விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

தமிழகத்தின் தலைநகர் சென்னையைக் கலக்கும் வகையில் விரைவில் டபுள் டெக்கர் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் சென்னையும் ஒன்று. எனவேதான் இங்கு மக்கள் அடர்த்திக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக உயர்ந்து காணப்படுகின்றது. இதன் விளைவு காலை, மாலை என அனைத்து நேரங்களிலும் சென்னை நகரத்தின் பல்வேறு சாலைகள் மிகவும் போக்குவரத்து நெரிசலுடன் காட்சியளிக்கின்றன.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

இந்நிலையில், சென்னையின் முக்கியமான பகுதி ஒன்றில் டபுள் டெக்கர் (இரட்டை அடுக்கு) மேம்பாலம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திட்டத்தை மத்திய அரசு, தமிழக அரசிடம் முன்மொழிந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஒப்புதல் அளிப்பாரானால், மேம்பாலம் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும். ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் அது உருவாக்கப்பட இருக்கின்றது.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

வேளச்சேரியின் விஜயாநகர் சந்திப்பிலேயே இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைய இருக்கின்றது. தென் சென்னையின் மிகவும் பிஸியான சாலைகளில் இதுவும் ஒன்றாகும். எனவேதான், இந்த பகுதியில் டபுள் டெக்கர் மேம்பாலம் அமைய இருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, தாம்பரம், கிண்டி மற்றும் ஐடி நிறுவனங்கள் அதிகம் நிரம்பிய பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாகும்.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் இரு வழி பாதைகளைக் கொண்டிருக்கும். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 640 மீட்டர் நீளத்தில் இந்த மேம்பாலம் அமை இருப்பது தெரியவந்துள்ளது. வேளச்சேரி பைபாஸ் சாலையில் தொடங்கி, தாம்பரம் வரை இந்த மேம்பாலம் செல்லும். இது ஒரு கிமீ தூரத்தைவிட நீளமாகும். மேலும், 15 மீட்டர்கள் உயரத்தையும் இது கொண்டிருக்கும். குறிப்பாக, தரமணி மற்றும் வேளச்சேரி பைபாஸ் சாலையை இணைக்கும் வகையிலும் இது செயல்பட இருக்கின்றது.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் பாதசாரிகள் பாதுகாப்பாக நடமாடும் வகையில் நடைமேடை மற்றும் மழை நீர் வடிகால் ஆகையவையும் அமைக்கப்பட இருக்கின்றன. முன்னதாக ஒற்றை அடுக்கு மேம்பாலமாக மட்டுமே இதனை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த முடிவை தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. மேலும், இதனை இரட்டை அடுக்குகள் கொண்ட மேம்பாலமாக உருவாக்கவே திட்டமிட்டு வருகின்றன.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரின் அண்மை சந்திப்பிலேயே இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் உறுதிச் செய்யப்பட்டது. ஒற்றை அடுக்கு மேம்பாலத்தில் நான்கு லேன்களை உருவாக்குவதே முன்னர் வெளியிடப்பட்ட திட்டமாகும். இதையே தற்போது டபுள் டெக்கராக அரசுகள் மாற்றியிருக்கின்றன.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

இதனை சர்வதேச தரத்தில் உருவாக்க அரசுகள் திட்டமிட்டுள்ளன. மேலும், இதனை முழுமையாக கட்டிமுடிக்க 20 முதல் 25 ஆண்டுகள் ஆகலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் தென் சென்னையின் போக்குவரத்து பிரச்னையைத் தீர்க்கும் எனவும் அவர் கூறினார்.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த ஒற்றை அடுக்கு மேம்பாலத்திற்கு ரூ. 3,100 கோடி மட்டுமே செலவாகும் என கூறப்பட்டது. ஆனால், புதிய இரட்டை அடுக்கு மேம்பாலத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி வரை செலவாகலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை வாசிகளின் பயன்பாட்டிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இத்திட்டத்திற்கான வரைவே தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

அதேசமயம், தமிழக அரசு சார்பில் இரும்பு மற்றும் சிமெண்ட் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 500 கோடியை மாநில அரசால் மிச்சப்படுத்த முடியும் என அது காரணம் கூறியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளால் வெகுவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமையும் நிலை உருவாகியுள்ளது.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

இந்தியாவில் இதுபோன்ற இரட்டை அடுக்கு மேம்பாலத்தை மும்பையில் நம்மால் காண முடியும். இதனை 2014ம் ஆண்டிலேயே மும்பைப் பெற்று விட்டது. இதுவே, நாட்டின் முதல் டபுள் டெக்கர் மேம்பாலம் ஆகும். மும்பையின் சேன்டாக்ரூஸ் மற்றும் செம்பூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 1.8 கிமீ நீளத்தில் இது கட்டப்பட்டிருக்கின்றது.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

ரூ. 450 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டாவதாகவும், தென் மாநிலங்களிலேயே முதலாவதாகவும் பெங்களூருவில் இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. ரஜிகுடா மற்றும் சில்க் போர்டை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு அக்டோபரில் இந்த மேம்பாலத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைய இருக்கின்றது.

விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்?.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா?

இந்த மேம்பாலங்களைக் காட்டிலும் அதிக பெரும் பொருட் செலவில் சென்னயில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட இருக்கின்றது. தற்போது நிலவும் உச்சபட்ச போக்குவரத்து நெரிசல் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. இதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு புகைப்படம் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai Velachery Might Be Get Double-Decker Flyover Soon. Read In Tamil.
Story first published: Thursday, October 29, 2020, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X