சென்னையில் இருந்து புதிய வந்தே பாரத் ரயில்... இனி இவ்ளோ சீக்கிரமா திருப்பதி போயிரலாமா

சென்னை திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் பயன்படுத்துவார்கள் என்பதால் இந்த ரூட்டில் புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎஃப்-ல் தான் கட்டமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது இந்த ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் வெளிநாட்டில் உள்ள புல்லட் ரயில்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறது.

சென்னை - திருப்பதி வந்தேபாரத் ரயில் வரப்போது! எப்போ தெரியுமா?

தற்போது தமிழகத்தை பொறுத்தவரை சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருவிற்கும் சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக சென்னையில் இருந்து நெல்லை வரை புதிய ரோட்டில் வந்தே பாரத் ரயில் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த வந்தே பாரத் ரயிலுக்கான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. தென்னக ரயில்வே சென்னையிலிருந்து திருப்பதிக்கு வந்தை பாரத் ரயிலை இயக்க திட்டமிட்டு வருவதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளன. சென்னை- நெல்லைக்கு அடுத்ததாக இந்த சென்னை-திருப்பதி வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை - திருப்பதி வந்தேபாரத் ரயில் வரப்போது! எப்போ தெரியுமா?

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இந்தியா முழுவதும் இயக்க மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில் அடுத்தடுத்த புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தும் போது இந்த சென்னை-திருப்பதி ரயிலும் அதில் முக்கிய இடம் பெற்றது. இந்நிலையில் இந்த ரயிலே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்புதல் கூறப்பட்டுள்ளது.

சென்னை - திருப்பதி இடையே தற்போது குறைந்தபட்சமாக மூன்று மணி நேரம் 25 நிமிடங்கள் வரை ரயில்கள் பயணித்து வருகின்றன. வந்தே பாரத் ரயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தால். பயண நேரம் வெகுவாக குறையும். மூன்று மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் படி இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.

சென்னை - திருப்பதி வந்தேபாரத் ரயில் வரப்போது! எப்போ தெரியுமா?

இந்த ரயிலுக்கான ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையிலிருந்து திருப்பதிக்கு ரயில் புறப்படும் நேரம் மற்றும் திருப்பதியில் இருந்து சென்னைக்கு ரயில் புறப்படும் நேரம், கட்டண விபரங்கள், பயண நேரம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும். மேலும் ஒரு நாளுக்கு எத்தனை டிரிப் இந்த ரயில் பயணிக்கிறது என்ற தகவல்களும் வெளியிடப்படும்.

சென்னை-திருப்பதி இடையே பயண தூரம் குறைவாக இருப்பதால் ஒரு நாளுக்கு அதிக முறை இந்த ரயில் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் அதிகமான பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி பயன்பெற முடியும். வந்தே பாரத் ரயில் ரூட்டில் இல்லையே அதிக வசூலை குவிக்கும் கூட்டாக கூட இது மாறக்கூடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை முதல் திருப்பதி வரை தினமும் ஏராளமான ரயில்களும் பஸ்களும் பயணித்து வந்தாலும் கூட்டம் அனைத்து வாகனங்களிலும் அதிகமாக இருக்கிறது. திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்பவர்கள் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருப்பதால் இந்த ரூட்டில் நிச்சயம் வந்தே பாரத் ரயிலுக்கான தேவை இருக்கிறது. இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள்

More from DriveSpark

Article Published On: Monday, July 3, 2023, 16:49 [IST]
English summary
Chennai tirupati route railways to launch vande bharat train
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X