முதல் நாள் வசூலே இவ்வளவா! அதிர வைக்கும் வேக கட்டுப்பாடு விதிமீறலுக்கான அபராத வசூல்.. டூ-வீலர்தான் அதிகம்!

சென்னையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விதமாக வேக கட்டுப்பாடுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து, அந்த விதி நேற்று (நவம்பர் 4) முதல் நகரம் முழுக்க நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையிலேயே, முதல் நாள் வசூலே மிக அமோகம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிகரித்து வரும் வாகன விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு விதிகள் சாலை போக்குவரத்து விஷயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (Greater Chennai Traffic Police), வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டை அறிவித்து உத்தரவிட்டது.

First day overspeed violation collection

எல்எம்வி எனப்படும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பாக மணிக்கு 60 கி.மீட்டரும், கனரக மோட்டார் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பாக மணிக்கு 50 கி.மீட்டரும் அறிவிக்கப்பட்டது. இதேபோல், இரண்டு சக்கர வாகனங்களான, ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றிற்கு அதிகபட்ச வேக வரம்பாக மணிக்கு 50 கிமீ என்றும், மூன்று சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 40 கி.மீட்டரும் உச்சபட்ச வேக வரம்பாக அறிவிக்கப்பட்டது.

இதுதவிர, குடியிருப்பு பகுதிகளிக்குள் பயணிக்கும்போது அனைத்து வகை வாகனங்களும் கட்டாயம் மணிக்கு 30 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி நேற்றைய (நவம்பர் 4) தினம் முதல் நகரம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Chennai speed limit

இந்த நிலையிலேயே போக்குவரத்து காவலர்கள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில் பல்வேறு வாகனங்கள் வேகக் கட்டுப்பாடு விதியை மீறியது கண்டறியப்பட்டது. முதல் நாளான நேற்று மட்டுமே சுமார் 121 வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கின்றது. வேகக் கட்டுப்பாட்டை மீறியதாக 4 கார்கள் மற்றும் 117 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கின்றன.

இதில், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் பிடிபட்டு இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு வாகன ஓட்டிகளிடம் இருந்தும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த தகவல் இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. "இப்படி வேக வேகமாக வேகக் கட்டுப்பாட்டு விதியை நடைமுறைப்படுத்தியது இதுபோன்று தீவிர வசூலில் ஈடுபடுவதற்காகதானா" என்கிற கேள்வியை எழுப்பச் செய்திருப்பதாக வாகன ஓட்டிகள் சிலர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காவல்துறையின் இதுமாதிரியான கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஒரே வழி மட்டும்தான் இருக்கின்றது.

வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது மட்டுமே அந்த வழி ஆகும். இதை செய்தால் மட்டுமே உங்கள் சம்பளத்தில் பாதி தொகையை செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும். வேகக்கட்டுப்பாடு விதிமீறலுக்கு ரூ. 1000 தொடங்கி ரூ. 3 ஆயிரம் வரை அபராதமாக வசூலிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, தொடர்ச்சியாக வேகக்கட்டுப்பாடு விதிமீறலில் ஈடுபடுபவர்களின் லைசென்ஸ்கூட ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்ட நேரிட்டால் பிரபல யுட்யூபர் டிடிஎஃப் வாசனைபோல் பலர் தங்களின் லைசென்ஸை இழக்க நேரிடலாம் என யூகிக்க முடிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வேகக்கட்டுப்பாடு விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்டறிய நவீன வகை கேமிரா மற்றும் ரேடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போலீஸாரின் பார்வையில் இருந்து வேண்டுமானாலும் விதிமீறல் வாதிகளால் தப்பிக்க முடியும். ஆனால், இந்த கருவிகளின் பார்வையில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. ஈசிஆர், சென்ட்ரல், அண்ணா சாலை, மதுரவாயல், பாரிஸ், ஸ்பென்சர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த கேமிராக்கள் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 5, 2023, 12:05 [IST]
English summary
Chennai traffic police issued 121 overspeed fine challans in single day
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+