மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட சென்னை பெண்! இவ்வளவு பெரிய சாதனைக்கு சொந்தகாரியா இவர்!

இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக நாளை இரவு டெல்லியில் வைத்து பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்காக பல்வேறு தரப்பிலிருந்து விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அதன்படி சென்னை ரயில்வே டிவிஷனில் பணியாற்றி வரும் வந்தே பாரத் ரயிலை இயக்கும் பெண் ஒருவருக்கும் அழைப்பு வந்துள்ளது. அவரும் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலான இந்திய பொது தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி கடந்த வாரத்தில் நிறைவடைந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் எல்லாம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதை எடுத்து பிரதமர் மோடி நாளை இரவு மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

Modi Swearing in Ceremony

பொதுவாக பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து விருந்தினர்கள் அழைக்கப்படுவது ஒரு வழக்கமாக இருக்கிறது. அதன்படி இந்த முறையும் இந்தியாவின் மிகப் பெருமையான வந்தே பாரத் ரயிலை இயக்கும் மிக முக்கியமான ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் சென்னை ரயில்வே டிவிஷனில் பணியாற்றி வரும் ஐஸ்வர்யா எஸ் மேனன் என்ற வந்தே பாரத் ரயிலை இயக்கும் பெண் ஓட்டுனர் ஒருவருக்கும் அழைப்பு வந்துள்ளது.

இவர் மிக அதிக அளவில் ரயில்களை இயக்கி மிகப்பெரிய சாதனை படைத்த பெண்ணாக பார்க்கப்படுகிறார். இவர் வந்தே பாரத், ஜென் சதாப்தி உள்ளிட்ட பல்வேறு விதமான ரயில்களை இயக்கியுள்ளார். சுமார் 2 லட்சம் மணி நேரத்திற்கு இவர் ரயில் இயக்கியதற்கான தரவுகள் உள்ளன. ஒரு பெண்ணாக இருந்து மிக அதிக நேரம் ரயிலை இயக்கியதன் காரணமாக இவர் ஒரு சாதனை பெண்ணாக கருதப்படுகிறார்.

Modi Swearing in Ceremony

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு இந்தியாவை ஆட்சி செய்து வரும் நிலையில் அந்த அரசின் மிகப்பெரிய சாதனையாக வந்தே பாரத் ரயில் பார்க்கப்படுகிறது. இந்த ரயிலை இயக்கி இந்த சாதனைக்கு மிக உதவியாக இருந்த ரயில் ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தான் இந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கான அழைப்பை அரசு கொடுத்துள்ளது.

அதன்படி இவர் ஒரு பெண் ஒட்டுநராக இருந்து அதிக தூரம் வந்தே பாரத் ரயில் இயக்கியதன் காரணமாக இவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல ஒவ்வொரு ரயில்வே டிவிஷனிலும் மிக முக்கியமான ரயில் ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாம் நாளை இரவு டெல்லியில் வைத்து நடைபெற உள்ள பிரதமரின் பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

Modi Swearing in Ceremony

சென்னை டிவிஷனைச் சேர்ந்த ரயில் ஓட்டுனர் ஐஸ்வர்யா மேனன் வழக்கமாக சென்னையில் இருந்து விஜயவாடா மற்றும் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் ஆகிய ரூட்டுகளில் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களை இயக்கி வந்துள்ளார். இவருக்கு இந்த இரண்டு ரூட்டில் தான் மாறி மாறி டியூட்டி அலார்ட் செய்யப்பட்டுள்ளது. எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இவர் ரயிலை இயக்கி சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

வந்தே பாரத் ரயில் என்பது இந்தியாவிலேயே முழுமையாக கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ரயிலாகவும், இந்த ரயிலை உருவாக்குவதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் மிக அதிக பணத்தை செலவு செய்துள்ளது. இந்த ரயில் சர்வதேச அளவில் சிறந்த ரயிலாக இயங்கி வரும் புல்லட் ரயில்களுக்கு சமமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு விதமான தொழில்நுட்ப அம்சங்களும் புகுத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக இந்த ரயிலில் தானியங்கி கதவுகள் இருக்கிறது. இதனால் ரயில் பயணம் செய்யும்போது முற்றிலுமாக மூடப்பட்ட ரயிலாக தான் இது பயணம் செய்யும். அதே நேரம் ரயிலுக்குள்ளும் ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது. இதனால் மக்கள் பலர் இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்பி வருகிறார்கள். இதனால் ஏகப்பட்ட மக்கள் இந்த ரயிலின் டிக்கெட்டை விரும்பி புக் செய்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயிலை ஏகப்பட்ட ஓட்டுநர்கள் ஓட்டுனாலும் ஒரு பெண் ஓட்டுனர் இவ்வளவு பெரிய சாதனை படைத்திருக்கிறார் என்ற தகவலை நமக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இப்படியான சாதனை படைத்த பெண்ணிற்கு கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 10:41 [IST]
English summary
Chennai vande bharat loco pilot invited for modi swearing in ceremony
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X