சிங்கப்பூர் மாதிரி மாறப்போகும் சென்னை போக்குவரத்து! ஒரே டிக்கெட்டில் ஊரையே சுற்றலாம்!

சென்னையில் இனி பஸ், மெட்ரோ ரயில் மற்றும் எலெக்ட்ரிக் ரயில் ஆகிய அனைத்து உள்ளூர் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த ஒரே கார்டை பயன்படுத்தி டிக்கெட்ட எடுக்க முடியும் என தமிழக போக்குவரத்து துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இது எப்படி சாத்தியம்? இதில் என்ன தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதிக அளவிலான மக்கள் வசித்து வருகிறார்கள். குறிப்பாக இங்கு வேலைக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. இதனால் உள்ளூர் போக்குவரத்திற்கான தேவை மிக அதிக அளவில் இருக்கிறது. தமிழ் சென்னையை பொருத்தவரை உள்ளூர் போக்குவரத்துக்காக பஸ்கள், எலெக்ட்ரிக் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

chennai ncmc card

எந்தெந்த ரூட்டுகளில் எல்லாம் எலெக்ட்ரிக் ரயில்கள் இல்லையோ அந்த ரூட்களில் எல்லாம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. எந்த ரூட்களில் எல்லாம் எலெக்ட்ரிக் ரயில் மற்றும் மெட்ரோ ஆகியவை இல்லையோ அந்த ரூட்டுகளில் எல்லாம் பஸ்கள் இயக்கப்படுகிறது. இப்படியாக பொதுமக்கள் இந்த போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வருகிறார்கள்.

தற்போது உள்ள சூழ்நிலையில் மெட்ரோ ரயில் பயணம் செய்ய தனியாக டிக்கெட் பயணம் செய்ய தனியாக டிக்கெட் பயணம் செய்யத் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இது பொது மக்களுக்கு மிகப்பெரிய அசெளகரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இப்படியாக ஒரே வகை போக்குவரத்து டிக்கெட் எடுப்பதற்கு நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு என்ற புதிய பயண அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

chennai ncmc card

இந்நிலையில் இந்த அட்டையை தமிழகத்திற்கு குறிப்பாக சென்னையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து தற்போது போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை முழுவதும் தற்போது இயங்கி வரும் பஸ்களில் டிக்கெட் வழங்குவதற்காக மெஷின் முறையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மெஷினில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் யூபிஐ மூலம் பணம் பெரும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இனி மெட்ரோ எலக்ட்ரிக் ரயில் மற்றும் பஸ்களில் ஒரே கார்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருகிறது. தற்போது பஸ்களில் உள்ள டிக்கெட் எடுக்கும் கருவிலேயே இந்த கார்டையும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இது குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chennai ncmc card

தற்போது தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை பொறுத்தவரை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகிய இரண்டு கழகங்களிலும் அனைத்து பஸ்களிலும் மிஷின் மூலம் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 100 சதவீதம் காகித டிக்கெட் இல்லாமல் மெஷின் டிக்கெட் தான் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகங்களிலும் இந்த மிஷின் மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படிப்படியாக அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இயங்கும் அனைத்து பஸ்களிலும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக கொண்டு வந்து விட்டால் பஸ்களில் பயணம் செய்யும்போது கட்டாயம் பணம் எடுத்துக் கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு , யுபிஐ மூலமாக கூட பண பரிவர்த்தனை செய்ய முடியும்.

இப்படியாக ஒரே கார்டு மூலம் அனைத்து விதமான டிக்கெட்களையும் எடுக்கக்கூடிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டால் இது பொது மக்களுக்கு வசதியாக இருக்கும். தற்போது பஸ்களுக்கு வேறு டிக்கெட், ரயில்களுக்கு வேறு டிக்கெட் எடுத்து அதில் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தற்போது ஒரே இடத்தில் இருந்து வேறு வேறு வாகனங்களில் பயணிப்பதற்கு ஒரே டிக்கெட்டை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பொதுப் போக்குவரத்து பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக இருக்கிறது மக்கள் பல பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் தான் நாட்டிற்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் இந்நிலையில் அவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரச பொறுப்பு அதற்காக தான் இந்த இது வழங்கப்பட்டுள்ளது

More from DriveSpark

Article Published On: Friday, October 18, 2024, 13:15 [IST]
English summary
Chennai ncmc card public transport single ticketing facility
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X