கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

டூவீலரை திருடுவதற்காக புதிய டெக்னிக்கை கொள்ளையர்கள் கையில் எடுத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

கொரோனா வைரஸ் (கோவிட்-19) மிக வேகமாக பரவி வருவதால், இந்தியாவே தற்போது முடங்கி கிடக்கிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் வரும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து முடங்கி, இந்திய சாலைகள் காற்று வாங்கி கொண்டுள்ளன.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

ஆனால் ஒரு சிலர் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றி கொண்டுள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

அத்துடன் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது இதுபோன்ற வழக்குகள்தான் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன. மற்றபடி குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, கொலை போன்ற குற்ற செயல்கள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

அதேபோல் வாகன விபத்து, வாகன திருட்டு போன்ற சம்பவங்களும் தமிழகத்தில் குறைந்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற செய்திகளை தற்போது நம்மால் பார்க்க முடிவதில்லை. குறிப்பாக வாகன திருட்டு சம்பவங்கள் குறைந்திருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

வாகன உரிமையாளர்களும், காவல் துறையினரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், வாகன திருட்டு சம்பவங்களை பெரிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு அதை செய்து காட்டியுள்ளது. எனினும் இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா? என்பது சந்தேகமாக இருக்கிறது.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

ஏனெனில் வாகனங்களை திருடுவதற்காக கொள்ளையர்கள் புதிய டெக்னிக்கை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் காவல் துறையினர் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தற்போதைய நிலையில் அவர்களின் சேவை பாராட்ட கூடியதாக இருக்கிறது.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

மனைவி, குழந்தைகள் இருக்கும் சூழலில், உயிரை பணயம் வைத்து, களத்தில் நேரடியாக இறங்கி அவர்கள் சேவை செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் மத்தியில் காவல் துறை மீதான மதிப்பு கூடியிருக்கும் நிலையில், அந்த பெயரை பயன்படுத்தி கொண்டு, நூதனமான முறையில் வாகனங்களை கொள்ளையடிக்கும் வேலையில் திருடர்கள் இறங்கியுள்ளனர்.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

இந்த வகையிலான சம்பவம் ஒன்று கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அரங்கேறியிருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு 24 வயதாகிறது. இவர் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கிளினீக்கிற்கு, பணியின் காரணமாக தன் அம்மாவை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

கிளீனிக்கில் அவரை இறக்கி விட்ட பின், பிரகாஷ் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, இரண்டு பேர் பிரகாஷை நிறுத்தியுள்ளனர். தங்களை ஊர்க்காவல் படை வீரர்கள் என அறிமுகம் செய்த கொண்ட அவர்கள் இரண்டு பேரும், லிஃப்ட் தந்து உதவி செய்யும்படி பிரகாஷிடம் கேட்டு கொண்டனர்.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

இதனால் இருவரையும் ஏற்றி கொண்டு பிரகாஷ் பயணத்தை தொடர்ந்தார். வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்றபோது, மூன்று பேர் ஒரே டூவீலரில் பயணம் செய்ததால், போக்குவரத்து காவல் துறையினர் அவர்களை நிறுத்தினர். எனவே டூவீலரை விட்டு இறங்கிய பிரகாஷ், சற்று தொலைவில் காவல் துறையினரிடம் பேசி கொண்டிருந்தனர்.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

இதனால் கிடைத்த கேப்பில், ஊர்க்காவல் படை வீரர்கள் என கூறிய இரண்டு பேரும் கிடா வெட்டி விட்டனர். பிரகாஷ் போலீசாரிடம் பேசி கொண்டிருந்த சமயத்தில், அவர்கள் இருவரும் டூவீலரை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இதனால் அவர்கள் இரண்டு பேரும் உண்மையிலேயே ஊர்க்காவல் படை வீரர்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

அனேகமாக அவர்கள் இரண்டு பேரும் டூவீலர் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். எனவே இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

ஊர்க்காவல் படை வீரர்கள் எனக்கூறி லிஃப்ட் கேட்டு நடந்துள்ள இந்த சம்பவம், வாகன உரிமையாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் நீங்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே அத்தியாவசிய பணிக்காக வாகனங்களில் வெளியே சென்றாலும் கூட, இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai: Two Wheeler Theft Near Police Station. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X