நடுரோட்டில் தீபிடித்து எரிந்த எலெக்ட்ரிக் பஸ்! உள்ள பயணித்தவர்களின் கதி என்ன ஆனது தெரியுமா?

சென்னையில் எலெக்ட்ரிக் பஸ் ஒன்று நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு விபத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் பஸ்ஸின் பேட்டரியில் தீப்பிடித்து அது பஸ் முழுவதும் பரவி பெரும் தீ விபத்தாக மாறியது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

சென்னையிலிருந்து பெங்களூரு வரை தனியார் நிறுவனம் சார்பில் எலக்ட்ரிக் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை சென்னையில் இருந்து கிளம்பி பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ் சரியாக பூந்தமல்லியை அடித்த குயின்ஸ்லாந்து பகுதிக்கு வரும்போது பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் இல்லாமல் தப்பினர்.

chennai electric bus fire

இந்த எலெக்ட்ரிக் பஸ் சரியாக பூந்தமல்லி தாண்டி வந்து கொண்டிருந்தபோது சாலையில் இந்த பஸ்ஸுக்கு முன்பு சென்ற வாகனம் திடீரென சடன் பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த எலெக்ட்ரிக் பஸ்சின் டிரைவரும் சடன் பிரேக் பிடித்துள்ளார். அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்று இந்த பக்கத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்து நடந்த உடன் பஸ்ஸில் உள்ள பயணிகள் எல்லாம் சுதாரித்துள்ளனர், என்ன நடந்தது என ஒரு நிமிடம் பதறியுள்ளனர். அப்பொழுது பஸ்ஸின் பின்பகுதியில் இருந்து புகை ஒன்று கிளம்பியுள்ளதை கண்டுள்ளனர். இதை கண்டதும் பஸ் ஆப்ரேட்டர்கள் உடனடியாக பயணிகளை பஸ்ஸிலிருந்து பத்திரமாக கீழே இறக்கினார். பஸ் ஏதோ பெரிய ஆபத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

chennai electric bus fire

உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். நல்ல வேலையாக இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் பயணிகள் அவசர அவசரமாக பஸ்ஸிலிருந்து இறங்கியதால் அவர்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்க முடியவில்லை. அவர்களது உடைமைகள் எல்லாம் பஸ்ஸில் எரிந்து நாசம் ஆகின.

பஸ்ஸில் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம் இந்த பஸ்ஸின் பின்பகுதியில் தான் பேட்டரிக்கான சர்க்யூட்கள் எல்லாம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸ்ஸில் பின்பக்கம் மற்றொரு தனியார் பஸ் வந்து மோதிய வேகத்தில் இந்த சர்க்யூட்டில் பாதிப்பு ஏற்பட்டு அது பேட்டரியை தீப்பற்ற வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. அதற்கு முன்னரே அப்பகுதியில் உள்ள தனியார் டேங்கர் மூலம் தண்ணீர் வர வைக்கப்பட்டு அந்த பஸ்ஸில் இருந்து கொண்டிருந்த தீயை அனைத்தும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பஸ்ஸில் பெரும்பாலான பாகங்கள் தீ விபத்தில் கருகி சாம்பல் ஆகியது. பஸ் அடுத்து தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் இருந்ததால் பஸ்ஸில் இருந்த பயணிகள் வேறு பஸ்ஸிற்கு மாற்றப்பட்டு அவர்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் பின்பு கிரேன் மூலம் இந்த பஸ் போக்குவரத்துக்கு இந்த இடைஞ்சல் இல்லாமல் அப்புறப்படுத்தப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எலெக்ட்ரிக் பஸ் தீபிடித்து எரிந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அவ்வப்போது தீவிபத்தில் சிக்குவது மக்களை மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகன விற்பனை பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் அதிகமாகி வந்தாலும், அவ்வப்போது இவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை பார்க்கும்போது மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக்கல் வாகனங்களில் பயணிப்பதும் வாங்குவதும் குறித்து மிகப்பெரிய அச்சம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட இந்த சம்பவம் எலெக்ட்ரிக் வாகன டிசைனில் உள்ள பிரச்சனை என தெரிகிறது. இந்த பிரச்சனைகள் இனி எலெக்ட்ரிக் வாகனங்களில் இல்லாதவாறு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 22, 2023, 19:38 [IST]
English summary
Chennai to bengaluru electric bus fire passengers unharmed in escape
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+