மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடம் சிறப்பு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். இதுகுறித்த அவர் ஆன்லைன் வாயிலாக ஊடகத்திடம் கூறியதை இந்த பதிவில் காணலாம்.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

பெட்ரோல்-டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. புவி வெப்ப மயமாதல் மற்றும் காற்று மாசு ஆகியவற்றிற்கு இவையே முக்கிய காரணமாக இருக்கின்றன. மேலும், இது உயிர்களை மெல்ல மெல்ல கொள்ளும் கொடிய விஷ வாயுக்களையும் அடக்கியிருக்கின்றது. எனவேதான், சமீப காலமாக மின் வாகன ஊக்குவிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

இந்நிலையில், அதிக காற்று பிரச்னையால் சிக்கி தவித்து வரும் டெல்லியைக் காப்பாற்றும் விதமாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இதுவரை எந்தவொரு மாநில முதல்வர்களும் வழி நடத்தாத புது முயற்சிக்குள் மக்களை அழைத்திருக்கின்றார். அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக, வாகனங்களை சிக்னலில் நிற்கும்போது அனைத்து வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

இதற்கான பிரச்சாரத்தை வியாழக்கிழமை (15 அக்டோபர்) தொடங்கி வைத்தார். 'ரெட் லைட் ஆன், காடி ஆஃப்' எனும் தலைப்பில் இந்த பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்திருக்கின்றார். அதாவது, சிக்னலில் சிவப்பு நிற மின் விளக்கு காணப்பட்டால், வாகனத்தின் எஞ்ஜினை அனைத்துவிட வேண்டும் என கூறியிருக்கின்றார். 'யூத், பிரதுஷன் கே விருத்' எனும் திட்டத்தின்கீழ் இதனைத் தொடங்கி வைத்துள்ளார்.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியிருக்கும் இந்த பிரச்சாரம் நாடு முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அதிக காற்று மாசை சந்திக்கும் நகரங்களில் டெல்லிக்கே முதலிடம். அதேசமயம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களும் அதிகளவில் காற்று மாசுபாட்டில் சிக்கித் தவித்து வருகின்றன.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக 'சிவப்பு சிக்னல் ஆன், வாகனம் ஆஃப்' பிரசாரத்தைத் தொடங்கி வைத்திருக்கின்றார். இதுகுறித்து ஆன்லைன் வாயிலாக ஊடக சந்திப்பில் பேசிய அவர், "நகரத்தில் கோடிக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான வாகனங்கள் நிச்சயம் சாலையில் பயணிக்கின்றன.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

அவ்வாறு பயணிக்கும் வாகனங்கள் சிக்னலில் நிற்கும்போது ஆஃப் செய்யப்படாமல், ஆன் செய்தவாறே நிற்கின்றன. இதனால், காற்று மாசின் அளவு அதிகரிக்கின்றது. இதுகுறித்து வல்லுநர்கள் தெரிவிக்கையில், சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஓர் வாகனம் சிக்னலில் எஞ்ஜினை ஆன் செய்தவாறு நிற்குமேயானால், அது குறைந்தது 200 மிலி வரை எரிபொருளை உறிஞ்சும். இது அதிக மாசை ஏற்படுத்தும்.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

இதுவே, தோராயமாக இந்த வாகனங்களில் 10 லட்சம் வாகனங்கள் மட்டும் சிக்னலில் எஞ்ஜினை ஆஃப் செய்து நின்றால், நுண்துகள் பிஎம்10-ஐ (PM10) 1.5 டன்னும், பிஎம் 2.5-ஐ 0.4 டன் வரையிலும் குறைக்க முடியும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதன் மூலம் காற்று மாசுபாட்டை மட்டுமின்றி உங்களின் பணத்தையும் மிச்சம் பிடிக்க முடியும்" என தெரிவித்தார்.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

காற்று மாசுபாட்டில் ஒவ்வொரு ஆண்டும் முதலிடம் பிடிக்கும் டெல்லியே இந்த ஆண்டும் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இது டெல்லி வாசிகளின் உடல் நலத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. எனவேதான் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த புதிய பிரச்சாரத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்திருக்கின்றார்.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

இதுமட்டுமின்றி, எரிபொருள் வாகன பயன்பாட்டை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதிலும் அவர் அதி-தீவிரம் காட்டி வருகின்றார். அதாவது, எரிபொருள் வாகனத்திற்கு மாற்று வாகனமாக இருக்கும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றார். இதற்காக வரி சலுகை, ஊக்கத் தொகை உள்ளிட்டவற்றை அவர் தொடர்ந்து அறிவித்து வருகின்றார்.

மக்களிடம் சிறப்பு கோரிக்கை! அதிரடி காட்டும் கெஜ்ரிவால்... ஒட்டுமொத்த இந்தியாவுமே இத ஃபாலோ பண்ணனுங்க!

இந்த நிலையிலேயே மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சிக்னலில் வாகனங்களை அனைத்து வைக்கும்படி தனது குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றார். மேலும், விவசாயக் கழிவுகளை அகற்ற பயோ-டிகம்போசரைப் பயன்படுத்தவும் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதவிர, மரம் வளர்த்தல், பழைய வயதான வாகன பயன்பாட்டை ஒழித்தல் உள்ளிட்ட முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chief Minister Arvind Kejriwal Urges People To Turn Off Vehicle Engine While Waiting At Traffic Signal. Read In Tamil.
Story first published: Thursday, October 15, 2020, 19:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X