இந்தியாவிலேயே ஒரேயொரு கார் ஷோரூம் மட்டுமே இருக்கு... மும்பையில் மாஸ் காட்டிய சென்னை இளம் மருத்துவர்!

மெக்லாரன் (McLaren) நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) இந்தியாவில் தற்போதைக்கு வெறும் ஒன்றே ஒன்று மட்டுமே செயல்படுகிறது. மும்பையில் அந்த ஷோரூம் செயல்படுவதால், இந்தியாவில் மெக்லாரன் காரை வாங்க விரும்புபவர்கள் மும்பைக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. இந்த வகையில், சென்னையை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் விலையுயர்ந்த மெக்லாரன் கார் ஒன்றை வாங்குவதற்காக மும்பைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். யார் அவர் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மெக்லாரன் கார்களுக்கு உலகம் முழுவதுமே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. மெக்லாரன் காரை வாங்க முடியாவிடினும், வாழ்நாளில் ஒரு மெக்லாரன் காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என பலர் கனவு கொண்டுள்ளனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் மெக்லாரன் கார் ஒன்றை வாங்க வேண்டும் என கனவோடு இருந்து, தற்போது அந்த கனவை நிஜமாக்கி கொண்டுள்ளார்.

chennai young doctor bought mclaren 750s spider car

இதுதொடர்பான விபரங்கள் மும்பையில் செயல்படும் அதிகாரப்பூர்வ மெக்லாரன் டீலர்ஷிப் ஷோரூமின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த இளம் சென்னை மருத்துவரின் பெயர், நிகில் (Nikhil) ஆகும். ரேடியாலஜியில் டாக்டர் பெற்றவரான நிகில் விளையாட்டு துறை மற்றும் ஆட்டோமொபைல் துறையிலும் கைத்தேர்ந்தவராக விளங்குகிறார்.

இவர் புதியதாக வாங்கியிருப்பது மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் (750S Spider) என்கிற சூப்பர் கார் ஆகும். சுமார் ரூ.5.9 கோடி மதிப்பிலான இந்த மெக்லாரன் சூப்பர் காரை மனைவி மற்றும் கைக் குழந்தை உடன் மும்பையில் உள்ள மெக்லாரன் ஷோரூமுக்கு சென்று மருத்துவர் நிகில் டெலிவிரி பெற்றுள்ளார்.

chennai young doctor bought mclaren 750s spider car

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்த மெக்லாரன் நிறுவனம் இதுவரையில் நம் நாட்டில் திறந்துள்ள ஒரேயொரு ஷோரூம் மும்பையில் ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், இதனாலேயே மெக்லாரன் காரை வாங்க விரும்புபவர்களுக்கு மும்பைக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கும் இருக்கும் நிலையில், அதன்படி சென்னை மருத்துவர் நிகிலும் மும்பை ஷோரூமுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

மருத்துவர் நிகில் வாங்கியிருப்பது அபிஸ் கருப்பு நிறத்திலான மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் கார் ஆகும். ஷோரூமுக்கு சென்றதும், 750எஸ் ஸ்பைடர் காரை எவ்வாறு எல்லாம் தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என நிகிலிடம் திரைகள் மூலமாக காட்டப்பட்டு உள்ளது. மருத்துவர் நிகில் அவற்றுள் தனது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ததற்கு பிறகு, ஆவணங்களை சரிபார்க்கும் மற்றும் கையெழுத்திடும் பணிகள் துவங்கப்பட்டன.

chennai young doctor bought mclaren 750s spider car

பின்னர், ஷோரூமில் கேக் வெட்டி கொண்டாடி மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் காரை மருத்துவர் நிகில் டெலிவிரி பெற்றுள்ளார். டெலிவிரி எடுத்த பின்னர், ஷோரூமில் இருந்து காரை நிகில் தான் மனைவி மற்றும் கைக்குழந்தையை அமர வைத்து ஓட்டிச் சென்றுள்ளார். மெக்லாரன் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 2023ஆம் ஆண்டில் நுழைந்தது.

மருத்துவர் நிகில் வாங்கியிருக்கும் 750எஸ் கார் கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 750எஸ் ஆனது உலகளவில் பிரபலமான மெக்லாரன் 720எஸ் காரின் பரிணாம வளர்ச்சியாக உருவாக்கப்பட்டது. 720எஸ் கார் உடன் ஒப்பிடுகையில், 750எஸ் காரில் புதுமையான டிசைனில் பம்பர் மற்றும் பெரிய அளவிலான ஸ்பிளிட்டர் (Slitter) உடன் புதிய முன்பக்கம் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எங்களுக்கு தெரிந்தவரையில், சென்னையின் முதல் மெக்லாரன் 750எஸ் இதுதான். இந்திய சாலைகளில் பல மெக்லாரன் கார்களை பார்த்துள்ளோம். ஆனால் அவற்றில் பெரும்பாலும் கார்களில் துபாய் நம்பர் பிளேட் (Number Plate) பொருத்தப்பட்டு இருப்பதை தான் பார்த்து இருக்கிறோம். ஆனால், மருத்துவர் நிகிலின் இந்த மெக்லாரன் கார் இந்தியாவின் அதுவும் சென்னை மாநகர நம்பர் பிளேட் உடன் இயங்க உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 24, 2025, 23:59 [IST]
English summary
Chennai young doctor bought mclaren 750s spider car in mumbai check all details here
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X