சுஸுகி ஜிம்னியை அழகுப்படுத்த 15லட்ச ரூபாயை வாரி இறைத்த தமிழ் பேசும் இளைஞர்.. சென்னையில இப்படி ஒரு கார் காதலரா!

மஹிந்திரா தார் எஸ்யூவி கார் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மாருதி சுஸுகியின் தயாரிப்பே ஜிம்னி ஆகும். இந்த காரையே சென்னையைச் சேர்ந்த ஓர் இளைஞர் மிகவும் விலை உயர்ந்த கார் அலங்காரப் பொருட்களைக் கொண்டு அலங்கரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களுக்கு விருந்தளிக்கும் இந்த காரை நடப்பாண்டிலேயே மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்தது. தற்போது 4X4 எஸ்யூவி காராக மட்டுமே சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், மஹிந்திரா தார் மூன்று கதவுகள் கொண்ட காராக மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற சூழலில், மாருதி சுஸுகி அதன் ஜிம்னியை ஐந்துக் கதவுகள் கொண்ட கார் மாடலாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Jimny owner modifies

இத்தகைய சூப்பரான கார் மாடலுக்கு சென்னையைச் சேர்ந்த ஓர் இளைஞர் கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கின்றார். சாதாரணமாக அல்ல காரின் விலையையே மிஞ்சும் அளவிற்கு பெரும் தொகை சொலவில் அந்த காரை அவர் அலங்கரித்திருக்கின்றார். தார் காரை காட்டிலும் ஜிம்னி எடைக் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலேயே தான் வாங்கியதாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.

மேலும், இந்த காரை வாங்கிய பின்னர் அவர் ஸ்டேஜ் 2 ட்யூனை எஞ்சினில் செய்திருக்கின்றார். இதன் அடிப்படையில், முழு எக்சாஸ்ட் சிஸ்டமும் மாற்றப்பட்டு இருக்கின்றது. இத்துடன் பிஎண்சி கோல்டு ஏர் இன்டேக், ஸ்நோர்கல் ஆகியவை எஞ்சினின் சிறந்த செயல்பாட்டிற்காக சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

Jimny interior modified

இதுதவிர, காரின் பான்னெட்டை சுலபமாக ஏற்றி, இறக்குவதற்காக அதில் ஹைட்ராலிக் ஸ்ட்ரட்டுகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டிக்காக பானெட் மற்றும் மற்ற பாடி பேனல்களை அவர் இன்சுலேட் செய்திருக்கின்றார். இதுதவிர, தோற்றத்தை கவர்ச்சியானதாக மாற்றும் வேலைகளையும் அவர் செய்திருக்கின்றார்.

அந்தவகையில், காரில் இருந்த ஸ்டாக் க்ரில் மற்றும் லைட்டுகள் என பலவற்றை அவர் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய பாடி பேனல்கள் மற்றும் லைட்டுகளை உள்ளிட்டவற்றை சேர்த்து இருக்கின்றார். குறிப்பாக, புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய எல்இடி டிஆர்எல்கள் காருக்கு முற்றிலும் தனித்துவமான மற்றும் அழகிய தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Jimny rear seat

அதேவேளையில், பம்பர் மற்றும் பனி மின் விளக்குகள் ஆகியவை மாற்றப்படாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, கரடு-முரடான மற்றும் சகதி நிறைந்த சாலையைச் சமாளிக்கும் திறன் கொண்ட கொழு-கொழுத்த டயர்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புதிய ரிம்முடனேயே இந்த வீல் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, ஸ்டாக் சஸ்பென்ஷனும் தற்போது மாற்றப்பட்டு இருக்கின்றன. புதிய அயர்ன்மேன் 4X4 சஸ்பென்ஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகப்படுத்த செய்திருக்கின்றது. இதன் வாயிலாக இந்த காருக்கு இன்னும் மோசமான ஆஃப்-ரோடை சமாளிக்கும் திறன் கிடைத்திருக்கின்றது. காரின் பின்பக்கத்தில் சிறிய ஏணியையும் இந்த சென்னை வாசி சேர்த்திருக்கின்றார்.

Jimny engine modified

மேலும், பென்ஸ் ஜி-வேகன் சொகுசு கார் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைப் போல அழகிய எல்இடி டெயில் லைட்டையும் இந்த காரில் அவர் சேர்த்திருக்கின்றார். ஆஃப்-ரோடு பயணங்களுக்கு அதிகம் செல்லக் கூடிய நபர் இவர் என்பதால் இத்தகைய அம்சங்களை அவர் மாருதி சுஸுகி ஜிம்னி காரில் சேர்த்திருக்கின்றார்.

வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்பக்கத்திலும் சில மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார். அந்தவகையில், முழுக கருப்பு நிறத்தில் இருந்த காரின் உட்பகுதியை அவர் தற்போது ஆலிவ் கிரீன் நிறத்திற்கு மாற்றி இருக்கின்றார். இதுதவிர, காரின் டேஷ்போர்டு, டோர் பேட்கள், ஸ்டியரிங் வீல் மற்றும் இருக்கை கவர்கள் உள்ளிட்டவற்றையும் அவர் மாற்றி இருக்கின்றார்.

Modified jimny

இத்துடன், ஸ்பீக்கர் சிஸ்டத்தை அவர் அப்கிரேட் செய்திருக்கின்றார். புதிதாக சப்-ஊஃபர் பூட்டில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரின் ஒரிஜினல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் தற்போது மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் சேர்த்து அவர் இதுவரை ரூ. 15 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதில் நான்கு லட்ச ரூபாய் எஞ்ஜினின் திறனை அதிகரிக்கச் செய்வதற்காகவும், மற்றுமொரு நான்கு லட்ச ரூபாயை காரின் இன்டீரியரை மாற்றியமைக்கவும் அவர் செலவு செய்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மீதமுள்ள 7 லட்ச ரூபாயே மற்ற மாற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மாபெரும் செலவினாலேயே புதிய ஜிம்னி தனித்துவமான ஓர் கார் மாடலாக மாறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிம்னி காருக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், தார் காருக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைபோல அல்ல. இந்த காருக்கு ஜிம்னியைக் காட்டிலும இரு மடங்கு அதிக வரவேற்பே இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பன்முக எஞ்ஜின் தேர்வு மற்றும் பிரமாண்ட தோற்றம் காரணமாக இந்த காரை இந்தியர்கள் விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 12:17 [IST]
English summary
Chennai youth spends rs 15 lakh to modify maruti jimny
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X