பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

உரிய ஆவணமின்றி இயங்கும் பைக் டாக்ஸிகளைப் பறிமுதல் செய்யும் பணியில் சென்னை ஆர்டிஓ அதிகாரிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

சென்னை உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் கால் டாக்ஸி சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த சேவையின் மூலம் விரும்பிய இடத்திற்கு, வாகனங்களைப் புக் செய்து குறுகிய காலகட்டத்தில் செல்ல முடியும். இதற்காக ஆன்லைன் அல்லது மொபைல் போன் ஆப்மூலம் தேவைக்கேற்ப வாகனங்களைப் புக் செய்து கொள்ளலாம்.

முன்னதாக இந்த சேவையில் கார், ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக இந்த சேவையில் பைக்குகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கார்கள் செல்ல முடியாத குறுகிய சாலைக்குள் பைக்குகள் செல்வதாலும், காரைக் காட்டிலும் குறைவான கட்டணத்தை விதிப்பதாலும் இந்த சேவையைப் பலரும் பன்படுத்த ஆரம்பித்தனர்.

பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

அவ்வாறு, பைக் டாக்ஸி சேவையில் சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்ட பைக்குகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சேவையில், மூன்று கிலோ மீட்டருக்கு 15 முதல் 20 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கார் மற்றும் ஆட்டோவைக் காட்டிலும் குறைவான கட்டணம்.

தற்போது தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல இளைஞர்கள் இந்த கால் டாக்ஸி சேவையில் தங்களை இணைத்துக் கொண்டு சொற்பமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். ஆனால், இந்த பைக் டாக்ஸி சேவையால், கார் மற்றும் ஆட்டோவின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருவதாக கார் ஓட்டுநர்கள் புகார் கூற ஆரம்பித்துள்ளனர்.

பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, கால் டேக்ஸி ஓட்டுநர்கள் சார்பாக போக்குவரத்து இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கடந்த மாதம் புகார் அளித்தனர். இந்த புகாரைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் இப்பிரச்னை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், கேகே நகர் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் வாடிக்கையாளர்களைப் போல் பைக் டேக்ஸியை புக் செய்து, உரிய ஆவணமின்றி பைக் டாக்ஸியில் இணைந்திருக்கும் பைக்குகளைப் பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர்.

பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

பெங்களூரு மற்றும் கோவாவில் இந்த சேவை மிகவும் பிரபலமானது, இருப்பினும் தமிழ்நாட்டில் இந்த சேவை சட்டவிரோதமானது என்று போக்குவரத்துத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கிறார். அவ்வாறு, மோட்டார் வாகன சட்டம் 1989-ன்படி எந்தவொரு சட்டமும் பைக்கினை இந்த சேவையில் ஈடுபடுத்த இடம் கொடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இதுபோன்று இருசக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவதற்கான சட்டம் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

பொதுவாக, இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி பைக்குகளை டேக்ஸியாக இயக்குவது குற்றம் எனக் கூறப்படுகிறது. மேலும், இருசக்கர வாகனங்களைப் பொதுசேவையில் இயக்க வேண்டுமானால், சில குறிப்பிட்ட உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, பொதுசேவையில் ஈடுபடும் வாகனங்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

அதேபோல், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கென தனி காப்பீடு இருக்க வேண்டும். மேலும், தனி சாலை வரி, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகன காப்புச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல நடைமுறைகள் இதில் உள்ளன. ஆனால், இதில் எந்த விதிமுறையையும் கடைப்பிடிக்காமல் தனியார் வாகனங்களை பொதுபயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வருவது தெரியவந்தது.

பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

ஆகையால், விதியைமீறி இயக்கப்பட்ட பைக் டாக்ஸிகளை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் பறிமுதல் செய்யும் பணியில் போக்குவரத்துத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு, இதுவரை சென்னையில் மட்டும் 43க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பைக் டாக்ஸிகளுக்கு செக் வைக்கும் சென்னை போலீஸ்: தொடரும் பைக் டாக்ஸி பறிமுதல்...!

மேலும், இதுபோன்று டாக்ஸி சேவையில் இயக்கப்படும் பைக்குகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாக அண்ணாநகர், பூந்தமல்லி, கேகேநகர் மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் 18க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2019, 18:25 [IST]
English summary
Chennai RTO's Continues To Seize Bike Taxi's. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+