நடிகர் விஜயை துரத்தி துரத்தி வீடியோ எடுத்தவருக்கு ரூ2500 அபராதம்! ஏன் தெரியுமா?
நடிகர் விஜய் சமீபத்தில் காரில் செல்லும்போது சிக்னலை மதிக்காமல் சென்றதற்காக ரூபாயை 500 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது காரை துரத்தி துரத்தி வீடியோ எடுத்தவருக்கு ரூபாய் 2500 அபராதத்தை விதித்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை பனையூரில் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்தும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியான போதே இது குறித்த பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என பேச்சு எழுந்து வரும் நிலையில் இப்படியாக அவர் 234 தொகுதியிலிருந்தும் தனது நிர்வாகிகளை அழைத்து பேசுவது அதற்கான முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் ஊடகங்கள் முழுவதிலும் இது குறித்து அதிகமான செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நிகழ்ச்சி நடந்த நாளில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து பனையூருக்கு காரில் வந்துள்ளார். டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரில் அவர் வரும்போது வழி நெடுகிலும் மற்ற வாகனத்தில் வந்த வந்த ஊடகத்தினர் அதை வீடியோவாக எடுத்து லைவாக வெளியிட்டனர்.
அப்படியாக வெளியான ஒரு வீடியோவில் நடிகர் விஜய்யின் கார் சாலையில் டிராபிக் சிக்னலை மதிக்காமல் சென்றது பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை பார்த்த சென்னை போக்குவரத்து போலீசார் நடிகை விஜய்க்கு சிக்னலை மதிக்காமல் சென்றதற்காக ரூபாய் 500 அபராதம் விதித்தனர். தன் தவறை ஒப்புக்கொண்டு நடிகர் விஜய் இந்த ரூபாயை 500 அபராதத்தை கட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடந்தது. அதில் முக்கியமாக நடிகர் விஜய்யின் கார் மட்டுமல்ல அவரை வீடியோ எடுத்துச் சென்ற ஊடகத்தினரும் சிக்னலை மதிக்காமல் சென்றதாக குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இந்நிலையில் நடிகர் விஜயின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விஜயின் காரை வீடியோ எடுத்தவரை மாட்டி விட்டுள்ளார்.
நடிகர் விஜயின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து அதில் நடிகர் விஜயின் காரை புகைப்படம் எடுத்த நபர்களின் போட்டோவை பதிவிட்டு அவர்கள் வாகன எண்ணையும் குறிப்பிட்டு அவர்களும் சின்னலை மதிக்காமல் சென்றதாகவும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகவும் புகார் அளித்தார்.
அதை ஏற்றுக் கொண்ட சென்னை மாநகர போலீசார் குறிப்பிட்ட வாகனத்திற்கு சிக்னலை மதிக்காமல் சென்றதற்காக ரூபாய் 500 அபராதமும் மேலும் ஹெல்மெட் அணியாமல் இருவர் சென்றதற்காக ரூபாய் 2000 அபராதமும் என மொத்தம் ரூபாய் 2500 அபராதமாக குறிப்பிட்ட பைக்கின் நம்பரை வைத்து அதன் உரிமையாளருக்கு விதித்தனர்.
இந்த அபராத தொகை விதிக்கப்பட்டதை சென்னை மாநகர போலீசார் தங்களது டுவிட்டர் ஹேண்டிலில் உறுதி செய்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை யார் பொதுவெளியில் சாலை விதிமுறைகளை மீறினாலும் அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து ஆதாரத்துடன் அது நடந்த நாள் நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு காவல் துறைக்கு புகார் அளித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
அதன் அடிப்படையிலேயே நடிகர் விஜய் காரை துரத்தி துரத்தி வீடியோ எடுத்த ஊடகத்தினருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்படியாக போலீசாருக்கு கொடுக்கப்படும் ஆதாரமாக சிசிடிவி, கேமரா, செல்போன் கேமரா, உள்ளிட்ட எந்த சாதனத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை கூட ஆதாரமாக கொடுக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், அரசியல் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே சிக்னலில் நிற்காமல் செல்ல அனுமதி உள்ளது. அதுவும் அவர்களின் பாதுகாப்பு காரணம்தான். மற்றவர்கள் சிக்னலை மதித்து சென்றால்தான் சாலையில் விபத்துகளை குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








