ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

அப்டேட் செய்யப்பட்ட புதிய அதிநவீன இ-சலான் இயந்திரங்கள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால், இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிப்பதற்காக, கடந்த 2011ம் ஆண்டு இ-சலான் சிஸ்டம் (E-challan System) அறிமுகம் செய்யப்பட்டது.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இந்த சூழலில் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசாருக்கு அப்டேட் செய்யப்பட்ட இ-சலான் டிவைஸ் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய இ-சலான் டிவைஸில் இன்டர்நெட் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

தற்போது நடைமுறையில் உள்ள இ-சலான் டிவைஸ்களை போல் அல்லாமல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் வாகன் மற்றும் சாரதி வெப்சைட்கள் மூலமாக அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுடனும் புதிய இ-சலான் டிவைஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

தேசிய தகவல் மையம் (National Informatics Centre) உருவாக்கிய அதிநவீன மென்பொருள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட வாகனம் வேறு மாநிலத்தில் ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதா? என்பதை கண்டறியவும் புதிய இ-சலான் டிவைஸ் போலீசாருக்கு உதவும்.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

அத்துடன் தவறு இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யும்படி ஆர்டிஓக்களுக்கு பரிந்துரைக்கும் ஆப்ஷனும் இந்த புதிய அதிநவீன இ-சலான் டிவைஸில் இடம்பெற்றுள்ளது.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டி மற்றும் சம்பந்தப்பட்ட வாகனத்தை புகைப்படம் எடுப்பதற்காக கேமரா வசதியும் புதிய இ-சலான் இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

தற்போதைய நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசாருக்கு 352 புதிய இ-சலான் டிவைஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கூகுள் மேப் மூலமாக இந்த டிவைஸ்கள் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் உயர் அதிகாரிகளால் கண்காணிக்க முடியும்.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலமாக அபராதத்தை வசூலிக்க தனியாக பாயிண்ட் ஆப் சேல் (Point of Sale - PoS) இயந்திரத்தை தற்போதைய நிலையில் போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

ஆனால் தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இ-சலான் இயந்திரத்தில் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் இனி அபராதம் வசூலிக்க இரண்டு டிவைஸ்களை கையாள வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைடெக்காக மாறிய நம்ம சென்னை... புதிய அதிநவீன இயந்திரங்களை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்

இது குறித்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் கூறுகையில், ''விதிகளை மீறியவர்கள் அபராதம் செலுத்த தவறினால், வாகனத்தின் ஃபிட்னஸ் சான்றிதழை (Fitness Certificate) பெறுவதில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்'' என்றார். அத்துடன் வாகனத்தின் உரிமையை (Ownership) மாற்றம் செய்வதிலும் அவர்களுக்கு பிரச்னைகள் உண்டாகும் எனவும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai Traffic Police Get Updated e-challan Devices. Read in Tamil
Story first published: Monday, June 10, 2019, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X