சென்னை மக்கள், மாணவர்களுக்கு "இனிப்பான செய்தி" இனிமெ லைசென்ஸ் எடுக்க லீவு போட வேணாம்!

சென்னையில் வேலை பார்க்கும் மக்கள் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல லீவு போட முடியாமல் தவித்து வந்த நிலையில் தமிழக அரசு சென்னையில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் சென்னையில் உள்ள வேலை பார்க்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் குஷியில் உள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் மாநில அரசுகளால் நடத்தப்படும் போக்குவரத்து துறை அலுவலகங்களில் தான் பழகுநர் உரிமம், ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு, வாகனத்தை புதுப்பித்ததற்கான சான்று, வாகனத்தின் பெயர் மாற்றம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் வாகன விபத்துக்கான ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

chennai rto office saturday working

தமிழகத்திலும் இப்படியாக போக்குவரத்து துறையின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இந்த அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் இருந்தது. இது போக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அரசு அவ்வப்போது அறிவிக்கும் உள்ளூர் விடுமுறை நாட்களில் இந்த அலுவலகம் செயல்படாமல் இருந்து வந்தது.

திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வேலை நாட்கள் என்பதால் பணிக்கு செல்பவர்கள், மாணவர்கள் என பலர் பழகுநர் உரிமை மற்றும் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்காக லீவு போட்டுவிட்டு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. பலர் இதன் காரணமாகவே ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் எடுக்காமலும் போக்குவரத்து துறையில் செய்ய வேண்டிய மற்ற பணிகளை செய்யாமலும் இருந்து வருகின்றனர்.

இதனால் மக்கள் மத்தியில் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சென்னையில் உள்ள போக்குவரத்து அலுவலகங்கள் அனைத்தும் இனி சனிக்கிழமைகளிலும் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனால் வேலைக்கு செல்பவர்கள் மாணவர்கள் இனி லீவு போடாமல் அவர்களுக்கு லீவு இருக்கும் நாட்களில் சனிக்கிழமையாக பார்த்து நேரில் வந்து அவர்களது லைசென்ஸ் மற்றும் மற்ற பணிகளை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்த சனிக்கிழமையில் வழக்கமாக போக்குவரத்து துறை அலுவலகத்தில் நடக்கும் அனைத்து விதமான பணிகளும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருவர் லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்றால் நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து பழகுநர் உரிம முதலில் பெற வேண்டும். பழகுநர் உரிமம் பெற்ற குறிப்பிட்ட நாளுக்குப் பிறகுதான் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்ததும் வாகனம் ஓட்டுவதற்கு பழகிவிட்டு சோதனைக்காக நேரில் வர வேண்டும்.

நேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் வாகனம் ஓட்டி காண்பிக்க வேண்டும் அந்த சோதனையில் அவர் பாஸ் ஆனால் மட்டுமே அவருக்கு லைசென்ஸ் வழங்கப்படும். அதில் அவர் தோல்வி அடைந்தால் மீண்டும் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். பாஸ் ஆகிவிட்டால் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அவர் கையில் புதிய ஓட்டுநர் உரிமம் வந்துவிடும்.

தினமும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த போக்குவரத்து துறை அலுவலகத்தை பயன்படுத்தி ஓட்டுனர் உரிமம் பெறுவது பெயர் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு வருகின்றனர். இந்த அலுவலகம் இனி சனிக்கிழமையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் குஷியில் உள்ளனர்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் தற்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒரு விஷயம் தான். அதே நேரம் மக்கள் இந்த சேவையை அதிகம் விடுமுறை நாட்களில் தான் பயன்படுத்த விரும்புகின்றனர் இதை அரசு உணர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கான விடுமுறை நாளை ஞாயிற்றுக்கிழமை அல்லாமல் வேறு நாட்களில் மாற்றி வைத்தால் மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்

More from DriveSpark

Article Published On: Thursday, July 13, 2023, 14:38 [IST]
English summary
Chennais regional transport offices will operate on saturdays for enhanced convenience
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+