Police Inspector செய்யும் காரியமா இது? வைரலாகிய வீடியோ... அதிரடியாக சஸ்பெண்ட்!!
பணியிட மாற்றத்தை அலங்கரிக்கப்பட்ட டாடா ஹெரியர் காரில் விமர்சையாக கொண்டாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். யார் அந்த இன்ஸ்பெக்டர்? எதற்காக, எப்படி மேலதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
முக்கிய பிரமுகர்களும், விஐபிகளும் வாகனங்களில் ஊர்வலமாக செல்வதை நமது நாட்டில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். அத்தகைய நிகழ்வுகளை பார்த்து ஆசையை வளர்த்து கொள்ளும் மக்கள் பலர் தங்களது திருமணம் அல்லது பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது அவ்வாறு தெருக்களில் மெதுவாக வாகனங்களில் ஊர்வலம் செல்வதை பலமுறை இணையத்தில் பார்த்துள்ளோம். அவர்களில் பலருக்கு போலீஸார் தக்க தண்டனை வழங்கியுள்ளனர்.

ஏனெனில் இவ்வாறான செயல்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாகும். பொது சாலை ஆனது எல்லாருக்குமானது. அதில் சிலர் மட்டும் வாகனங்களை மெதுவாக இயக்கியப்படி, மேள தாளங்களுடன் ஊர்ந்து செல்வது எந்த விதத்தில் நியாயம் ஆகும்? இது எல்லாம் சினிமா மோகத்தில் மக்கள் செய்யும் அறியாமை செயல்களாகும். இத்தகைய செயல்களை படிக்காத, பகுத்தறிவு இல்லாத மக்கள் தான் செய்கின்றனர் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில், சமீபத்தில் போலீஸாரும் இத்தகைய செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது, சத்தீஸ்கர் மாநிலத்தில். இந்த மாநிலத்தில் ராஜ்னந்த்கன் நகரத்தில் உள்ள டோங்கர்கர் பகுதி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுரேந்த்ரா ஸ்வார்ன்கர். இவரது பணியிடம் வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பணியிட மாற்றம் ஆனது போலீஸார்களுக்கு சில சமயங்களில் சந்தோஷமான விஷயமாகவும், சில சமயங்களில் வருத்தமளிக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கும்.
இந்த செய்தியில் நாம் பார்க்கும் இன்ஸ்பெக்டர் சுரேந்த்ரா ஸ்வார்ன்கருக்கு இந்த பணியிட மாற்றம் மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது. டோங்கர்கர் காவல் நிலையத்தில் உள்ள மற்ற போலீஸார் தங்களது இன்ஸ்பெக்டரின் பணியிட மாற்றத்தை விமர்சையாக கொண்டாட விரும்பியுள்ளனர். மேலும் அவரது பணியிட மாற்றம் நகர மக்களுக்கும் தெரிய வேண்டும் என எண்ணியுள்ள அவர்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளை நிற டாடா ஹெரியர் காரில் இன்ஸ்பெக்டர் சுரேந்த்ரா ஸ்வார்ன்கரை நகரம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
Town inspector Surendra Swarnkar accorded pomp, band-baja farewell by thana personnel after his transfer from Dongargarh (#Chhattisgarh). He joined at Bilaspur today & was suspended by IG, owing to the "inappropriate conduct" @NewIndianXpress @santwana99 @Shahid_Faridi_ pic.twitter.com/zoMjYUJQrb
— Ejaz Kaiser (@KaiserEjaz) April 11, 2023
சட்ட ஒழுங்கையும், போக்குவரத்து விதிமுறைகளையும் காக்க வேண்டிய போலீஸாரே இவ்வாறான செயலில் ஈடுப்பட்டது மக்கள் பலரை முகம் சுளிக்க வைத்தது. இந்த சம்பவத்தில் ஹைலைட் என்னவென்றால், உடன் பங்கேற்ற பலர் இந்த நிகழ்ச்சியை தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். இந்த வீடியோ தான் இன்ஸ்பெக்டர் சுரேந்த்ரா ஸ்வார்ன்கருக்கு கடைசியில் தலைவலியாக மாறியுள்ளது.
தனது பணியிடம் மாற்றப்பட்டுள்ள பிலாஸ்புர் நகர போலீஸாராக சுரேந்த்ரா ஸ்வார்ன்கர் பதவி ஏற்று கொண்டார். கூடவே ஐஜி-யிடம் இருந்து நோட்டீஸ் ஒன்றும் வந்துள்ளது. அந்த நோட்டீஸை பிரித்து படித்து பார்த்த சுரேந்த்ராவுக்கு தூக்கி வாரி போட்டது. ஏனெனில், புதிய பணியிடத்தில் பதவியேற்று கொண்ட முதல் நாளிலேயே சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கார் ஊர்வலத்தை காரணமாக ஐஜி தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஆசை ஆசையாய் புதிய இடத்தில் பணியை ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்படுவது அரிதாக நடக்கக்கூடிய விஷயம் தான். ஆனால் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என மற்றவர்கள் கேட்க, இதுதான் காரணம் என கூறினால் சுரேந்த்ரா ஸ்வார்ன்கரை பார்த்து மற்றவர்களுக்கு சிரிப்பு தான் வரும். முகத்திற்கு நேராக சிரிக்காவிடினும், பின்னால் சிரிப்பார்கள்.


Click it and Unblock the Notifications








