மொத்த இந்தியாவே தமிழ்நாட்டை பாத்து பொறாமைப்பட போகுது! 1,400 அதிநவீன பஸ்களை களத்தில் இறக்கி விட போகும் அரசு!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் தொழில்நுட்ப தலைநகரம் என வர்ணிக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்களில், எலெக்ட்ரிக் பஸ்களை சாலையில் உங்களால் சர்வ சாதாரணமாக காண முடியும்.
ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான நிலைமை இல்லை என்பது வருத்தமான ஒரு விஷயமாக இருந்தது. ஆம், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. ஆனால் அந்த குறையை போக்கும் வகையில், வெகு சமீபத்தில் தமிழக தலைநகர் சென்னையில் (Chennai) 120 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin), அந்த 120 எலெக்ட்ரிக் பஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார். இது சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அடுத்தகட்டமாக சென்னையில் கூடுதலாக 135 எலெக்ட்ரிக் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த புதிய 135 எலெக்ட்ரிக் பஸ்களின் அறிமுக நிகழ்ச்சி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 11) நடைபெறவுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் முதற்கட்டமாக 697 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 625 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாகதான் சமீபத்தில் 120 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதன் அடுத்தகட்டமாகதான் வரும் ஆகஸ்ட் 11ம் தேதியில் இருந்து, கூடுதலாக 135 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதை தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. முதற்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக 625 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, 2வது கட்டம் அமலுக்கு வரும்.
2வது கட்டத்தில் ஒட்டுமொத்தமாக 800 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டத்தை போலவே, 2வது கட்டத்திலும் இந்த 800 எலெக்ட்ரிக் பஸ்களும் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள 135 எலெக்ட்ரிக் பஸ்களில், 55 எலெக்ட்ரிக் பஸ்களில் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் அனைத்துமே 12 மீட்டர் நீளம் கொண்டவை ஆகும். பயணிகள் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் 39 இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பஸ்களை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுக்கும் 'ஸ்டாப்' பட்டன்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் என ஏராளமான அதிநவீன வசதிகளை இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் கொண்டிருக்கும்.
மேலும் தீயணைப்பு கருவிகள் மற்றும் மருத்துவ அவசரங்கள் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் உதவி பெட்டிகள் போன்ற அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் கொண்டிருக்கும். இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களுக்கு சென்னை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முதற்கட்டத்தில் 625 மற்றும் 2வது கட்டத்தில் 800 எலெக்ட்ரிக் பஸ்கள் என ஒட்டுமொத்தமாக சென்னையில் 1,425 எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான ஐசி இன்ஜின் பஸ்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட, இந்த எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு குறைவான செலவே ஆகும்.
எனவே இந்த நடவடிக்கை லாபம் வழங்க கூடியதாக இருக்கும். அத்துடன் சென்னையில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கும் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. எனவே அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








