தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ... ரொம்ப நாளா எதிர்பார்த்து இருந்தது!! இடையில் வரும் ஸ்டேஷன்ஸ் என்னென்ன?

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் தாம்பரம் - வேளச்சேரிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இந்த பகுதியில் மெட்ரோ வழித்தடம் புதியதாக வந்தால் சென்னையின் எந்தெந்த பகுதிகளை இணைக்கும் என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெட்ரோ ரயில் சேவை, நம் நாட்டில் பலர் பரவலாக பயன்படுத்தும் போக்குவரத்தாக வேகம் கண்டு வரும் ஒன்று. தற்போதைக்கு சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் என 15 முக்கிய நகரங்களில் மட்டும் தான் மெட்ரோ ரயில் சேவை உள்ளது என்றாலும், அந்த நகரங்களில் போக்குவரத்திற்காக மக்கள் பலர் விரும்பி பயன்படுத்தும் சேவையாக இது மாறி வருகிறது. அதுமட்டுமில்லாமல் 15 என்ற எண்ணிக்கையும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் நிலை உள்ளது.

தாம்பரம்-வேளச்சேரி இடையே மெட்ரோ... ரொம்ப நாளா எதிர்பார்த்தது

உதாரணத்திற்கு மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபால், தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா மற்றும் பீகார் தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், ஏற்கனவே மெட்ரோ ரயில் சேவையை கொண்டுள்ள நகரங்களிலும் சேவை வழிதடங்களை விரிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. குறிப்பாக, பெங்களூர் & மும்பையில் சுமார் 100கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல், நம் சென்னை மெட்ரோ சேவையும் ஏறக்குறைய 84கிமீ-க்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதையெல்லாம் வைத்தும் பார்க்கும்போது டயர்-1 நகரங்களின் எதிர்கால பிரதான போக்குவரத்து மெட்ரோவை நம்பியே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய வழித்தடமாக தாம்பரம் - வேளச்சேரி இடையே சேவையை துவங்க கடந்த பல மாதங்களாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வந்தது.

ஆனால் தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், குறிப்பாக வழித்தடத்தை அமைக்க ஏதுவான பகுதிகளில் பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்ட இடங்களும், கட்டடங்களும் இருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த வழித்தட சேவையை துவங்குவதை நிறுத்தி வைத்தது. சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான 2ஆம் கட்ட பணிகளில் ஒன்றாக இந்த வழித்தடம் உருவாக்கப்பட இருந்தது.

இவ்வாறு தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் வகுக்கப்பட்டு கிடப்பில் இருந்த நிலையில், தற்போது இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை கட்டமைப்பதற்கான ஆலோசனையில் மீண்டும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுப்பட ஆரம்பித்துள்ளனர். இதனால் விரைவில் தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையிலும் முன்பு முடிவு செய்யப்பட்டு, பின்னர் மோனோ ரயில் சேவை நிராகரிக்கப்பட்டது. ஆனால் மோனோ ரயில் சேவைக்காக திட்டமிடப்பட்ட இடங்களில் தான் தற்சமயம் மெட்ரோ ரயில் சேவை நிறுவப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது, தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் சேவை வந்தால், சேலையூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடைப்பட்ட மெட்ரோ நிலையங்கள் நிறுவப்படும். இந்த வழித்தடத்தின் மொத்த தொலைவு 15.5கிமீ ஆக இருக்கும்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளதை போன்று தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ சேவையை துவங்கும் பணிகள் வரும் ஆண்டுகளில் துவங்கவுள்ளன. இதில் முதலாவதாக கோயம்புத்தூரிலேயே மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான இடம் பார்க்கும் வேலைகளில் ஏற்கனவே அதிகாரிகள் இறங்கிவிட்டனர் எனவும் நமக்கு கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai new metro service between tambaram velachery
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X