85 புதிய டூ-வீலர்களை போலீஸ்களுக்கு வழங்கிய முதலமைச்சர்.. ஒட்டுமொத்தமா எவ்ளோ செலவு பண்ணியிருக்காங்க தெரியுமா?..

சென்னை காவல்துறையின் பயன்பாட்டில் புதிதாக 85 இரண்டு சக்கர வாகனங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. 40 பைக்குகளும், 45 ஸ்கூட்டர்களே இணைக்கப்பட்டு இருக்கின்றன. ரோந்து மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஆண் காவலர்களின் பயன்பாட்டிற்காக பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125) பைக் மாடலும், பெண் போலீஸார்களுக்கு டிவிஎஸ் ஜுபிடர் 125 (TVS Jupiter 125) ஸ்கூட்டருமே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர்கள் பிரத்யேகமாக மகளிர் உதவிக்காக பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக பிங்க் நிறத்தால் ஸ்கூட்டர் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், 'மகளிர் உதவி எண் 1091' என்கிற வாசகமும் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, ஸ்கூட்டர் மற்றும் பைக் இரண்டிலும் காவலர்களுக்கு உதவும் வகையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Chennai police two-wheelers

குறிப்பாக, பல்சர் 125 பைக்குகளில் ஒலிப்பான்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக சிவப்பு நிற லைட் (police beacon)-ம் அந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி காவல் மற்றும் சென்னை போலீஸ் ஆகிய ஸ்டிக்கர்களும் இந்த வாகனங்களில் இடம் பெற்று இருக்கின்றன. இத்தகைய வாகனமே சென்னை போலீஸில் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விலை மற்றும் எஞ்சின் விபரங்கள்: ரூ. 85,114 என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த பைக் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றம் கொண்ட டூ-வீலரே இதுவாகும்.

Chennai police adds 85 new two-wheelers

இந்த பைக்கில் 124.4 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவல் இன்ஜெக்டட், ஏர் கூல்டு மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 11.6 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ முதல் 110 கிமீ ஆகும்.

டிவிஎஸ் ஜுபிடர் 125 ஸ்கூட்டரின் விலை மற்றும் எஞ்சின் விபரங்கள்: ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ் களமிறக்கிய ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட், டுஸ்க் மற்றும் டிரம் அலாய் ஆகியவையே அவை ஆகும்.

இதன் ஆரம்ப விலை ரூ. 86,405 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஸ்கூட்டரில் 124.8 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 6.0 KW பவரையும், 10.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த தரமான டூ-வீலர்களே சென்னை போலீஸ் பயன்பாட்டில் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 74.8 லட்சம் என கூறப்படுகின்றது. பொதுமக்களின் அழைப்புகளுக்கு உடனடியாக சென்று உதவிடவும், ரோந்து பணி செய்யவும் காவலர்கள் இந்த வாகனங்களையே வரும் நாட்களில் பயன்படுத்த இருக்கின்றனர். இந்த வாகனங்களை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பச்சை கொடி அசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின்போது தமிழக தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகியோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக சென்னை போலீஸாரின் பயன்பாட்டில் டிவிஎஸ் அப்பாச்சி பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே பஜாஜ் பல்சர் மற்றும் டிவிஎஸ் ஜுபிடர் ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 24, 2024, 17:34 [IST]
English summary
Chennai police boosts patrol with new two wheelers
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+