யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறை ஒன்று, பொதுமக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது போக்குவரத்து விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து கொண்டே வரும் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக வாகன ஓட்டிகள் யாரும் குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது என அரசு விரும்புகிறது.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

குடிபோதையில் இருக்கும்போது வாகன ஓட்டிகள் சுய நினைவை இழந்து அதிகளவில் சாலை விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களுடன் பயணம் செய்பவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கும் சேர்த்தே பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

இதன் ஒரு பகுதியாக தமிழக தலைநகர் சென்னையில் புதிய போக்குவரத்து விதிமுறை ஒன்று தற்போது அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கமாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரிடம் மட்டும்தான் அபராதம் வசூலிக்கப்படும். அத்துடன் அவர் மீது மட்டும்தான் வழக்கு பதிவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

ஆனால் சென்னையில் இனி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருடன் சேர்ந்து பயணம் செய்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் அவருடன் பயணம் செய்பவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்று சென்னை மாநகர காவல் துறையினர் தற்போது அறிவித்துள்ளனர்.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருடன் சேர்ந்து பயணம் செய்பவர்கள் மீதும் இனி வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல் துறையினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். இன்று (அக்டோபர் 20) முதல் இந்த புதிய போக்குவரத்து விதிமுறை சென்னையில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இனி கவனமாக நடந்து கொள்வது நன்மை பயக்கும்.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமல்லாது, கார் போன்ற 4 சக்கர வாகனங்களுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும். இந்த புதிய விதிமுறை காரணமாக, குடிபோதையில் இருப்பவர்களுடன் பயணம் செய்வதற்கு மக்கள் தயங்கலாம் என காவல் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் குடிபோதையில் இருப்பவர்கள் வாகனம் இயக்குவதை மக்கள் தடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருடன் பயணம் செய்யக்கூடிய நபர்கள், குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவதுடன், வழக்கு பதிவும் செய்யப்படும் என்ற அறிவிப்பு முக்கியமான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

அத்துடன் சென்னையில் இனி சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் மற்றும் படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் குறையும் என காவல் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அறிமுகம் இல்லாத டிரைவர்களுடன் பயணம் செய்யும்போது இந்த புதிய விதிமுறை பின்பற்றப்படாது என சென்னை போக்குவரத்து காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

அதாவது ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது. ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் பயணம் செய்யும்போது டிரைவர் குடிபோதையில் இருந்தால், அவருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர் மீது மட்டும்தான் காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவும் செய்வார்கள்.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

சென்னையில் தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறை சமூக வலை தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்... தமிழ்நாட்டில் திடுதிப்புனு இப்படி ஒரு புதிய சட்டமா! கதிகலங்கி போன பொதுமக்கள்!

இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்த புதிய போக்குவரத்து விதிமுறை வரும் மாதங்களில் தமிழகம் முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சென்னை போக்குவரத்து காவல் துறையினர் இந்த புதிய நடவடிக்கை தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரிவியுங்கள்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Thursday, October 20, 2022, 12:45 [IST]
English summary
Chennai new traffic rules
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+