15 வருசம் ஆச்சு 20,000 கி.மீ கூட ஓடல! இந்த காரை ஸ்கிராப்பிற்கு ஏன் போடனும்?
டில்லியில் பழைய கார்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட கார் ஒன்றை ஒருவர் மிக குறைவாக பயன்படுத்தி தற்போது உள்ள மாசு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கார் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் டில்லி பகுதிகளில் மாசுவை கட்டுப்படுத்த வாகன பயன்பாட்டில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வாகனங்களால் ஏற்படும் மாசு மிக குறையும் என்பதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பழைய கார்களை டில்லி பகுதியில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 ஆண்டுகள் பழைய டீசல்கள் மற்றும் 15ஆண்டுள் பழைய பெட்ரோல் கார்கள் பயன்படுத்த தடை விதிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் டில்லி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பெற்றோரின் வாகனம் 15 ஆண்டுகள் பழைய வாகனம் என்றாலும் மிக குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது மாசு சான்றும் பெற்றுள்ளதாகவும் அதை ஏன் பயன்படுத்த முடியாது என கேள்வி எழுப்பி அந்த வாகனத்தின் மாசு சான்றிதழையும் பதிவிட்டுள்ளர்.
எக்ஸ் தளத்தில் அனுராதா திவாரி என்ற பெயரில் இருக்கும் கணக்கிலிருந்து இந்த பதிவு பெறப்பட்டுள்ளது. அதில் அவர் "எனது பெற்றோருடைய கார் 15 ஆண்டுகள் பழையது. இது 20 ஆயிரம் கி.மீ கூட இயங்கவில்லை. தற்போதும் புதிய கார் போல இயங்கி வருகிறது.

இந்த காரின் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யவில்லை. காருக்கான மாசு சான்றிதழ் வேறு சரியாக இருக்கிறது. ஆனால் அரசு திட்டத்தின்படி இந்த காரை ஸ்கிராப் செய்ய வேண்டும். இந்த கார் வாங்கும் போது 30-40 சதவீதம் வரி செலுத்தியும் இந்த காரை பெட்ரோல் போட எடுத்து சென்றால் வாகனத்தை பறிமுதல் செய்து விடுவார்கள். இந்த முறை மிடில் கிளாஸ் மக்களை எப்பொழுதும் கடனிலேயே வைத்திருப்பதற்கான வழி" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் இணைத்துள்ள புகைப்படத்தில் செர்வலேட் நிறுவனத்தின் ஃபீட் காரின் புகைப்படத்துடன் கூடிய ஒரு வாகன மாசு சான்றிதழ் இருக்கிறது. இதில் வாகனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே மாசுவை வெளியற்றுவதாக சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில் இவர் ஏன் வாகனத்தை ஸ்கிராப் செய்ய வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படியாக ஒரு சிலர் காரை பராமரித்திருந்தாலும் பெரும்பாலான கார்கள் பழைய கார்களாக இருந்தால் அதிகம் மாசுவை வெளியிடுகிறது. இதனால் தான் அரசு மாசு ஏற்படுத்தும் காரை பயன்படுத்த விடாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற சில வாகன உரிமையாளர்களுக்கு விதி விலக்குகளை வழங்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் வாகனங்களுக்கு 10-15 ஆண்டுகள் ஆயுளாக இருந்தாலும் சிலர் சிறப்பாக பராமரிப்பதாலும், குறைவாக பயன்படுத்துவதாலும் வாகனம் தொடர்ந்து இயங்கும் தன்மையில் இருக்கலாம் அவர்களுக்கு விதி விலக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









