர் இந்த பேருந்தில் பயணிக்க முடியும். வீல் சேர்களை பார்க் செய்வதற்கான இட வசதியும் இதில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பேருந்தை சார்ஜ் செய்வதற்கான போர்ட் பேருந்தின் பின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். இரண்டே மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் விதமாக டூயல்-கன் சிசிஎஸ்2 (Dual-Gun CCS2) சார்ஜிங் வசதி இந்த பேருந்திற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது.
இத்துடன், பலதரப்பட்ட பேட்டரி பாதுகாப்பு அம்சம், சிசிடிவி கேமிரா, தானாகவே பயணிகளை எண்ணும் வசதி மற்றும் பல அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சங்களையும் இந்து பேருந்துக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கையும் இதில் இடம் பெற்றிருக்கும்.
இதில் மோட்டாரை பொருத்த வரை நிரந்தர மேக்னட் சின்க்ரோனஸ் ஏசி மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கும். இது அதிகபட்சமாக 235 kW திறன் கொண்ட மோட்டார் ஆகும். சிறந்த பிரேக்கிங் திறனுக்காக முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் டிரம் பிரேக்கும் இந்த பேருந்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேருந்து ஓர் முழு சார்ஜில் 314 கிமீ ரேஞ்சை வழங்கும்.
போக்குவரத்து கழகக்தில் இணைக்கப்பட இருக்கும் இந்த பேருந்துகளையே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (மார்ச் 27) நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை, எண்ணூரில் அமைந்து உள்ள ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவன ஆலைக்கு சென்றே மின்சார பேருந்தின் மாதிரிகளை அவர் பார்வையிட்டார்.
இதுகுறித்து தகவலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வின்போது சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர், அசோக் லேலண்ட் நிறுவன அலுவலர்கள், சுவிட்ச் மொபிலிட்டி அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் என பலர் அமைச்சருடன் இருந்தனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பன்முக சிறப்புகளைக் கொண்ட சொகுசு தாழ்தள பேருந்தே சென்னை மக்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட உள்ளது. இது ஆம்னி பேருந்துகளுக்கு இணையான டிராவல் அனுபவத்தை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே புதிய தாழ்தள மின்சார பேருந்தில் சென்னை வாசிகள் அதிக ஆர்வத்துடன் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








