சாயங்காலம் டீ குடிச்சிட்டு சென்னைல ஏறுனா நைட் சாப்பாட்டுக்கு முன்னாடியே பெங்களூர் போயிரலாம்! ஆம்னி பஸ்கள் ஷாக்
சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Chennai-Mysuru Vande Bharat Express) ரயில் சேவை, கடந்த 2022ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால், சென்னை-மைசூர் இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 12ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), காணொலி காட்சி மூலமாக, சென்னை-மைசூர் இடையேயான 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ஆனால் தற்போதைய நிலையில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை-பெங்களூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

பெங்களூர் எஸ்எம்விடி (SMVT) ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைந்து விடும். 20663 என்ற எண்ணில், இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 9.30 மணிக்கு பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் எண் 20664 ஆகும்.

இடையில் காட்பாடி மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய 2 ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும். இதில், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் பெங்களூர் நகரில்தான் உள்ளது. சுருக்கமாக கேஆர் புரம் என அழைக்கப்படும் இந்த ரயில் நிலையத்தைதான், ஐடி ஊழியர்கள் மற்றும் தொழில் துறையினர் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால், இரவு 8.48 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தை வந்தடைந்து விடலாம். அதாவது சென்னை-பெங்களூர் இடையேயான பயண நேரம் வெறும் 3 மணி நேரம் மற்றும் 48 நிமிடங்கள்தான். எனவே ஐடி ஊழியர்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது.
இந்த சூழலில், இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழக்கமான சேவை வரும் ஏப்ரல் 5ம் தேதியில் (நாளை மறுநாள்) இருந்து தொடங்குகிறது. அதாவது நாளை மறுநாளில் இருந்து சென்னை-மைசூர் இடையே இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முழுமையாக இயக்கப்படும்.
மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மதியம் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 11.20 மணிக்கு மைசூர் சென்றடையும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் ஐடி ஊழியர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சென்னை-பெங்களூர் இடையேயான பயண நேரத்தை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வெகுவாக குறைத்துள்ளது.
வரும் காலங்களில் இந்த வழித்தடத்தில் இதை விட அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய புல்லட் ரயில் (Bullet Train) இயக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் நகருக்கு புல்லட் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வழித்தடத்தில் புல்லட் ரயில் கனவு நிஜமாக இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.


Click it and Unblock the Notifications








