சென்னையில் காணாமல் போன ஸ்கூட்டரை 30 நிமிடத்தில் கண்டுபிடித்த போலீசார்! உங்க வண்டிய காப்பாத்த இதை பண்ணுங்க!

சென்னையில் காணாமல் போன ஆக்டிவா ஸ்கூட்டரை சென்னை போலீசார் 30 நிமிடத்தில் கண்டுபிடித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. வாகன திருட்டு மிக மோசமாக நடந்து வரும் காலத்தில் சென்னை போலீசாரின் இந்த துரிதமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். பலர் இந்த வாகனம் எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டது என ஆச்சரியமடைந்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகன திருட்டு என்பது மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. பொது வெளியில் வாகனத்தை ஒரு நிமிடம் கூட நிறுத்தி செல்ல பயமாக இருக்கிறது. திரும்பி வந்து பார்க்கும் போது வாகனம் திருடப்பட்டு விடுகிறது. வாகன திருட்டு அதிகமாக நடக்கும் நிலையில் இதை தடுக்க பல்வேறு தொழிற்நுட்பங்களும் யுக்திகளும் வந்துவிட்டாலும் இந்த திருட்டை தடுக்க முடியவில்லை. திருடர்களும் அதற்கு ஏற்றார் போல அப்டேட்டாகி விடுகின்றனர்.

Chennai police Scooty Rescue

இந்நிலையில் சென்னையில் மைலப்பூர் பகுதியில் சமீபத்தில் ஒரு வாகன திருட்டு நடந்தது. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஒருவர் தன் குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக தனத ஆக்டிவா ஸ்கூட்டரை பள்ளி வாசலில் ஒரமாக நிறுத்திவிட்டு பள்ளிக்குள் குழந்தையை அழைத்து வர சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்ப்பதற்குள் அவர் நிறுத்தி சென்ற ஆக்டிவா ஸ்கூட்டரை காணவில்லை.

இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள போலீசில் புகார் அளித்தார். புகார் அளித்த 30 நிமிடங்களில் போலீசார் திருடப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டரை கண்டுபிடித்து அவரிடமே ஒப்படைத்தனர். வாகன திருட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பலருக்க ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 30 நிமிடத்தில் திருடப்பட்ட வாகனம் எப்படி கண்டு பிடிக்கப்பட்டது என பலர் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

Chennai police Scooty Rescue

வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

வாகனம் திருடப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் வாகனம் திருடப்பட்ட நேரத்தை பார்த்தனர். வாகனம் சில நிமிடங்களுக்கு முன்பே திருடப்பட்டிருப்பதால் திருட்டு நடந்த இடத்திலிருந்து வெகு தூரம் சென்றிருக்க முடியாது என யோசித்து உடனடியாக வயர்லெஸ் மூலம் சுற்று வட்டார பகுதியில் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் உள்ள போலீசாருக்கு வயர்லெஸ் மூலம் வாகனத்தின் பதிவெண் தெரிவிக்கப்பட்டு அந்த ஸ்கூட்டர் திருடப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் இந்த வாகனத்தில் இருவர் வருவதை பார்த்து வாகனத்தை மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும். இவர்கள் தப்பியோட முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் வாகனத்தை திருடியுள்ளார்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக வாகனத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த நிலையில் வாகனத்தை திருடியவர்களையும் கைது செய்தனர்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டி முக்கியமான விஷயம் வாகன திருட்டு எந்த தருணத்தில் வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் எப்பொழுதும் நாம் உஷாராக இருக்க வேண்டும். வாகனத்தை எப்பொழுது பார்க் செய்தாலும் லாக் செய்ய வேண்டும். இது வாகன திருட்டை பெரும் அளவில் குறைக்கிறது. அடுத்ததாக வாகனங்களில் முடிந்தளவு ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தவேண்டும். வாகனம் திருடப்பட்டாலும் ஜிபிஎஸ் மூலம் அதை கண்டறிய முடியும்.

அதையும் மீறி உங்கள் வாகனம் திருடப்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாகனம் திருடப்பட்ட பிறகு நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் வாகனம் திரும்ப கிடைக்கும் வாயப்ப்பை குறைத்துக்கொண்டே இருக்கிறோம் என அர்த்தகம். வாகனம் திருடப்பட்டு பொது சாலையில் இருக்கும் வரை தான் கண்டுபிடிக்க முடியும். வாகனம் திருடப்பட்டவரின் இடத்திற்க சென்ற விட்டால் வாகனத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பனை செய்து விடுவார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் நீங்கள் வாகனம் திருடப்படும் பிரச்சனையில் கவனமாக இருக்க வேண்டும். வாகனம் திருடப்பட்டது தெரிந்தவுடன் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை நாட வேண்டும். வாகனம் திருட்பட்டால் கண்டுபிடிக்க முடியாது என கவனக்குறையாகவும் இருக்க வேண்டாம். உங்கள் வாகனம் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 7, 2025, 12:20 [IST]
English summary
Chennai police scooty rescue know how it happened
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+