சென்னை மின்சார ரயில்களில் பெண்களுக்கு செம அப்டேட்! வரப்போகும் புதிய மாற்றம்!

சென்னையில் இயங்கி வரும் எலெக்ட்ரிக் ரயில் பெண்களுக்கான பெட்டியை முன் பகுதியில் இருந்து மாற்றி நடுப்பகுதியில் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த செல்போன் பரிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை புறநகர் பகுதியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு வழிதடத்திலும் வேளச்சேரி வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் வழித்தடத்திலும் கும்மிடிப்பூண்டி அரக்கோணம் வழிதடத்திலும் தினசரி 600க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Chennai suburban train ladies coach

இந்த ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களிலும் அரசு விடுமுறை தினங்களிலும் இந்த ரயில்கள் எல்லாம் நிரம்பி வழிந்த வண்ணம் தான் சென்று வருகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ரயிலில் முன்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரீத்தி என்ற இளம் பெண் இந்திரா நகர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் வந்து இறங்கினார். அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் போல நடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த இரண்டு திருடர்கள் ப்ரீத்தியின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்.

அப்பொழுது அவர்கள் பிரீத்தியை தள்ளி விட்டனர். அப்பொழுது கீழே விழுந்த பிரீத்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ப்ரீத்தியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்தனர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே கோட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.

இதற்கு முக்கியமான காரணம் கூட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பெண்களுக்கான ரயில் பெட்டி இருப்பதால் அப்பகுதியை திருடர்கள் சுலபமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இனி சென்னை புறநகர் ரயில்களில் உள்ள பெண்களுக்கான பெட்டியை ரயிலின் முன்பக்கம் இல்லாமல் மத்தியில் அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே கோட்ட பாதுகாப்பு பிரிவில் உள்ள அதிகாரிகள் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர் அதன்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புறநகர் ரயில்களில் உள்ள பெண்களுக்கான பெட்டி எல்லாம் முன்பக்கம் இல்லாமல் மத்திக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.

இப்படி மாற்றுவதால் பெண்களுக்கான பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பயமில்லாமல் இரவு நேரங்களிலும் மின்சார ரயில்களை பயன்படுத்த முடியும். இது மட்டுமல்லாமல் சென்னை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தெரியப்படுத்தவும் ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்களில் அதிகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகிறது. திருடர்கள் பல பெண்களைக் குறி வைத்து தான் குற்றங்களை நிகழ்த்துகின்றனர். இதனால் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரயில்வே போலீசார் பிரிவிலும் பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் பணி வழங்க வேண்டும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 16, 2023, 14:14 [IST]
English summary
Chennai railway to relocate ladies coach in trains middle area
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+