தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு! தனியார் நிறுவனங்களுக்கு பணம் வந்து குவியப்போகுது!
சென்னை மாநகர எல்லைக்குள் தனியார் பஸ்களுக்கான பெர்மிட் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. சென்னை பகுதியில் பஸ்களுக்கான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த முடிவை எடுக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தற்போது 700 க்கும் அதிகமான வழித்தடங்களில் 3454 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சாதாரண கட்டண பேருந்துகள் 1559, விரைவு மற்றும் சொகுசு பஸ்கள் 1674, ஏசி பஸ்கள் 48, மினி பஸ்கள் 207 ஆகியன உள்ளடங்கும். இதில் ஆள் பற்றாக்குறை காரணமாக அனைத்து பேருந்துகளும் எல்லா நாட்களும் இயக்கும்படி திட்டமிடப்பட முடியவில்லை.

இதற்கிடையில் தற்போது சென்னையில் எங்கேயும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகள் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதிக்கும் சேர்த்து தான் சென்னையில் உள்ள பஸ்கள் எல்லாம் இயக்கப்பட வேண்டும்.
இதனால் தற்போது சென்னை மாநகரப் பகுதியில் போதுமான அளவு பஸ்கள் இல்லாமல் பயணிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கீளாம்பாக்கம் பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் ஒன்றும் திறக்கப்பட உள்ளது. அங்கிருந்தும் சென்னையில் மற்ற பகுதிகளுக்கு பஸ்களை இயக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

தற்போது சென்னை மாநகரப் பகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கையும் அவர்களின் போக்குவரத்து பேட்டன்களையும் பார்க்கும்போது 2030 ஆம் ஆண்டு சென்னையில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை 7000 ஆக இருக்க வேண்டும் என கணிக்கப்படுகிறது. தற்போது அதில் பாதி எண்ணிக்கையில் தான் பஸ்கள் உள்ளன.
இந்நிலையில் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் இருக்கும் பஸ்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவது என்பது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் சாத்தியமே இல்லாத ஒன்று. இதனால் இந்த பிரச்சினையை சரி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தனியார் பஸ்களை அவர்கள் சுதந்திரமாக செயல்படாமல் அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் செயல்படும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பஸ்களை வாங்கி அதற்கு பெர்மிட் வழங்கி சென்னை நகர பகுதிகளில் இயக்கும்.
அதற்கு தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு ரூபாய் என கட்டணமாக வழங்கும். இந்த பஸ்களில் அரசு பஸ் கண்டக்டர்கள் மட்டுமே செயல்படுவார்கள் டிரைவர்களை தனியார் நிறுவனங்களின் நியமிக்க வேண்டும். பஸ்களில் வரும் வசூல் முழுவதையும் போக்குவரத்து கழகம் எடுத்துக்கொள்ளும்.
பஸ்களின் பராமரிப்பு டிரைவரின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தும் தனியார் நிறுவனத்தின் பொறுப்பு தான். பெர்மிட் வழங்குவது மற்றும் டிக்கெட்டுகளை விநியோகம் செய்வது மட்டுமே தமிழக அரசின் பணியாக இருக்கும். இதனால் தமிழக அரசுக்கு லாபம் அதிகரிக்கும். மக்களுக்கும் சிறப்பான பஸ் சேவை கிடைக்கும். தனியாருக்கும் லாபமாக இருக்கும்.
தற்போது தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது இதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு சிட்டி பயன்பாட்டிற்காக பஸ்கள் வாங்கப்படும்.
இதன்படி மொத்தம் ஆயிரம் பஸ்களை தனியார் பஸ்களாக இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது அதில் முதல் கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்குள் 500 தனியார் பஸ்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரில் பஸ்களுக்கான தட்டுப்பாடு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனியார்களுக்கு மொத்தமாக பஸ்களை செயல்படுத்த அனுமதி வழங்காமல் அரசு கட்டுப்பாட்டில் பஸ்களை இயக்க அனுமதியளித்தது வரவேற்க்கப்பட வேண்டியது. இதனால் அரசுக்கு நல்ல லாபம் கிடைக்கும் பராமரிப்பு செலவும் குறையும். தனியார் நிறுவனம் நல்ல மைலேஜிற்காக பஸ்களை பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அவர்களுக்கும் லாபம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









