மோசடியில் ரூ.21.6 கோடி கிடைச்சதும் வாங்கியது இதைதான்! லக்கி பாஸ்கர் படத்தை விஞ்சிய இளைஞர்!!

லக்கி பாஸ்கர் (Lucky Baskar), நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan)-இன் நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்த இந்த திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படி பார்க்காதவர்கள் ஒருமுறை படத்தை பாருங்கள், நான் சொல்லப்போகும் இந்த செய்தி இன்னும் நன்றாக புரியும். இந்த படத்தில் காட்டப்படும் மோசடிகள் நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும். நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகிற விஷயமும் மும்பைக்கு அருகில் உள்ள சத்திரபதி சாம்பாஜிநகர் (Chhatrapati Sambhajinagar) என்கிற நகரத்தில் நடந்தது ஆகும்.

லக்கி பாஸ்கரின் துல்கர் சல்மானுக்கு இணையாக சுமார் ரூ.21.6 கோடியை 23 வயதான இளைஞர் ஒருவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அடித்து சென்றுள்ளார். துல்கர் சல்மான் ஆவது ரூ.100 கோடியை மோசடி செய்ய பல்வேறு விஷயங்களில் பல மாதங்களாக ஈடுப்பட்டார், ஆனால் இந்த 23 வயது இளைஞர் சிம்பிளாக ஒரு எழுத்தை மாற்றி ரூ.21.6 கோடியை மோசடி செய்துள்ளார்.

chhatrapati sambhajinagar scam accused absconding

ஹர்ஷல் குமார் கேஷிர்சாகர் (Harshal Kumar Kshirsagar) இதுதான் அவரது பெயர். மஹாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் உதவியுடன் விளையாட்டு சம்பந்தமான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹர்ஷல் வேலை பார்க்கிறார். அவரது மாத சம்பளம் வெறும் ரூ.13,000 மட்டும் தான். ஆனால், இரு விலையுயர்ந்த கார்களையும், ஒரு சூப்பர் பைக்கையும் வைத்துள்ளார். ரூ.21.6 கோடியை மோசடி செய்தவரால் இதெல்லாம் வாங்க முடியாதா என்ன...!

ஆனால், இதற்கெல்லாம் அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் இ-மெயில் ஐடி (e-Mail ID)-இல் ஒரேயொரு எழுத்தை மாற்றினார். அதன் மூலமாக நிறுவனத்தை பற்றிய எல்லா விபரங்களையும் பெற்றுக் கொண்ட ஹர்ஷல், வங்கி கணக்கிலும் கை வைக்க ஆரம்பித்தார். நிறுவனத்தின் இணைய வங்கி (Internet Banking) கணக்கிற்குள் ஒடிபி (OTP)-கள் மூலம் நுழைந்தார்.

அப்புறம் என்ன... சிறுக சிறுக பணத்தை எடுக்க ஆரம்பித்தார். இதனை பல மாதங்களுக்கு அந்த தனியார் நிறுவனம் கண்டுப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், மோசடி நடந்திருப்பதே, நிறுவனம் நஷ்டத்தில் சென்றுக் கொண்டிருப்பதை உணர்ந்த பின்புதான் கண்டுப்பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் இ-மெயில் ஐடியை மாற்றுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக்கு ஹர்ஷல் தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து மாற்றியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 1இல் இருந்து டிசம்பர் 7ஆம் தேதி வரையில், அந்த நிறுவனத்தின் வங்கியில் இருந்து 13 வெவ்வேறு விதமான வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். போலீசார் தேடுவது தெரிந்ததும் ஹர்ஷல் குமார் கேஷிர்சாகர் தலைமறைவாகி உள்ளார். இருப்பினும், அவருக்கு மோசடியில் உதவியாக இருந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

chhatrapati sambhajinagar scam accused absconding

கிடைத்த பணத்தில், ரூ.1.2 கோடியில் பி.எம்.டபிள்யூ (BMW) கார், ரூ.1.3 கோடியில் ஒரு லக்சரி எஸ்யூவி கார், ரூ.32 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ சூப்பர்பைக்கை ஹர்ஷல் வாங்கியுள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.32 லட்சத்தில் பிஎம்டபிள்யூ ஆர்18 மற்றும் எம்1000 ஆர் சூப்பர் பைக்குகள் கிடைக்கின்றன. ரூ.1.2 லட்சத்தில் பிஎம்டபிள்யூ ஐ5 காரும், ஐ.எக்ஸ் என்கிற எலக்ட்ரிக் காரும் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லக்கி பாஸ்கர் படம் பார்த்துதான் ஹர்ஷல் குமார் கேஷிர்சாகர் இவ்வாறு செய்துள்ளார் என சொல்ல முடியாது. ஏனெனில், படம் வெளியாகுவதற்கு 1 வருடத்திற்கு முன்னரே இந்த செயலில் அவர் ஈடுப்பட்டுள்ளார். ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஹர்ஷலுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மேல் கூடுதல் ஈர்ப்பு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 30, 2024, 15:09 [IST]
English summary
Chhatrapati sambhajinagar scam 23 year old young man absconding
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+