சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் எங்கு எல்லாம் நிற்கும் தெரியுமா?

நெல்லை சென்னை இடையே அறிமுகமாக உள்ள வந்தே பாரத் ரயிலின் துவக்க விழா மேலும் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த ரயில் செயல்பாட்டிற்கு வந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக தற்போது இந்த ரயிலின் கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் வந்தே பாரதத் ரயில்கள் மிக பெரிய வரவேற்புகிடையில் செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் ஒடும் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப்பெரிய அளவிலான புக்கிங் குவிகிறது. ஏராளமான மக்கள் இந்த வந்தே பாரத் ரயில் பயன்படுத்த விரும்பி வருகின்றனர். விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் இதன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்பதால் இதை விரும்பி வருகின்றனர்.

tirunelveli chennai vande bharat express stoppings

தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர்விற்கும், சென்னை எழும்பூரில் இருந்து ஈரோடு வழியாக கோயம்புத்தூர் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சி மதுரை வழியாக திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா குறித்த பல்வேறு தகவல்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.

இந்த மாத இறுதிக்குள் சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் தனது இயக்கத்தை துவக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மேலும் தாமதமாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tirunelveli chennai vande bharat express stoppings

தற்போது சென்னையிலிருந்து திருநெல்வேலி இடையே சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் தற்போது சென்னை- நெல்லை இடையே சுமார் 10 மணி நேரம் வரை பயணம் செய்கின்றன. வந்தே பாரத் ரயில் செயல்பாட்டிற்கு வந்தால் இந்த பயண நேரம் 8 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கால அட்டவணை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் இதே வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலுக்காக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரம் மக்கள் மத்தியில் இந்த ரயில் சென்னையில் எந்த ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சென்னையிலிருந்து தென்மாவட்டத்திற்கு வரும் ரயில்கள் எல்லாம் சென்னை எழும்பூரிலிருந்து தான் தற்போது கிளம்பி வருகின்றன. அதேபோல இந்தரிடம் எழும்பூரில் இருந்து கிளம்பினால் தாம்பரம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிற்குமா அல்லது எழும்பூர் சென்று தான் ஏற வேண்டுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

தென் மாவட்ட மக்கள் பலர் சென்னையில் பணியாற்றி வருகின்றனர் அவர்கள் தாம்பரம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று செல்வதால் தான் வசதியாக இருக்கும். இதனால் வந்தே பாரத் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் செய்திகள் உலா வந்தாலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வெளியாகவில்லை அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்த பின்பே இந்த ரயிலின் கால் அட்டவணை மற்றும் தேதி குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 19, 2023, 16:59 [IST]
English summary
Chennai tirunelveli vande bharat express stoppings timings start date and other details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+