போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

சென்னையை விட பொருளாதார வளர்ச்சியில் பெங்களூர் மிக வேகமாக முன்னேறினாலும், போக்குவரத்து நெரிசல் எதிர்காலத்தில் பெங்களூரின் வளர்ச்சிக்கு பெரும் பிரச்னையை தரலாம். ஆனால், தமிழகத்தில் ஆங்கிலேயர் துவங்கி தெ

வேலைவாய்ப்புக்காக கிராமப்புற இளைஞர்கள் பெருமளவு நகர்ப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்களின் முக்கிய தேர்வாக இருப்பது சென்னையை விட்டால் பெங்களூர்தான்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

கர்நாடக தலைநகராக இருந்தாலும் தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள பெங்களூர் நகரின் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாக, தமிழக மக்களின் முக்கிய தேர்வாக அமைந்துவிட்டதில் ஆச்சரியம் இல்லை.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

இந்த நிலையில், பெங்களூருக்கு வேலைக்காக வருவோர் மற்றும் வசிப்போரின் பெரும் பிரச்னையாக மாறி இருப்பது போக்குவரத்து நெரிசல். முக்கிய சாலைகளில் மட்டுமின்றி, தெருக்களில் கூட சிக்னல் போடும் அளவுக்கு போக்குவரத்து மிக மோசமாக மாறி இருக்கிறது.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

இதற்கு பல தீர்வுகள் சொல்லப்பட்டாலும் பெங்களூர் வாழ் மக்களுக்கு வீட்டிலிருந்து அலுவலகம் சென்று வருவது என்பது நிலவுக்கு பயணித்து வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது. கால விரயத்துடன், உடல் பாதிப்புகள் மற்றும் மன அழுத்தம் தரும் விஷயமாக மாற்றிவிட்டது.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

இந்த நிலையில், சாஃப்ட்வேர் துறை உள்ளிட்டவற்றில் பெங்களூர் அபார வளர்ச்சி பெற்றாலும், போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையைபெங்களூர் விஞ்ச முடியாத நிலை தொடர்கிறது.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபோதிலும், அதனால் பெங்களூரில் போதிய பயன் இல்லாத நிலை தொடர்கிறது. போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஓட்டும் பலரும் நாக்குத் தள்ளிய நிலையில், போதும் போதும் என்ற நிலையில்தான் வீடு வந்து சேர்கின்றனர்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

சென்னையை விட பொருளாதார வளர்ச்சியில் பெங்களூர் மிக வேகமாக முன்னேறினாலும், போக்குவரத்து நெரிசல் எதிர்காலத்தில் பெங்களூரின் வளர்ச்சிக்கு பெரும் பிரச்னையை தரலாம். ஆனால், தமிழகத்தில் ஆங்கிலேயர் துவங்கி தொடர்ந்து ஆட்சியாளர்களின் தொலைநோக்கு திட்டங்கள் காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் சிறந்த போக்குவரத்து கட்டமைப்பை பெற்றிருக்கின்றன.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

பெங்களூரை ஒப்பிடும்போது சென்னை போக்குவரத்து கட்டமைப்பில் மிக சிறந்த மாநகரம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சென்னை போக்குவரத்தின் முதுகெலும்பாக இருப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

நாட்டின் மிக பழமையான புறநகர் போக்குவரத்து ரயில் சேவைகளில் ஒன்றாகவும் இருக்கிறது. தற்போது சென்னையில் 900 கிமீ தூரத்திற்கான புறநகர் மின்சார ரயில் கட்டமைப்பு உள்ளது. இதில், 286 கிமீ தூரத்திற்கு இரு வழித்தடமாக அமைந்துள்ளது. இதனால், மிக மிக விரைவான போக்குவரத்து வசதியை பெற முடிகிறது.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

கடற்கரை - தாம்பரம் இடையிலான தத்தில் 250 மின்சார ரயில் சேவைகளும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையிலான தடத்தில் 240 ரயில் சேவைகளும், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 90 ரயில் சேவைகளும் நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

இதனால், சென்னைக்குள் வசிப்போர் மட்டுமின்றி, சென்னையை சுற்றியுள்ள வெளிமாவட்ட மக்களும் வேலை மற்றும் பணி நிமித்தமாக சென்னை நகருக்குள் மிக எளிதாக வந்து செல்ல உதவுகிறது.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

குறிப்பாக, சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கு கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், செங்கல்பட்டு வழித்தடங்களில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் மின்சார ரயில் மூலமாக குறித்த நேரத்தில் அலுவலகத்தை வந்துசேர்ந்துவிட முடிகிறது. கூட்ட நெரிசல் இருந்தாலும், குறித்த நேரத்தில் சென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை முக்கிய விஷயமாக பார்க்க முடியும்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

மின்சார ரயில்களில் கட்டணம் மிக குறைவாக இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். இது நடுத்தர, சமானிய மக்களுக்கும் பாக்கெட்டை பதம் பார்க்காமல் இருக்கிறது. சென்னைக்குள் முண்டியடித்து இடம் வாங்குவதைவிட்டு புறநகர் பகுதிகளில் தோதான விலையில் இடத்தை வாங்கி வீடு கட்டி செட்டிலாக வாய்ப்பை இந்த மின்சார ரயில்கள் தருகின்றன.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

இதனால், சென்னையின் விஸ்தீரணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், போக்குவரத்துக்காக செலவழிப்பதில் சென்னை மிக சிறந்த நகரமாக கூற முடியும்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

அடுத்து, சாலை கட்டமைப்பு வசதிகளிலும் சென்னையே சிறந்ததாக உள்ளது. பெங்களூரில் வெளிவட்டச் சாலைகள், பாலங்கள், விரைவு சாலைகள் என பல்வேறு சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், அதனால் போதிய பலன் கிட்டவில்லை என்பது தினசரி காணும் விஷயமாகவே கூற முடியும்.

Image Courtesy: Pratik Gupte

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

ஆனால், சென்னையில் பரபரப்பு மிகுந்த வேளைகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருந்தாலும், பெங்களூரை ஒப்பிடும்போது பன்மடங்கு மேல் என்றே சொல்லலாம். பெங்களூரில் சிக்னல்களின் எண்ணிக்கையும், நிற்பதற்கான கால அளவும் வாகன ஓட்டிகளை மிரள வைக்கிறது. அதுவும் புதிதாக வருபவர்கள் இதனை சகித்து சமரசம் செய்து கொள்வதற்கே பல மாதங்கள் தேவைப்படும்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

சென்னையில் சாலைகள் போதுமான அளவு அகலமாக இருப்பதுடன், மேலும் விஸ்தீரணப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை பல முக்கிய சாலைகள் பெற்றிருக்கின்றன. எனவே, போக்குவரத்து தேவைக்கு தக்கவாறு விரிவுப்படுத்தவும் முடியும். மெட்ரோ ரயில் பணியால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டாலும், ஆனால் பெரிய சிரமத்தை சந்திக்கவில்லை.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் பெங்களூர் வாசிகளுக்கு சில பகுதிகளில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் கடும் சிரமத்தை தினசரி வாழ்வில் கொண்டு வந்துள்ளது. அடுத்த கட்ட மெட்ரோ ரயில் பணிகளின்போது இது மேலும் அதிகரிக்கும்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

பெங்களூர் மாநகரின் முக்கிய பொதுபோக்குவரத்து மாநகர பேருந்துகள்தான். ஆனால், மாநகர பஸ்களில் அலுவலகம் சென்றுவந்தால் பல மணிநேரத்தை அதிலேயே செலிவிட வேண்டியிருக்கும். இதனால், தனிநபர் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக உயர்ந்து விட்டது. போக்குவரத்து நெரிசல் மட்டுமில்லாமல், அதிலிருந்து வரும் நச்சு புகையாலும் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

ஆட்டோரிக்ஷாக்கள், வாடகை டாக்சிகள் இருந்தாலும், அது நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கான போக்குவரத்து சாதனமாக இல்லை. ஆனால், சென்னையில் ஷேர் ஆட்டோ மற்றும் பஸ்களில் கட்டணம் தாக்குப்பிடிக்க கூடிய அளவிலேயே இருப்பது ஆறுதல். நிச்சயம் இதுவும் முக்கிய விஷயம்தான்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களின் போக்குவரத்து குறித்து Numbeo தளம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் வேலை அல்லது பள்ளிக்கு செல்வதற்கு பொதுபோக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவதில் சென்னை முன்னிலை வகிக்கிறது.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

அதாவது, மாநகர பஸ்களை பயன்படுத்துவோர் சென்னையில் 16.52 சதவீதமாகவும், பெங்களூரில் 11.11 சதவீதமாகவும் உள்ளது. சென்னையில் அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்ல கார்களை பயன்படுத்துவோர் 33.04 சதவீதமாகவும், பெங்களூரில் 41.41 சதவீதமாகவும் உள்ளனர். இதேநிலைதான் இருசக்கர வாகன பயன்பாட்டிலும் பெங்களூர் முன்னிலை வகிக்கிறது.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

புறநகர் மின்சார ரயில், பறக்கும் ரயில், மாநகர பஸ்கள் மட்டுமின்றி, இப்போது மெட்ரோ ரயில்களும் சென்னை போக்குவரத்து கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் அம்சமாக இருக்கிறது. மேலும், மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படும்போது சென்னை போக்குவரத்து கட்டமைப்பு இந்தியாவிலேயே சிறந்த ஒன்றாக இருக்கும்.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக விளங்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விழாக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

ஆந்திரா செல்லும் பேருந்துகளுக்காக மாதவரத்தில் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், பெருங்களத்தூரிலும் ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

போக்குவரத்து கட்டமைப்பில் சென்னையை ஒருகாலத்திலும் பெங்களூர் விஞ்ச முடியாது!

சென்னையை தவிர்த்து, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வதற்கும் பூகோள ரீதியில் சாதகமான இடத்தில் சென்னை அமைந்துள்ளது. உதாரணத்திற்கு சென்னையிலிருந்து தலைநகர் டெல்லிக்கு ரயிலில் செல்வதற்கும், பெங்களூரிலிருந்து செல்வதற்கும் பயண நேரத்தில் அதிக வித்தியாசம் உண்டு. அதேபோன்றே, விமானப் பயண நேரத்திலும் அதிக வித்தியாசம் உண்டு. துறைமுக வசதியை பெற்றிருப்பதும் சென்னைக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai Vs Bangalore: Which city is better in Transport System?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X