போலீஸ் இல்ல, கேமரா இல்லன்னு இனி ஹெல்மெட் போடம போகாதீங்க! அப்புறம் வீடு தேடி வந்து ஃபைன் போடுவாங்க! எப்படி
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டாலே போலீசார் அவர்கள் மீது ஆக்ஷன் எடுப்பது தற்போது தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் ஏகப்பட்ட நபர்களுக்கு இப்படியான சமூகவலைத்தள ஆதாரங்கள் மூலம் ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி காணலாம் வாருங்கள்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மோட்டார் வாகன சட்டம் மூலம் தான் சாலை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. கடுமையான குற்றங்களுக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது. இப்படியாக மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் மிக முக்கியமான சட்டமாக இருக்கிறது.இந்நிலையில் மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

மத்திய மாநில அரசுகள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த போலீஸ், போக்குவரத்து துறைஎன பல துறைகளை நியமித்து அதற்கான அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதனால் போலீசார் அவ்வப்போது சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாலை விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இது நாம் காலம் காலமாக பார்த்து வரும் ஒரு நிகழ்வு தான். ஆனால் சமீபத்தில் சென்னை இப்படியாக சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாலையில் ஆங்காங்கே போலீசார் வாகன தணிக்கை செய்து சாலைவிதிமுறைகளை மீறுபவர்களை ஒரு பக்கம் பிடித்தாலும், இன்னொரு பக்கம் ஆன்லைன் மூலமே சென்னை போலீசார் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீண்ட நாட்களாக இப்படியாக செய்யப்பட்டு வந்தாலும் சமீபத்தில் இப்படியான புகார்கள் மீதுஅதிகம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சாலையில் ஒருவர் வாகனத்தில் செல்லும் போது விமுறைகளை மீறி சென்றால் அவரை யார் வேண்டுமானாலும் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் சென்னை போலீசாரை டேக் செய்தால் அந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியாக ஒருவர் தவறு செய்தால் அவரது புகைப்படம், வீடியோ ஆகியவற்றையே ஆதாரமாக போலீசார் எடுத்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
இப்படியாக போலீசாரிடம் ஆதரத்தை சமர்ப்பிக்கும் போது சம்பவம் நடந்த இடம் நாள்,நேரம் ஆகிவற்றை குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிட்டால் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதலில் இந்த தகவல் மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் அண்மை காலமாக இப்படியாக இடம் மற்றும் நாள்/நேரம் இல்லாமல் வரும் புகார்களுக்கு போலீசார் பொதுவெளியிலேயே விளக்கம் கேட்கவும் தற்போது மக்கள் புகார் செய்யும் போதே இந்த தகவல்களை கொடுக்க துவங்கிவிட்டனர்.
சமீபத்தில் நடிகர் விஜய் கார் டிராஃபிக் சிக்னலில் நிற்காமல் போனது. இந்தவீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலர் இதில் சென்னை போலீசாரை டேக் செய்து இடம் மற்றும் நேரத்துடன் புகாரை அளித்தனர். அதன் அடிப்படையில் நடிகர் விஜய்க்கு ரூ500 அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல சமீபத்தில் அமைச்சர் பொன்முடியின் காரும் சிக்னலில் நிற்காமல் சென்றது.
இந்த வீடியோவையும் நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இப்படியாக பெரிய பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை கேமரா கண்ணில் சிக்கிவிட்டால் இனி அபராதம் தான். எப்படியும் தப்பிவிடலாம் என நினைத்து சாலையில் விதிமுறைகளை மீறி பயணிக்க முடியாது.
போலீசாரும் இல்லை, கேராவும் இல்லை அதனால் ஹெல்மெட் அணிய வேண்டாம், செல்போனில்பேசிக்கொண்டே வாகனம் ஓட்டலாம் என நீங்கள் நினைத்தால் உங்கள் வீடு தேடி அபராத ரசீது வரும். அதன் பின் அதை செலுத்த நீங்கள் கோர்ட்டிற்கு செல்ல வேண்டும். அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை போலீசார் இப்படியாக போக்குவரத்து சட்டங்களில் கடுமையாக நடந்து கொள்வது நிச்சயம் வரவேற்க்கதக்கது. தொடர்ந்து இதை செய்வதால் மக்களுக்கு சாலைகளில் விதிமுறைகளை ஏன் மீறக்கூடாது என்பது குறித்த புரிதலும், அக்கறையும் வரும் சாலைகளில் விதிமுறைகளை பின்பற்றி பயணம் செய்வார்கள்.


Click it and Unblock the Notifications








