ஏதோ வட நாட்டுல இல்ல, சென்னையில் டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணித்தவர்களிடம் ஒரே நாளில் ரூ27.16 லட்சம் அபராதம்!
சென்னையில் ஒரே நாளில் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூபாய் 27.19 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் மக்கள் மத்தியில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்கும் பழக்கம் அதிகமாக இருப்பதாக கருதியதால் அவ்வப்போது நடக்கும் ரெய்டுகளில் இந்த அபராதம் வசூல் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு முதல் சென்னை பீச் ரோட்டிலும் பீச் முதல் வேளச்சேரி ரூட்டிலும் அரக்கோணம் முதல் சென்னை சென்ட்ரல் ரூட்டிலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை பொதுமக்கள் மாணவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் பயன்படுத்தி வருகின்றனர் அதிகாலை 4 மணி முதல் துவங்கும் இந்த சேவை நள்ளிரவு வரை இருக்கும்.

இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் அல்லது சீசன்பாஸ் எடுத்து பயணம் செய்ய வேண்டும். இந்த ரயில்களில் அதிகமான மக்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்கின்றனர். மேலும் இந்த ரயிலை பயன்படுத்த வரும் பொதுமக்கள் மத்தியில் ரயில்வே விதிமுறைகளை மீறும் செயல் அதிகம் நடந்து வருவதாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது மிகப்பெரிய அளவில் சோதனைகளை நடத்தி வருகிறது.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதியும் சென்னை முழுவதும் உள்ள புறநகர் ரயில்நிலையங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்பொழுது ஒரே நாளில் ரூபாய் 20.19லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. அதன் பின்பும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் ரயில் நிலையங்களில் சட்ட விதிமுறைகளை மீறும் நபர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை என்பதால் மீண்டும் இந்த சோதனையை நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி கடந்த 9ம் தேதி சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் மிகப்பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதற்காக சுமார் 535 டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ரயில் டிக்கெட் இன்றி பயணித்த பயணிகள் மற்றும் ரயில் நிலையங்களில் விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி ஒரே நாளில் 27.16 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவில் நடந்த இந்த சோதனையில் மொத்தம் 258 வழக்குகள் ரயிலில் முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்த தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டது இதுபோக உரிய கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை கொண்டு போனது தொடர்பாக 19 வழக்குகளும் மேலும் ரயிலில் புகை பிடித்தல் குப்பை போடுதல் உள்ளிட்டவை தொடர்பாக 414 வழக்குகளும் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழக்கிறும் அதன் தன்மையை பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டது.

இப்படியாக ஒரே நாளில் 27.16 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் புறநகர் ரயில் சேவையை அதிகமான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இதில் பலர் விதிமுறைகளை மீறி பயணம் செய்ததால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. புறநகர் ரயில் பொறுத்தவரை தற்போது டிக்கெட் கவுண்டரில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. செல்போனிலேயே யூடிஎஸ் ஆப் மூலம் டிக்கெட் விலை எடுத்துக் கொள்ள முடியும்.
இருந்தாலும் மக்கள் மத்தியில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால் யாரிடமும் சிக்கி விட மாட்டோம் என ஒரு குருட்டு தைரியம் இருப்பதால் அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் விதமாக அவ்வப்போது இந்த மாஸ் சோதனை நடந்து வருகிறது. இதில் சட்ட விரோதமாக பயணிக்கும் மக்கள் பலர் சிக்குகின்றனர். மக்கள் மத்தியில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

ஆனால் அதுவரை அவ்வப்போது இப்படியான மாஸ் சோதனைகள் நடத்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் டிக்கெட் எடுக்கும் நடைமுறையை எளிதாக்கவும் பல்வேறு விஷயங்களை கையாண்டு வருகிறது. இதுபோக புகைபிடித்தல் குப்பை போடுதல் உள்ளிட்ட விஷயங்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை புறநகர் பகுதியில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் எலெக்ட்ரிக் ரயில் சேவையை நம்பியே தங்கள் அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்துவது செய்வதற்கு முன் சில அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டியதாக உள்ளது. ரயில் பயணிகள் அதிக கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். ரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் ஆலோசனை செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications









