நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் எப்பொழுது வருகிறது? முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ரயில்வே மேலாளர்!
தென் மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில் எப்பொழுது தனது சேவையை துவங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நெல்லையில் ரயில்வே பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே மேலாளர் இது குறித்த முக்கியமான ஒரு அப்டேட்டை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே வருகிறது. முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்தியாவில் பல இடங்களில் இந்த வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேரடியாக வந்து துவக்கி வைக்கிறார்.

வந்தே பாரத் ரயிலை பொறுத்த வரை தற்போது தமிழகத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் ரூட்டிலும், சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோவை ரோட்டிலும் மட்டுமே இயங்கி வருகிறது. இதற்கிடையில் தற்போது சென்னை - விஜயவாடா இடையே புதிய வந்தே வாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான ஒரு ரயில் வரப்போவதை எற்கனவே மத்திய அமைச்சர் எல் முருகன் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். அப்பொழுதே இந்த ரயில் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மனதில் தொற்றிக்கொண்டது.

ஏற்கனவே இந்த நெல்லை- சென்னை இடையேயான இந்த ரயில் குறித்த பல முக்கியமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த ரயில் டிக்கெட் விலை எவ்வளவு என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தான் நெல்லைக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ரயில்வே பணிகளை பார்வையிட வந்தார்.
அப்பொழுது அவர் நெல்லை ரயில் நிலையத்தை மேம்படுத்த போவதாக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதை அறிவித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் நெல்லை ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல் நெல்லை நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை பணிகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது அந்தப் பணிகளையும் இவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்தபோது செய்தியாளர்கள் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் உறுதியாக வருகிறது என்றும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
இது மட்டுமல்லாமல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் வரும் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்து விடும் என்ற புதிய தகவலையும் தெரிவித்தார். இந்நிலையில் தீபாவளியை ஒட்டி வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட உள்ளதை தற்போது நெல்லை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையிலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் துறையில் மதுரை, திருச்சி, விழுப்புரம் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் படி செயல்பட இருக்கிறது. தமிழகத்திலேயே அதிக வருமானத்தை ஈட்டி தரும் ரூட் இது என்பதால் இந்த வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில் அதிக வேகத்தில் இயங்குவதால் அதற்கு தகுந்தவாறு போல் தண்டவாளங்களை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த காரணங்களுக்காக தான் வருமானச் மாதம் அறிவிக்கப்பட இருந்த வந்தே பாரத் ரயில் அக்டோபர் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
