உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியோட காரா இது! காரவிடுங்க ஒட்டுமொத்த இந்தியாவே நம்பர் பிளேட்ட பத்திதான் பேசுது

இந்த சமூக வலைதளம்-ன்ற ஒன்னு மட்டும் இல்லாம போயிருந்தா நமக்கு நிறைய விஷயங்கள் தெரியாமலேயே போயிருக்கும். பொது அறிவு சார்ந்த விஷயங்கள் தொடங்கி சில சுவாரஷ்ய மற்றும் பொழுதுபோக்கு தகவல்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக நம்முடைய செவிகளையும், கண்களையும் வந்து சேர்ந்துக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையிலேயே கடந்த வாரத்தில் நம்முடைய இந்தியாவின் தலைமை நீதிபதி, தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பயன்படுத்தி வரும் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்த கார் ஓர் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் தயாரிப்பு என்பதைத் தாண்டி அதில் இடம் பெற்றிருந்த நம்பர் பிளேட்டே பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.

Chandrachud car number plate

அந்த காரில் டிஎல்1 சிஜேஐ 0001 (DL1 CJI 0001) எனும் நம்பர் பிளேட்டே இடம் பெற்றிருந்தது. பொதுவாக விவிஐபி-க்கள் ஃபேன்சி நம்பர் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பயன்படுத்தும் இந்த நம்பர் பிளேட் தனித்துவமானது ஆகும்.

அவருடைய பதவியை குறிக்கக் கூடியதே இந்த நம்பர் பிளேட் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, சீஃப் ஜஸ்டிஸ் ஆஃப் இந்தியா (Chief Justice of India) என்பதன் சுருக்கெழுத்தையே (சிஜேஐ) இந்த நம்பர் பிளேட்டில் பயன்படுத்தி இருக்கின்றனர். இதுபோலவே தனித்துவமான நம்பர் பிளேட்டே இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரின் காரிலும் நம்மால் பார்க்க முடிகின்றது.

டிஎல்1 சிஇசி 0001 (DL1 CEC 0001) எனும் நம்பர் பிளேட் கொண்ட காரையே இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் பயன்படுத்தி வருகின்றார். இதில் சிஇசி என்பது சீஃப் எலெக்சன் கமிஷனர் (Chief Election Commissioner) என்பதைக் குறிக்கின்றது. இந்தியாவின் தலைமை நீதிபதி பயன்படுத்தி வரும் காரின் படம் தொழிலதிபர் லாய்டு மத்தியாஸ் என்பவரால் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஓர் பதிவெண்ணே இதுவாகும். இதுபோன்று உயர் பொருப்பில் இருப்பவர்களுக்கு அமைச்சகம், அவர்கள் இருக்கும் மாநிலம் மற்றும் பதவி ஆகியவற்றைப் பொருத்து பதிவெண்ணை வழங்க வேண்டும் என விதியைக் கொண்டிருக்கின்றது. மேலும், கடைசி எண்கள் வருடம் மற்றும் பதிவு செய்யப்படும் தேதிக்கு ஏற்ப வரிசையாக ஒதுக்கப்படும்.

Car of chief justice of india

இதன் அடிப்படையிலேயே தலைமை நீதிபதிக்கு இந்த பதிவெண் கொண்ட கார் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி 2024 ஜனவரி 1ஆம் தேதி அன்றே இந்த கார் பதிவு செய்யப்பட்டு என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே 0001 எனும் நம்பர் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே தற்செயலாக அமைந்ததாகக் கூறப்படுகின்றது.

அதேவேளையில், விமர்சகர்கள் இது தற்செயலாக நடைபெற்றதாக தெரியவில்லை. இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருப்பினும், பலர் இந்த பதிவெண்ணைப் பார்த்து பொறாமையடையவே தொடங்கி இருக்கின்றனர். இதுமாதிரியான சூப்பரான பதிவெண்ணைப் பெற வேண்டும் எனில் இந்தியாவில் பல லட்சங்களைக் கொட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், அவ்வளவு எளிதில் இதுமாதிரியான ஃபேன்சி எண்களை சாதாரண நபர்களால் பெற்றுவிட முடியாது என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இதேபோல், தலைமை நீதிபதியின் காரும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிஎல்1 சிஜேஐ 0001 எனும் பதிவெண்ணைக் கொண்டிருக்கும் அந்த கார் மெர்சிடிஸ் இ-கிளாஸ் (Mercedes E-Class) ஆகும்.

அதிக சொகுசு வசதிகளைத் தாங்கிய செடான் ரக கார் மாடல் ஆகும். இதனால் மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், வெறும் 6.1 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

இத்தகைய தரமான திறன் கொண்ட காரையே தலைமை நீதிபதி தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 75 லட்சம் தொடங்கி ரூ. 88 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஃபேன்சி நம்பர்கள் இந்தியாவின் உயர் பொருப்பில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்திய ஜனாதிபதியின் காருக்கு "0001" என்ற எண் ஒதுக்கப்பட்டது. இதுவும் இணையத்தின் வாயிலாக பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு ஆளாகியது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 20, 2024, 16:24 [IST]
English summary
Chief justice of india has fancy number plate on his mercedes e class
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+