விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

விலை உயர்ந்த வாகனங்களை திருடி வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த கொள்ளையன் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

தமிழகத்தில் வாகன திருட்டு சம்பவங்கள் மிக அதிகமாக நடந்து வருகின்றன. ஒருவர் சிறுக சிறுக சேமித்த பணத்தில் ஆசை ஆசையாய் வாங்கிய வாகனத்தை, கொள்ளையர்கள் மிகவும் எளிதாக திருடி சென்று விடுகின்றனர். இதற்காக கொள்ளையர்கள் பல்வேறு டெக்னிக்குகளை கையாள்கின்றனர். எனவே வாகனங்களின் உரிமையாளர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

தமிழகத்தில் வாகன திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் துறையினரும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த ஒரு கொள்ளையனை காவல் துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்த கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரைதான் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் கூலி தொழிலாளியாக இருந்து பின்னர் வாகன கொள்ளையனாக மாறியுள்ளார். இவர் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதவிர குமரன் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

புருஷோத்தமன் தொடர்ச்சியாக வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வந்துள்ளார். போலீசார் அவரை வலை வீசி தேடி வந்த நிலையில், தற்போது சிக்கி கொண்டுள்ளார். வாகன திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

அப்போது கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்துதான் கொள்ளையன் புருஷோத்தமனை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். புருஷோத்தமன் மது போதைக்கு அடிமையானவர் என காவல் துறையினர் கூறியுள்ளனர். தினமும் மது அருந்தும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. ஆனால் கூலி வேலையில் கிடைத்த வருமானம், தினமும் மது அருந்த போதுமானதாக இல்லை.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

எனவேதான் புருஷோத்தமன் வாகனங்களை திருட ஆரம்பித்துள்ளார். புருஷோத்தமனுக்கு வாகனங்களை பற்றிய நல்ல அறிவு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களை குறி வைத்துதான் புருஷோத்தமன் கை வரிசை காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை கூட புருஷோத்தமன் மிக எளிதாக திருடி சென்றுள்ளார்.

MOST READ: கணவன், மனைவியின் சூப்பர் கண்டுபிடிப்பு... சும்மா நச்சுனு இருக்கு... என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க!!

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

என்னதான் கொள்ளையனாக இருந்தாலும் கூட, புருஷோத்தமனுக்கு பேராசை மட்டும் இருந்ததில்லை!! ஆம், விலை உயர்ந்த வாகனங்களை கூட புருஷோத்தமன் வெறும் 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அன்றைய மது பாட்டில் தேவை பூர்த்தியானால் போதும் என்ற மனநிலையில்தான் புருஷோத்தமன் இருந்ததாக கூறப்படுகிறது.

MOST READ: தமிழக போலீசார் செய்த தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது... என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீங்க

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

திருடப்படும் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் கள்ள மார்க்கெட்டில் இதுபோன்று மிகவும் குறைவான விலையில் ஒரு சிலர் வாகனங்களை விற்பனை செய்கின்றனர். விலை மிகவும் குறைவாக இருக்கிறதே என ஆசைப்பட்டு வாங்கி சிலர் சிக்கலில் சிக்கி கொள்கின்றனர். எனவே செகண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்கும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

MOST READ: "உன் வாழ்க்கைல 30 லட்சம் ரூபா பைக்க இனி பாக்க முடியுமா" - தமிழக போலீஸாரின் அட்ராசிட்டி...!

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

இதனிடையே போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக திருட்டு தொழிலில் புருஷோத்தமன் பல யுக்திகளை கையாண்டுள்ளார். திருடப்பட்ட இரு சக்கர வாகனங்களை உடனே விற்பனை செய்யாமல் இருப்பது அதில் ஒன்று. ஒரு பைக்கை திருடினால், ஒரு சில நாட்கள் கழித்தே புருஷோத்தமன் அதனை விற்பனை செய்வார் என கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

அதாவது ஒரு இடத்தில் திருடப்பட்ட பைக்கை புருஷோத்தமன் உடனடியாக வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று விடுவார். பின்னர் அங்குள்ள ஏதேனும் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை விட்டு விடுவார். ஒரு சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்து பார்ப்பது அவரது வழக்கம். அப்போது வாகனம் அங்கு இருந்தால் அதனை விற்று விடுவார்.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

இல்லாவிட்டால் நமக்கேன் வம்பு என வேறொரு வாகனத்தை குறி வைத்து தூக்கி விடுவது அவரது பாணியாக இருந்துள்ளது. போலீசார் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் சிக்கி கொள்வதை தவிர்க்கும் நோக்கத்தில், இந்த பாணியை புருஷோத்தமன் பின்பற்றியதாக தெரிகிறது. புருஷோத்தமன் தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

முன்னதாக புருஷோத்தமனிடம் இருந்து 14 வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். புருஷோத்தமன் போன்ற கொள்ளையர்களின் கைவரிசைகளில் இருந்து தப்ப வேண்டுமென்றால், உங்கள் வாகனங்களை நீங்கள் கண்ணும், கருத்துமாக பார்த்து கொள்வது அவசியம். சில சமயங்களில் செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களுக்கும் திருடப்பட்ட வாகனங்களை திருடர்கள் பயன்படுத்துகின்றனர்.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

உங்கள் வாகனங்களை திருடர்கள் கொள்ளையடித்து இது போன்ற குற்ற செயல்களுக்கு பயன்படுத்தினால், தேவை இல்லாத பிரச்னைகளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். எனவே வாகன திருட்டை தவிர்ப்பது எப்படி? என்பது தொடர்பான ஒரு சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் ஒரு சிறு தவறுகள் கொள்ளையர்களுக்கு சாதகமாக மாறி விடுகிறது.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

வாகனங்களின் இன்ஜின் ஆனில் இருக்கும்போது, ஒரு சிலர் அப்படியே விட்டு சென்று விடுகின்றனர். அதாவது அருகில் இருக்கும் கடை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது, உடனடியாக மீண்டும் வந்து ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். ஆனால் இது நீங்களே கொள்ளையர்களை வெற்றிலை, பாக்கு அழைத்தது போல் ஆகி விடும்.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

நீங்கள் இவ்வாறு செய்தால், உங்கள் வாகனத்தை திருடி செல்ல கொள்ளையர்களுக்கு ஒரு சில வினாடிகள் போதும். எனவே எக்காரணத்தை கொண்டும் வாகனத்தை ஆனில் வைத்து விட்டு வெளியில் எங்கும் போக வேண்டாம். அத்துடன் வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு செல்லும்போது, சாவியையும் மறக்காமல் எடுத்து சென்று விடுங்கள்.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

ஞாபக மறதி காரணமாக சாவியை வாகனத்திலேயே விட்டு விட்டு வந்து விடும் பழக்கம் சிலருக்கு உள்ளது.

அதே போன்று வாகனத்தை லாக் செய்யவும் சிலர் மறந்து விடுகின்றனர். வெளியில் எங்கே சென்றாலும், உங்கள் வாகனம் லாக் செய்யப்பட்டு விட்டதை ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள். வாகனத்தை லாக் செய்யாமல், கொள்ளையர்களின் வேலையை நீங்களே எளிதாக்கி விடாதீர்கள்.

விலை உயர்ந்த வாகனங்கள் வெறும் 2 ஆயிரத்திற்கு விற்பனை... கொள்ளையன் சொன்ன காரணத்தால் ஆடிப்போன போலீஸ்

அதே சமயம் கார் என்றால், கண்ணாடிகளை மறவாமல் மேலே ஏற்றி விடவும். இதன்மூலம் வாகனத்திற்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போவதை தடுக்க முடியும். அதேபோன்று ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதையும் தவிர்க்கலாம். ஒரு சிலர் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

வாகனங்களை திருடும் கொள்ளையர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து கொண்டுதான் உள்ளனர். இந்த வகையில், 100க்கும் மேற்பட்ட புதிய கார்களை திருடி விட்டு, பொம்மை துப்பாக்கி மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வந்த கொள்ளையனை போலீசார் சமீபத்தில் சுற்றி வளைத்தனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அவரை சுற்றி வளைத்தபோது சினிமாவில் கூட நீங்கள் காணாத காட்சிகள் எல்லாம் அரங்கேறின. ஒருவழியாக போலீஸ் பிடியில் சிக்கிய அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ளது ஷதாரா மாவட்டம். இங்கு ஒரு கொள்ளையனின் பெயரை கேட்டால், ஊரே நடுங்கும். அந்த கொள்ளையனின் பெயர் குணால். கடந்த 20 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட புதிய கார்களை கொள்ளையடித்துள்ளதாக குணால் மீது புகார்கள் உள்ளன.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

குணாலின் தற்போதைய வயது 40 மட்டுமே. அப்படியானால் தனது 20வது வயதில் இருந்து புதிய கார்களை குறி வைத்து கொள்ளையடித்து வருகிறார் குணால். இவர் கார்களை திருடுவதில் கை தேர்ந்தவர். வெறும் ஐந்தே நிமிடங்களில் ஒரு புதிய காரை திருடி விடும் அளவிற்கு அனுபவசாலி.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

கார்களை எப்படி திருட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கும் வீடியோக்களை உருவாக்கி, அவற்றை யூ-டியூப்பில் குணால் அப்லோட் செய்துள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். நாளுக்கு நாள் குணாலின் அட்டகாசம் அதிகரித்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அப்போது லாக் அப்பில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கார்களை கொள்ளையடிக்கும் தொழில் செய்து வந்ததால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை முடிவை எடுப்பதாக அவர் கடிதமும் எழுதி வைத்திருந்தார். ஆனால் போலீசார் அவரை எப்படியோ காப்பாற்றி விட்டனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

ஆனால் அதன் பின்பும் கூட குணால் திருந்தவில்லை. போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய குணால் மீண்டும் கார்களை கொள்ளையடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் குணாலின் கூட்டாளியான ஷாகித் என்பவரும் உடந்தையாக இருந்து வந்துள்ளார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

எனவே குணால் மற்றும் ஷாகித் ஆகியோரை பிடிக்க ஷதாரா மாவட்டத்தின் வாகன திருட்டிற்கு எதிரான போலீஸ் படை தீவிரம் காட்டி வந்தது. இந்த சூழலில் அவர்கள் இருவரும் போலீசாரால் சமீபத்தில் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அப்போது குணாலும், ஷாகித்தும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் பயணித்து கொண்டிருந்தனர். அவர்களை 9 பேர் அடங்கிய போலீஸ் படை சுற்றி வளைத்தது. அந்த நேரத்தில் குணால்தான் டிரைவர் இருக்கையில் இருந்தார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

ஆனால் போலீசார் சுற்றி வளைத்த போதும் கூட அவர்கள் இருவரும் அசரவில்லை. சரண் அடைய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு துளியும் இருந்ததாக தெரியவில்லை. எனவே காரை ரிவர்ஸில் எடுத்த குணால், போலீஸ் வேனின் மீது பலமாக மோதினார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அத்துடன் மற்றொரு வாகனத்தின் மீதும் காரை மோதினார். இதன்பின் காரில் இருந்து இறங்கிய குணால், பெரிய இரும்பு ராடால் தாக்கி 3 போலீசாரை காயப்படுத்தினார். அத்துடன் துப்பாக்கியை எடுத்து போலீசாரை மிரட்டவும் செய்தார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

ஆனால் போலீசார் எப்படியோ அவரை மடக்கி பிடித்து விட்டனர். அந்த சமயத்தில் குணால் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பது பின்னர்தான் தெரியவந்தது. அதன்பின் குணால் மற்றும் ஷாகித்தை போலீசார் கைது செய்தனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

100க்கும் மேற்பட்ட கார்களை திருடி உள்ளதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருப்பு மாஸ்க் மற்றும் க்ளவுஸ் ஆகியவற்றை அணிந்து கொண்டு கார்களை திருடுவதை குணால் வழக்கமாக வைத்திருந்தார். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில்தான் அவர் கார்களை திருடுவாராம்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

போலீசாரிடம் சிக்கியுள்ள பிரபல கார் கொள்ளையன் குணால் தொடர்பாக மேலும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. போலீசாரிடம் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக குணால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அத்துடன் தனது பெயர், முகவரி ஆகியவற்றையும் மாற்றி கொண்டு போலீசாரிடம் இருந்து அவர் தப்பித்து வந்துள்ளார். குணாலின் தற்போதைய பெயர் பூத்நாத். இதனிடையே கைது செய்யப்பட்ட உடன் டெல்லி ஆனந்த் விகார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர்கள் இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அப்போது செயல் விளக்கத்திற்காக, லாக் செய்யப்பட்டிருந்த ஒரு காரை திறக்கும்படி குணாலிடம் போலீசார் கூறியுள்ளனர். வெறும் நான்கே நிமிடங்களில் குணால் காரை திறந்து விட்டதால், போலீசாரே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் குணால் திருடிய கார்கள் எல்லாம் பெரும்பாலும் 2019 மாடல்கள்தான். ஆனால் திருடப்பட்ட கார்களை குணால் யாரிடம் விற்பனை செய்துள்ளார்? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக குணாலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

தற்போதைக்கு 4 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து கொண்டு 20 ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வந்துள்ளார் குணால். அதுவும் பொம்மை துப்பாக்கியை வைத்து கொண்டு!

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

ஆனால் ஒரு வழியாக போலீசார் குணாலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விட்டனர். இது கார் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஆகும். குணால் பிடிபட்டுள்ள சம்பவம் தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

மோட்டார் வாகனங்களை திருடினால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை (க்ரைம்ஸ் ஆக்ட் 1990-ன் செக்ஸன் 154எஃப்-ன் படி) விதிக்கப்படும். கார்களின் பாதுகாப்பிற்கு இன்று பல்வேறு டெக்னாலஜிகள் இருந்தாலும், கொள்ளையர்களும் அதற்கேற்ப தங்களை அப்டேட் செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடக்கத்தது. எனவே கார் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai: Two-wheeler Thief Arrested - 14 Vehicles Seized By Police. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X