சென்னையில பஸ் ஏறிப் படத்தை போட்டா படம் கிளைமேக்ஸ் வரதுக்குள்ள பஸ் பெங்களூருக்கு போய்விடும்!

சென்னை- பெங்களூரு இடையே கட்டமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு 2 மணி நேரத்தில் சென்று சேர முடியும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மத்திய நிதியமைச்சர் நிதின்கட்கரி அலுவல் பணி காரணமாகப் பெங்களூருவிற்கு வந்திருந்தார். பெங்களூருவில் அவர் அங்கு நடந்து வரும் பல தேசிய நெடுஞ்சாலை குறித்த பணிகளை ஆய்வு செய்தார். முக்கியமாகப் பெங்களூரு -மைசூரு இடையே நடக்கும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். அடுத்தாக சென்னை - பெங்களூரு இடையே நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

சென்னையில பஸ் ஏறிப் படத்தை போட்டா படம் கிளைமேக்ஸ் வரதுக்குள்ள பஸ் பெங்களூருக்கு போய்விடும்!

பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை

இந்த ஆய்விற்குப் பிறகு அவர் பெங்களூரு-மைசூரு இடையே நடக்கும் தேசிய நெடுஞ்சாலை பணி வரும் பிப்ரவரி மாதம் முடிந்துவிடும். இதற்கான திறப்பு விழாவிற்குப் பிரதமர் மோடி அல்லது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைக்கப்படுவார்கள் எனக் கூறினார். இந்த பெங்களூரு- மைசூரு இடையே தற்போது 6 வழிச் சாலை இருக்கிறது. இதை 10 வழிச் சாலையாக மாற்றும் பணி தான் தற்போது நடந்து வருகிறது. இந்த நெடுஞ்சாலை ஊருக்கு வெளியே உள்ள பகுதியில் 10 வழிச் சாலையாகவும் ஊருக்குள்ளே 6 வழிச் சாலையாகும் இருக்கப்போகிறது.

இதற்கான பணிகள் 99 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் பெங்களூருவிலிருந்து மைசூரு வெறும் 1 மணி நேரம் 10 நிமிடத்தில் பயணிக்க முடியும். இந்த இரு நகரங்களுக்கும் இடையே சுமார் 142 கி.மீ தூரம் இருக்கிறது. இந்த சாலை இரண்டு கட்டணமாக அமைக்கப்படுகிறது. பெங்களூரு- நிடாகட்டா, நிடாகட்டா- மைசூரு என அமைக்கப்படுகிறது.

சென்னையில பஸ் ஏறிப் படத்தை போட்டா படம் கிளைமேக்ஸ் வரதுக்குள்ள பஸ் பெங்களூருக்கு போய்விடும்!

இந்த சாலை பெங்களூரு- மைசூரு இடையே பயணிப்பவர்கள் மட்டுமல்ல பெங்களூருவிலிருந்து குடகு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணிப்பவர்களுக்கும் இந்த பாதை உபயோகமாக இருக்கும். அடுத்தாக இவர் பெங்களூரு- சென்னை இடையே அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையை ஆய்வு செய்தார். அந்த தேசிய நெடுஞ்சாலை சுமார் 285.3 கி.மீ தூரத்திற்கு 4 வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள பாதையைவிடக் குறைவான பயண நேரத்தைக் கொடுக்க உருவாக்கப்பட்டுள்ளது.

பாரத் மாலா திட்டம்

தற்போது உள்ள பாதை அதிகமாக முக்கிய நகரங்கள் மட்டும் கூட்ட நெரிசல் கொண்ட பாதை வழியாகக் கடந்து செல்வதால் பயண நேரம் அதிகமாகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் தான் இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலைக்கான பணிகள் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2மணி நேரம்

இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை- பெங்களூருவிற்கு தற்போது இருக்கும் 5-6 மணி நேரப் பயணம் இரண்டு மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போகப் பெங்களூருவில் சாட்டிலைட் ரிங் ரோடு ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த ரோடு மொத்தம் 288 கி.மீ தூரத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 243 கி.மீ தூரம் கர்நாடகாவிலும் 45 கி.மீ தூரம் தமிழ்நாட்டின் ஓசூர் மாவட்டத்திலும் செயல்படுத்தப்படவுள்ளது.

சாட்டிலைன் ரிங் ரோடு

இந்த சாட்டிலைன் ரிங் ரோடு முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் கட்டமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது போக இந்த சாட்டிலைட் ரிங் ரோடு இருக்கும் பகுதியில் ரூ18 ஆயிரம் கோடி செலவில் லாஜிஸ்டிக்ஸ் பார்க் ஒன்றையும் கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். எனக் கூறியுள்ளார். இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Article Published On: Friday, January 6, 2023, 19:19 [IST]
English summary
Chennai to bengaluru expressway reduce travel time to 2 hours
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+