22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர்... தமிழக போலீஸ் திடீர் அதிரடி... இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான்!

சென்னையில் போலீசார் ANPR படக்கருவிகள் மூலம் 22 நாளில் 17 ஆயிரம் பேர் உட்பட மொத்தம் 22 ஆயிரம் பேருக்கு ராங் ரூட்டில் வந்ததற்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பெரிய பெரிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், சிக்னல்கள், ஒரு வழிப்பாதைகள் எனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தபாடில்லை.

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

தினந்தோறும் பெருகும் வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெருக்கடியை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கியமான காரணம் சாலையில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டுவதும் ஒரு முக்கியமான பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது ராங் சைடில் வண்டியை ஓட்டிச்செல்வது, ஒரு வழிப்பாதை வழியாகச் செல்வது எனப் பல குழப்பங்களை வாகன ஓட்டிகள் செய்து வருகின்றனர்.

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

இது சட்டப்படி குற்றம் என்றாலும் இதைத் தட்டிக்கேட்க ஆள் இல்லாத நேரத்தில் இந்த குற்றங்கள் எல்லாம் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருந்தது. இதற்காக போலீசார் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் குற்றங்கள் குறையும் என எதிர்பார்த்தனர்.

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

ஆனால் மக்கள் பலர் போலீஸ்காரர்களை பார்த்தால் ஒரு மாதிரியும், போலீஸ்காரர்கள் கண்காணிப்பிற்கு இல்லாத நேரத்தில் ஒரு மாதிரியுமாக நடந்து கொள்ளத் துவங்கினர். இதனால் சாலை விதிகளை மக்களைக் கடுமையாக கடைப்பிடிக்க வைப்பதில் அரசுக்கு பெரும் சிக்கல் இருந்தது.

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

இந்நிலையில் ANPR கேமரா என்ற புதிய தொழிற்நுட்ப வசதிகளுடன் கூடிய கேமரா இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கேமராவில் கணிணி முறைப்படி புரோகிராமிங் செய்யப்படும். இந்த கேமராவை பொருத்திய பின்பு அது ஆக்டிவேட் செய்யப்பட்டால் அந்த கேரமாவில் யாராவது சாலை விதிமுறைகளை மீறுவது பதிவானால் அந்த கேமரா தானாக அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்து அந்த புகைப்பட ஆதாரத்துடன் அந்த நம்பர் பிளேட் எண்ணிற்கு அபராதம் விதிக்கப்பட்டு விடும்.

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

பின்னர் அந்த வாகன ஓட்டி ஆன்லைன் மூலம் அபராதத்தைக் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படிப்பட்ட தொழிற்நுட்பம் முதலில் பெரு நகரங்களில் முயற்சி ரீதியாகப் பொருத்தப்பட்டன.இது வெற்றி பெற்ற நிலையில் இந்த முழுவதும் தேவையான இடங்களில் இந்த கேமராக்களை பொருத்த அரச நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 11 சந்திப்புகளில் 15 ANPR கேமராக்களை போக்குவரத்து போலீசார் பொருத்தியுள்ளனர். அந்த கேமராக்கள் தற்போது புகைப்பட ஆதாரங்களுடன் சாலை விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்து வருகிறது.

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

இந்நிலையில் இந்த மாதம் மே 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை மட்டும் சென்னையில் ராங் ரூட்டில் பயணித்ததாக 22990 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 17944 வழக்குகள் ANPR கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தானியங்கியாக ஐஆர்டிஎஸ் தளத்தில் பதிவாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ANPR கேமராவை சென்னையில் மேலும் 3 இடங்களில் பொருத்துவதற்காகப் போக்குவரத்து போலீசார் அரசிடம் அனுமதி கேட்ட நிலையில் அரசும் அதற்கான அனுமதியையும் நிதியை ஒதுக்கியுள்ளது.

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

இந்நிலையில் இனி சாலைகளில் பயணிக்கும் போது போலீசார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். இதற்காக கேமராக்கள் இருக்கிறது. என்பதை மனதில் வைத்துக்கொண்டு சாலை விதிமுறைகளை மீறிப் பயணிக்காதீர்கள். இப்படியாகப் பயணித்தால் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் வாகனம் அபராதம் செல்லான்களைப் பெறும் என்பதை மறவாதீர்கள்.

22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர் . . . தமிழக போலீஸ் திடீர் அதிரடி . . . இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான் !

இப்படியாக உங்கள் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் இதை ஆன்லைனில் அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காக Parivahan தளத்தில் ஆன்லைன் மூலம் பணம் கட்டலாம். அதில் வாகனத்தின் எண்ணைப் பதிவு செய்து ஏதாவது செல்லான் இருக்கிறதா எனப் பார்த்து அதற்கான பணத்தை அங்கேயே செலுத்திக்கொள்ளலாம். மேலும் அங்கு விதிமுறை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அந்த செல்லான் உடன் இணைத்திருப்பார்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai traffic police registered 22k camera in 22 days in may know full details
Story first published: Tuesday, May 24, 2022, 14:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X